06-05-2005, 08:40 PM
kuruvikal Wrote:வள்ளுவன் ஆகட்டும் சூத்திரமாகட்டும் கணவன் மனைவிக்கான பாலியல் ஒழுக்கம் பற்றியே சொல்கின்றன... கள்ளக் கலவி பற்றிச் சொல்லேல்ல.....! காமத்துப் பாலுக்கு வரமுதல் அறத்துப்பாலில் இல்லறம் என்றால் என்ன என்று சொல்லிவிட்டுத்தான் அப்புறம் காமத்துப்பாலில் வள்ளுவர் கணவன் மனைவி...தலைவன் தலைவிக்கு...காமத்துப்பால் போதிக்கிறார்கள்..! கணவன் இருக்க இன்னொருத்தனையோ அல்லது மனைவி இருக்க இன்னொருத்தியையோ கண்டு கூடச் சொல்லவில்லை...! சரியா..அந்த அடிப்படை ஒழுக்கத்தைத்தான் நாங்கள் இங்கே வலியுறுத்துகிறோமே..!
இல்லையே குருவிகளே... எங்கே இல்லறம் நீங்கள் சொல்கிறீர்கள்? நீங்கள் சொல்வது கலியாணம் செய்த மனைவி அங்கே துறவறம், கணவன் வெளிநாட்டில் துறவறம் பிறகு அது உங்கள் இல்லறம்!! வள்ளுவர் இதைக் கேட்டிருந்தால்
"கணவன் காணாத மனையாள் பாயும் வேலி - வேண்டாத
தாலி யோடு போகும்."
என்று அதற்கும் ஒரு குறள் இயற்றியிருப்பார்.
உங்கள் கருத்துப்படி கணவனும், மனைவியும் கண்காணாத தேசத்த்தில் இருந்து தியானம் செய்வது இல்லறம். சரி காமத்துப்பால்? அது எங்கே ? அதுவும் தியானத்தில் தானா? நான் சொல்கிறேன் குறைந்தது காமத்துப்பாலையாவது படமாக கணவனுக்கும் மனைவிக்கும் காட்டியாவது சுயஇன்பம் பெற்று வாழவிடுங்கள் ஐயா என்று? நியாயமான கோரிக்கையல்லவா?

