06-06-2005, 02:52 AM
Jude Wrote:kirubans Wrote:புலத்தில் வாழும் பெரும்பாலான தமிழர் பலர் சமூக, பொருளாராத, கல்வித் துறைகளில் முன்னேறியுள்ளனர். எனெனும் ஒரு சிறுபான்மையினர், தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்குப் பின் ஒரு கொட்டில் கட்டி ஆடு, மாடு வளர்க்கவேண்டும் என்றும் ஆசைப்படுகின்றனர். தொடர்மாடிகளில் இருக்கும் இத்தகையவர்களும் தனிவீடு வேண்டும் என்று ஆசைப்படுவதும் இதற்காகத்தான்..
90களில் நான் யாழ்ப்பாணத்தை விட்டு முதல் முதலாக கண்டியில் வேலைக்கு போன போது, நான் போன இடத்தில் சந்தித்த தமிழர்கள் 10 முதல் 20 வருடங்களாக வடக்கு கிழக்கு போகாதவர்கள். சிலர் வடக்கு கிழக்கிலேயே கால் வைக்காதவர்கள். அவர்களது பேச்சு தமிழ் முதல் கொள்கைகள் பழக்கவழக்கங்கள் எனக்கு 70களை நினைவூட்டுமளவுக்கு பழமையாக இருந்தன. மிகவும் பிற்போக்கானவர்களாக காணப்பட்டார்கள். இது தான் தமது கலாச்சாரம் என உறுதியாக நம்பினார்கள்.
சில வருடங்களுக்கு முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குறுகிய காலத்துக்கு படிப்பிக்க என ஒரு பேராசிரியர் வந்திருந்தார். அவரது மாணவர்கள் சிலர் இந்திய பெற்றோருக்கு பிறந்தவர்கள். அவர்களது கொள்கைள், பழக்கவழக்கங்கள், கருத்க்கள் என்பன அவருக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தன. காரணம், அவை ஒரு தலைமுறைக்கு பின்தங்கியனவாக இருந்தன. உதாரணமாக அவர்கள் அனைவருமே பெற்றோர் தேர்ந்தெடுப்பவர்களையே திருமணம் செய்யப்போவதாக தெரிவித்திருந்தனர். சிறந்த சைவர்களாக சுலோகங்கள் போன்றவற்றை நன்கு மனனம் செய்திருந்தனர். இந்தியாவில் படித்த இளைஞர்கள் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்வதை பிற்போக்காக கருதும் காலம் இது. அவர்கள் சமய சங்கதிகளில் பெருமளவு ஆர்வம் காட்டுவதில்லை. இவ்வாறாக வரலாற்றில் உறைந்து போன புலம் பெயர்ந்தவர்களை பற்றி பேராசிரியர் தனது அனுபவத்தை எழுதியிருந்தார். குருவிகள் தமிழ் மக்கள் மத்தியில் இப்படி வரலாற்றில் உறைந்து போனவர்கள் பற்றி ஒரு ஆய்வு செய்தால் பயனுள்ளதாக இருக்குமே?
உங்கள் இருவரினதும் பார்வையில் கலாசாரம் என்பது காட்டப்படுவது.. உங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் இதுதான் கலாசாரம் என்றால்..அதையே பின்பற்றக் கூடியவர்கள் நீங்களும் உங்கள் உதாரணங்களும்...! எங்கள் கருத்து அதுவல்ல...எங்கு ஒரு சமூகத்தின் பலமும் வளமும் நிலைக்குமோ அந்த இடத்தில் அதற்கு உகந்த காலாசார பண்பாட்டுக் கோலங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதே கருத்து...! எமது தமிழ் சமூகம் என்ற ஒன்று உலகில் நிலைக்க வேண்டின் அதற்கான கலாசார மாற்றம் என்பது வெறும் கண்ணுக்கும் கருத்துக்கும் என்ற அடிப்படையில் இல்லாமல் அறிவியல் பூர்வமானதாகவும் சமூக உறுதிப்பாட்டுக்கும் வளமிக்க அபிவிருத்திக்கும் அவசியமானதாக இருக்க வேண்டும்...! அதற்கு சமூக ஒழுக்கம் என்பது அவசியம்...! பாலியலுக்கே வாழ்வு என்ற கருத்துடன் ஒரு சமூகம் வளர்க்கப்படுமாயின்...நிச்சயம் அந்தச் சமூகத்தால் எழுவும் ஆகாது உருப்படியாக...!
தமிழர் சமூகம் வெறும் ஏட்டுக் கல்விக்கு என்று இருந்ததால்தான் ஒரு சில விஞ்ஞானிகளைத் தவிர அந்தச் சமூகம் வேறு எந்த கல்விசார் பலனையும் நேரடியாக அனுபவிக்கவில்லை பெற்ற கல்வியால் இன்று வரை....! ஒரு உருப்படியான ஆய்வைக் கூட தான் சார்ந்த சமூகத்துக்குச் செய்ததாக ஒரு ஈழத்தமிழனைக் காட்டுங்கள்...கல்விசார் வளர்ச்சி பெற்ற மேதாவிகளே...! இப்போ பெண்ணியம் பெண் விடுதலை எங்கிறீர்களே இது கூட உங்களதல்ல...எவனோ தூண்டியதைத் தூண்டிலில் கட்டி இழுக்கிறீர்கள்..இதன் விளைவுகள் உங்கள் சமூகத்துக்குத் தரவல்ல நன்மை தீமை என்ன இதை எவரும் இன்னும் சொல்லவில்லை...! சும்மா வசனம் பேசுவதால் எதுவும் உலகில் இழகுவில் சாத்தியப்பட்டதில்லை என்பதை எப்போ உணரப் போகிறீர்களோ தெரியாது..! அதே போல் மாற்றுக் கலாசார உள் வாங்கல் என்பது உங்கள் சமூகத்தைப் பலபப்டுத்தும் என்பதற்கு நீண்ட கால ரீதியில் என்ன அடிப்படையில் கணிப்பீடுகளைச் செய்து இங்கே கருத்துப் பகர்கிறீர்கள் சொல்கிறீர்களா....???! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

