06-05-2005, 08:45 PM
kirubans Wrote:யதார்த்தத்திற்கு வெளியில் இருந்து குருவி கீச்சிடுகின்றது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கீச்சிட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான், உலகம் (தமிழீழம் உட்பட) தன்பாட்டில் சரியானபாதையில் போகும். இவர்களுக்காக பின்நிற்காது.
மகளிர் விவகார அமைச்சுக்கள் சிறீலங்கா, இந்தியா, ஏன் பிரித்தானியாவில் கூட உள்ளன. அதுபோல் ஆண்கள் விவகார அமைச்சுக்கள் எந்த நாட்டிலாவது உள்ளனவா?
தமிழீழத்திலும் சரி, புலத்திலும் சரி தமிழ் பெண்கள் முன்னேறிக் கொண்டுவருகிறார்கள். இது போராட்டத்தால் விரைவாக்கப்பட்டு வருகின்றது. இதனை பொறுக்கமுடியாதவர்கள் புலம்பி எதையும் தடுக்கமுடியாது. நிலவைப் பார்த்து குரைக்கும் நாயைப் போன்றதுதான் இவர்களின் கீச்சிடலும்.
இருப்பது மகளிர் விவகார அமைச்சுக்கள்... மகளிர் விடுதலை அமைச்சுக்கள் அல்ல...! மகளிருக்கான விசேட தேவைகள்..பிரச்சனைகளை ஆராய இருக்கின்றன அந்த அமைச்சுக்கள் என்று கூறப்படுகின்றன...! அதால என்ன விவகாரம் அறியப்படுகுது எண்டது இன்று வரைக்கும் யாரும் அறியல்ல.. அறிந்து தீர்வுகள் சொன்னதாவும் தெரியல்ல...! இது உலகில் இன்னும் பெண்கள் சார்ந்து சலுகை அடிப்படையிலான தீர்வுகள் தேட பக்கச்சார்புடன் முயலப்படுகின்றமையையே காட்டுகிறது....! இதேபோல வன விலங்குகள் அமைச்சும் இருக்கு....! கால்நடை விவசாய அபிவிருத்தி அமைச்சும் இருக்கு...ஒருவேளை அவங்க பெண்களை விலங்குகளுக்க அடக்கிட்டாங்களோ தெரியல்ல... எதுக்கும் இதையிட்டு மகிழ்ச்சி கொள்ளாம...இந்த அமைச்சை மனிதவள மேம்பாட்டுக்க சேர்த்தால் நல்லது..!
உலகில் ஆண்கள் விவகாரம் என்பது எப்பவும் புறக்கணிக்கப்படும் அம்சம் அதுதான் ஆண்கள் (தந்தைமார் உள்ளடங்கலாக) தங்கள் அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று பிளேயருக்கு தூள் தூவினது..எது எப்படி இருப்பினும் ஆண்கள் தங்களுக்கு என்று தனியான அமைச்சை எப்பவும் எங்கவும் கோரப் போவதில்லை...அதை அவர்கள் மனித வளம் சார்ந்த அமைச்சுக்களுக்குள் வரையறைத்து தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடிக் கொள்வர்...! பெண்கள் தனிய அமைச்சு வைச்சு ஆலோசிக்கட்டும்...தீர்வு எனும் போது மனிதன் சமூகம் என்ற நிலைக்கு வந்தால்தான் முடியும்...!
எங்கும் எல்லாம் சரியாத்தான் போய்க்கிட்டிருக்கு..கிருபன்ஸ்சு...அதுதான் லண்டனில 17 வயசுப் பெட்டையை ரேப் பண்ணிக் கொலை செய்து மறைக்கும் வரை இந்த அமைச்சுகள் என்ன பண்ணினவை....! இதுகள வெளியில சொல்லுறது மனித உரிமைகள் அமைப்புகள் தான்....பெண்கள் விவகார அமைச்சுக்கள் அல்ல....! ஈழத்தில் எத்தனை பெண்கள் இராணுவத்தால் கொன்றொழிக்கப்பட்டார்கள்...அதை மகளிர் விவகார அமைச்சா வெளிக்கொணர்ந்தது...மனித உரிமை அமைப்புக்கள் தான்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

