06-06-2005, 03:14 AM
kuruvikal Wrote:உங்கள் பெண்களுக்கு சிங்கிள் பாலியல் உச்சநிலை வேண்டுமா இல்லை மல்ரிபிள் பாலியல் உச்ச நிலை வேண்டுமா என்பதை வெறும் கட்டுரைகள் இல்ல பெண்ணிய விடுதலைக் கோசம் தீர்மானிக்க முடியாது...! இதுதான் பெண்ணியம் என்றால் அதைத் தெளிவாகச் சொல்லுறது... பெண்களின் பாலியல் வக்கிரத்தைத் தீர்க்க வழி தேடுதல் பெண்ணியம் என்று....! அதற்குள் ஆயிரம் மழுப்பல்கள் அவசியமில்லை...!
பாலியல் இன்பத்தை ஒரு பெண் அனுபவிப்பது பாலியல் வக்கிரமா? இவ்வளவு பிற்போக்குவாதியா நீங்கள்?
kuruvikal Wrote:ஓகசம் என்பது உடல் உளம் சார்ந்து நிகழும் விடயங்கள்... சில பெண்களுக்கு மல்ரிபிள் ஓகசம் வர வாய்ப்பிருக்காது..இல்ல உளத்தளவில் விருப்பம் இருக்காது...அப்படியான பெண்ணிடம் மல்ரிபிள் ஓகசத்தை எப்படி எதிர்பார்ப்பது...! ஒரு ஆண் மல்ரிபிள் ஓகசத்தை பெண்ணிடத்தில் தூண்ட குறித்த பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையேயான உளப் புரிந்துணர்வு அவசியம்...அதைக் கணவன் மனைவி பேசித் தீர்க்கட்டும்...அதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அவர்கள்...! மல்ரிபிள் ஓகசம் வேண்டும் என்பதற்காக கணவனை விட்டுக் கள்ளக் கலவிக்கா போகச் சொல்லுகிறீர்கள்...அல்லது டேற்றிங்கா போகச் சொல்லுகிறீர்களா...இல்ல லிவ்விங் ருகெதர் என்று ரெஸ்ட் பண்ணிப் பிடிக்கச் சொல்லுகிறீர்களா...???! அதுதான் பெண்கள் கேட்கும் சுதந்திரம் விடுதலையின் நோக்கமா...???!
குருவிகளே,
பாலியல் அறிவுக்குறைவான ஒரு சமுதாயத்தின் உற்பத்தியாக திரும்ப திரும்ப தங்களை அடையாளம் காட்டி கொள்கின்றீதுகளே?
பாலியல் உன்னத நிலை நீங்கள் நினைப்பது போல கணவன் மனைவி "பேசித் தீர்க்கும்" விடயம் அல்ல. அதற்கு மனித உடற்கூற்றியல், உடற்செயற்பாட்டியல் அறிவு அவசியம். ஆகவே பாலியல் கல்வி அவசியம். முதலில் தங்கள் சுகவாழ்வுக்காக ஆவது தயவு செய்து பாலியல் கல்வியில் தாங்கள் ஆர்வம் காட்ட வேண்டும். பாலியல் வெறுமை விவாகரத்துக்களுக்கும் முறிந்து போன குடும்பங்களுக்குமான காரணங்களில் முக்கியமானதொன்று.

