06-06-2005, 01:20 AM
kuruvikal Wrote:அப்புறம் ஏதோ சுய இன்பம் எண்டீங்க...அது சுய இன்பம்...அவரவருக்கு இயல்பா அதில ஈடுபாடிருந்தா அவையவை அதைத் தேடிக் கொள்வினம்....! அது இயற்கை...! அதுக்கு எதுவும் காட்ட வேணும் என்ற அவசியமில்லை... ஆழ்ந்த நித்திரையும் அதில் வரும் கனவும் போதும்...!
குருவிகள்,
உணவு உண்ணுவதும் இயற்கை தான். நோய் வந்து குணமாவதும் இயற்கை தான்.
ஆனால் உணவு பற்றி ஆராயந்து, சத்துணவு, பல்வேறு வகையான உணவு தயாரிக்கும் முறைகள், பாண் போன்ற உணவு தயாரிக்க மா தயாரிக்கும் தொழிற்சாலைகள், அதற்கென்றே பொறியியல் துறை, இப்படியாக உணவு உண்ணுதல் என்ற இயற்கையான செயற்பாடு பற்றி விஞ்ஞானம் சிறப்பாக முன்னேறிய மனிதருக்கு வழிகாட்டி வந்திருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் மனிதர்கள் நல்ல சத்துணவுண்டு, சுகதேகிகளாக வாழ, நாட்டில் சோறும் கறியும் பாணும் உண்டு குறை வளர்ச்சியடைந்து வாழும் மக்களை படங்களை ஒப்பிட்டே வித்தியாசம் காணலாம்.
மனிதர் போய் வருவது இயற்கையான செயற்பாடு. அதற்காக தானே இரண்டு கால்கள் இருக்கின்றன? தேவைப்படுபவர்கள் போய் வர வேண்டியது தானே என்பீர்கள். போக்குவரத்தை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தவர்கள் வாகனங்களையும், விமானங்களையும், கப்பல்களையும் கட்டி அதற்கென்றே பயில விஞ்ஞான துறைகளையும் உருவாக்கியுள்ளார்கள்.
இயற்கையாக வரும் நோய்கள் பற்றி ஆராயந்து அவற்றிலிருந்து தப்பி நீணடகாலம் வாழ மருத்துவம் என்ற துறை உருவாகி இருக்கிறது.
பாலியலுக்கும் அவ்வாறாக விஞ்ஞான, மருத்துவ, கல்வியியல் துறைகள் இருக்கின்றன குருவிகள்.
<img src='http://places.mongabay.com/india/kama_sutra_carvings.jpg' border='0' alt='user posted image'>
<b>இராஜஇராஜ சோழன் காலத்து கோவில் சிற்பம்.</b>
சுயஇன்பம் பற்றிய மூடநம்பிக்கைகளாலும் அறியாமையினாலும் பலர் இவற்றை பற்றி தவாறான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். எதுமே தெரியாமலும் இருக்கிறார்கள். குறிபபாக பெண்கள் மத்தில் இது பற்றிய அறிவுக்குறைவு அதிகம். ஆகவே பாலியல் கல்வி முக்கியமானது. குறிப்பாக பெண்களுக்கு முக்கியமானது. தாங்கள் சொன்ன தூக்கத்துடன் சம்பந்தப்பட்ட சுயஇன்பம், இது பற்றிய செயற்பாடுகளில் ஒரு சிறிய பிரிவு. அது பிரிவுத்துயரால் வாடுபவர்களுக்கு (காமத்துப்பால்) போதுமான தீர்வாகாது. எது எப்படி இருப்பினும் அறிவு மக்களுக்கு முக்கியம். அது பாலியல் சம்பந்தப்பட்ட ஒரே காரணத்துக்காக மறுக்கப்படுவது பிற்போக்கானது.

