06-06-2005, 02:08 AM
kirubans Wrote:புலத்தில் வாழும் பெரும்பாலான தமிழர் பலர் சமூக, பொருளாராத, கல்வித் துறைகளில் முன்னேறியுள்ளனர். எனெனும் ஒரு சிறுபான்மையினர், தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்குப் பின் ஒரு கொட்டில் கட்டி ஆடு, மாடு வளர்க்கவேண்டும் என்றும் ஆசைப்படுகின்றனர். தொடர்மாடிகளில் இருக்கும் இத்தகையவர்களும் தனிவீடு வேண்டும் என்று ஆசைப்படுவதும் இதற்காகத்தான்.
.
90களில் நான் யாழ்ப்பாணத்தை விட்டு முதல் முதலாக கண்டியில் வேலைக்கு போன போது, நான் போன இடத்தில் சந்தித்த தமிழர்கள் 10 முதல் 20 வருடங்களாக வடக்கு கிழக்கு போகாதவர்கள். சிலர் வடக்கு கிழக்கிலேயே கால் வைக்காதவர்கள். அவர்களது பேச்சு தமிழ் முதல் கொள்கைகள் பழக்கவழக்கங்கள் எனக்கு 70களை நினைவூட்டுமளவுக்கு பழமையாக இருந்தன. மிகவும் பிற்போக்கானவர்களாக காணப்பட்டார்கள். இது தான் தமது கலாச்சாரம் என உறுதியாக நம்பினார்கள்.
சில வருடங்களுக்கு முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குறுகிய காலத்துக்கு படிப்பிக்க என ஒரு பேராசிரியர் வந்திருந்தார். அவரது மாணவர்கள் சிலர் இந்திய பெற்றோருக்கு பிறந்தவர்கள். அவர்களது கொள்கைள், பழக்கவழக்கங்கள், கருத்க்கள் என்பன அவருக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தன. காரணம், அவை ஒரு தலைமுறைக்கு பின்தங்கியனவாக இருந்தன. உதாரணமாக அவர்கள் அனைவருமே பெற்றோர் தேர்ந்தெடுப்பவர்களையே திருமணம் செய்யப்போவதாக தெரிவித்திருந்தனர். சிறந்த சைவர்களாக சுலோகங்கள் போன்றவற்றை நன்கு மனனம் செய்திருந்தனர். இந்தியாவில் படித்த இளைஞர்கள் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்வதை பிற்போக்காக கருதும் காலம் இது. அவர்கள் சமய சங்கதிகளில் பெருமளவு ஆர்வம் காட்டுவதில்லை. இவ்வாறாக வரலாற்றில் உறைந்து போன புலம் பெயர்ந்தவர்களை பற்றி பேராசிரியர் தனது அனுபவத்தை எழுதியிருந்தார். குருவிகள் தமிழ் மக்கள் மத்தியில் இப்படி வரலாற்றில் உறைந்து போனவர்கள் பற்றி ஒரு ஆய்வு செய்தால் பயனுள்ளதாக இருக்குமே?

