09-27-2003, 03:12 PM
நீங்கள் கூறியது உண்மைதான் குருவியண்ணை ஆனால் நான் விரும்பாதது கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா என வாதிடுவதும் அதில் கோவலனின் கற்பு பற்றி எதுவுமே கூறாமல் விடுவதும்...இறுதியாக மக்களுக்கு ஒன்றும் சொல்லாமல் விடுவதும்...
தீர்ப்பில் கற்பில் சிறந்தவள் கண்ணகி என்றால்....கணவன் விலைமாதரை தேடிப்போனாலும் பெண்கள் சும்மா பார்த்துக் கொண்டிருங்கள் என்றா சொல்கிறார்கள்?
தீர்ப்பில் கற்பில் சிறந்தவள் மாதவி என்றால்... ஒரு பெண் அடுத்தவளின் கணவரை சூறையாடவும்..விபச்சாரம் செய்யவும் அங்கீகாரம் வழங்குகிறார்களா?
கோவலன் ஒரு கேவலன் என்று தீர்ப்பு வழங்குங்கள்!!!
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி திருகத்தறித்த குறள் முக்காலத்திற்கும் பொருத்தமானதே....
இன்றைய இளைஞர் பலர் இத்தகைய இலக்கியங்களை படிப்பது குறைவு என்பது வருத்தத்திற்குரிய உண்மை. பெரும்பாலானோர் தொழிலை அடிப்படையாகக் கொண்ட படிப்பையே முன்னெடுத்துச் செல்கின்றனர். இப்பொழுது பலர் தமிழில் படிப்பதை நிறுத்திவிட்டனர். இன்று தாயகத்தில் பெற்றோர் பிள்ளைகளை வெளிநாட்டு மோகத்தில் ஆங்கிலத்தில் படிக்கவைக்கின்றனர். தமிழ் சமயம் படித்து என்ன பயன் என்று பலர் கேள்வியெழுப்புகின்றனர். இத்தகைய ஒரு நிலமை எங்களுக்கு முன் தமிழ்நாட்டில் காணப்பட்டது...இன்று தமிழ்நாட்டில் தமிழும் ஒழுக்கமும் ஊசலாடுவது பலரும் அறிந்த ரகசியம்.
தாயகத்தில் இன்று மாணவருக்கான தமிழ் இலக்கண இலக்கிய பாடங்கள் இலகுவாக்கப்பட்டுள்ளன...எழுத்துப் பிழைகளும் பெரிதாக கவனிக்கப்படுவதில்லை. சமயப் (ஒழுக்கம்) பாடமும் கவனிப்பாரற்று இருக்கிறது...
விரைவில் அழியக்கூடும் எனப்பட்டியலிடப்பட்ட மொழிகளில் தமிழும் ஒன்று!!!