06-05-2005, 09:03 AM
திருமலையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானத்தளம்!
[ஞாயிற்றுக்கிழமை, 5 யூன் 2005, 09:23 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழத் தலைநகரான திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் விமான ஓடுபாதை ஒன்றை அமைத்து வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் 'சண்டே ரைம்ஸ்' வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தென் திருகோணமலையில் சம்பூரின் தெற்குப் பகுதியில் தகரவாடியில் 25 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பெரும் எண்ணிக்கையிலான சீமெந்து மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. இந்த அமைவிடமானது திருகோணமலை துறைமுகத்தை நோக்கியதாக உள்ளது.
இந்தச் சூழலானது திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் விமானத்தளம் ஒன்றை அமைக்கும் முயற்சியாக இருக்கக்கூடும். இது குறித்து கடந்த மாதம் சிறிலங்கா புலனாய்வுத்துறை அரசுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறது.
இந்த விமான ஓடுபாதை கட்டமைக்கப்பட்டு வருவது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் இறுதியான முடிவு எதையும் கூறவில்லை.
சிறிலங்காவின் ஆளில்லா வேவு விமானங்கள் மட்டுமே அப்பகுதியில் துப்பரவாக்கப்பட்டு வருவதை உறுதி செய்து இருக்கிறது. அப்பிரதேச மக்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பகுதியில் துப்பரவுப் பணியில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்துள்ளதை அறிகிறோம்.
லொறிகளில் சீமெந்தும் இரும்புகளும் இறக்குவதை சிலர் பார்த்துள்ளனர். நூற்றுக்கணக்கான லோடு கட்டுமானப் பொருட்களுக்கு சம்பூரை அண்டியுள்ள மொத்த விநியோகஸ்தர்களிடம் கொள்வனவு செய்ய ஓர்டர் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த விமான ஓடுபாதை திருகோணமலையில் அமைந்துவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நகர்வுகள் அனைத்தும் திருகோணமலையை நோக்கியதாகவே இருக்கும். இதன்மூலம் தமிழீழத் தனியரசின் தலைநகராக திருகோணமலையை பிரகடனப்படுத்துவார்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சம்பூர் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்த தமிழீழ விடுதலைப் புலிகள், இந்த பாதுகாப்பு நகர்வுகள் அனைத்தும் திருகோணமலையை நோக்கியதாக இருக்குமாறு அமைத்தனர்.
இந்த விமான ஓடுபாதை தொடர்பான செய்தி உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் கிளிநொச்சியையும் திருமலையையும் வான்வழியே விடுதலைப் புலிகள் இணைக்கக் கூடும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தம்மை வலுப்படுத்திக்கொண்டுள்ளனர் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க, சுவிஸ் விமான நிறுவனங்களில் பொறியியலாளர்களாக கடமையாற்றும் தமிழர்கள் இருவர் மூன்று வாரங்களுக்கு முன் கட்டுநாயக்க வழியாக கொழும்பு சென்று ஓமந்தை சோதனைச் சாவடியூடாக கிளிநொச்சி சென்று சுமார் இரண்டு வாரங்களாக அங்கு தங்கியிருந்துள்ளனர்.
ஆனால் குறிப்பிட்ட இரு பொறியியலாளர்களும் இலங்கையை விட்டுச் சென்ற பின்னர்தான் அவர்களின் வருகை பற்றிய உண்மையான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
puthinam