06-06-2005, 01:48 AM
புலத்தில் வாழும் பெரும்பாலான தமிழர் பலர் சமூக, பொருளாராத, கல்வித் துறைகளில் முன்னேறியுள்ளனர். எனெனும் ஒரு சிறுபான்மையினர், தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்குப் பின் ஒரு கொட்டில் கட்டி ஆடு, மாடு வளர்க்கவேண்டும் என்றும் ஆசைப்படுகின்றனர். தொடர்மாடிகளில் இருக்கும் இத்தகையவர்களும் தனிவீடு வேண்டும் என்று ஆசைப்படுவதும் இதற்காகத்தான்.
இயங்கியல் தத்துவப்படி சமூகம், பண்பாடு, கலாச்சாரம் என்பன மாறிக்கொண்டு வருகின்றன. தாயகத்திற்குப் போகும் எவரும் இத்தகைய மாற்றங்களை அங்கும் அவதானிக்கலாம். 20 வருடங்களுக்கு முன்பு இருந்தமாதிரி தற்போது எதுவுமேயில்லை.
ஆனால் புலத்தில் 20 அல்லது 10 வருடங்களுக்கு முன்பு வந்தவர்கள், தாங்கள் வந்த காலத்தில் இருந்த சமூகம் இப்போதும் அங்கு உள்ளதாக குருட்டு நம்பிக்கை கொண்டு அத்தகைய சமூகத்தை இங்கு கட்டி எழுப்ப முற்படுகின்றனர்.
இத்தகையவர்களால் புலத்தில் வளரப்போகும் எமது வருங்காலச் சந்ததிகளுக்குப் பிரயோசனமாக எதுவுமே செய்யமுடியாது. இங்கு வளரும் குழந்தைகளுக்கு இவர்களைப் போன்றோர் காட்டுமிராண்டிகளாகத் தெரிவர் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்கள் ஊருக்குப்போனால் அங்கும் பெரிய ஏமாற்றமே கிடைக்கும். ஏனெனில் தாயகச் சமூகமும் மாறிவிட்டது.
ஆகவே இப்படியானவர்களால் இங்கும் நிம்மதியாக இருக்கமுடியாது. தாயகத்திலும் நிம்மதியாக இருக்கமுடியாது. தங்கள் வாழ்வில் நிம்மதியை இழந்த இவர்கள் எல்லோரையும் துற்றிக்கொண்டே தமது வாழ்வைக் கழிப்பர். காமாலைக் கண்கொண்டுதான் சகலவற்றையும் பார்ப்பர். இப்படியானவர்களையும் நாம் எமது சமூகத்தின் அங்கம் என்று ஏற்றுக் கொண்டு அவர்களின் உளவளத்தை விருத்தி செய்ய உசாத்துணையாக இருக்கவேண்டும்.

<b> . .</b>