06-05-2005, 04:43 PM
Nitharsan Wrote:[quote=குருவிகள்]
நிதர்சன் யூட்டும் சரி கிருபன்ஸும் சரி...மேற்குலக பாலியல் சித்தாந்தங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு
அது போக இராஜ இராஜன் கட்டிய தஞ்சை பெரியகோவிலின் கோபுரங்களில் இல்லாததையா பாலியல் படங்களில் காட்டுகிறார்கள்? கோவில் கோபுரங்கள், பட்டினத்தார் பாடல்கள், திருக்குறள் எல்லாம் மேலைத்தேய நாகரிகத்தால் இராஜஇராஜனுக்கும், பட்டினத்தாருக்கும், திருவள்ளுவருக்கும் உண்டான தாக்கத்தின் விளைவு என்று குருவியும் நிதர்சனும் சொல்லப்போகிறீர்களா?? எமது பண்பாடும் அறிவும் நீங்கள் நினைப்பதிலும் பார்க்க எவ்வளவோ முற்போக்கானது.
மேலைத்தேயத்தின், தொழில்நுட்பமும், மருத்துவமும், முகாமைத்துவமும் வாழ்க்கைத்தரமும் உயர்வானது என்று கண்டு ஓடிவருகின்றோம். பிறகு பாலியல் சம்பந்தப்பட்ட விஞ்ஞான அறிவை தட்டி கழிக்கின்றோம். மேலைத்தேயங்களிலும் பார்க்க ஜப்பானில் பாலியல் சுதந்திரமும் அறிவும் அதிகம். ஏன்? தமிழர் திருக்குறளின் காமத்தப்பாலையே ஆராயந்து பார்க்கிறோம் இல்லையே ? மேலை நாட்டவர் கீழைத்தேய காமசூத்திராவையும் தஞ்சைப் பெரியகோவில் கோபுரங்களையும் பார்த்து பாலியலை ஆராய்கிறார்கள். ஆனால் நம்மவர்களோ அவை மேலைத்தேய நாகரிகம் என்கிறார்கள்.

