09-27-2003, 10:39 AM
வாரிதி சொன்னதில் முழுவதும் உண்மை இல்லை என்றாலும் உண்மை உண்டு....நாம் எமது தேசத்தை மதிக்கின்றோம்...மனதுள் தினமும் நினைக்கின்றோம்...தாயகத்தில் ஒரு துண்டுக்காணி இல்லாதவனும் கனடாவில் சொகுசு காண்பதும் உண்மை அவனிடம் உங்களால் தாயகப்பற்றைக் காணமுடியுமா...?! தாயகத்தைக் கொள்ளயடித்துச் சுருட்டியவனும் கனடாவில் வாழ்கிறான் அவனிடம் தாயகப்பற்றைக் காட்டமுடியுமா....?!படிப்பால் உயர்ந்துவிட்டேன் எனக்கு மேற்குலகே கதி என்று வந்தவனிடம் உங்களால் தாயகப்பற்றைக் காட்டமுடியுமா...?! இப்படிப் பலதுகள் உண்டு நாம் கண்டும் உள்ளோம்...! உதாரணமாக யாழ்பல்கலைக்கழகம் ஒவ்வொருவருடமும் சுமார் 75 மருத்துவர்களை உருவாக்கின்ற போதும் எத்தனை பேர் அங்கிருந்து சேவை செய்கின்றனர்...அதில் எத்தனை பேர் வெளிநாட்டில் வேலைதேடி வந்து நிரந்தர வதிவுரிமைக்காக அலைகின்றனர்...அங்கெல்லாம் உங்களால் தாயகப்பற்றைக் காட்ட முடியுமா...அவர்களிடம் உண்மையாக தாயகப்பற்று உள்ளதா...?! ஏன்...எத்தனையோ சிறுவர்கள் உறவுகளை இழந்து நிர்கதியாகியுள்ளனர்...ஆனால் புலத்தில் இருந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு தாயகத்தில் கோயில் கட்டுவதும் கும்பாபிசேகம் என்று காசை இறைப்பவர்கள் உண்மையான தாயகப்பற்றாளர்களாக இருந்தால் கோவிலுக்கொரு சிறுவர் புகலிடத்தை நடத்தட்டும் பார்ப்போம்...தாயகப்பற்றென்று எழுத்தில் எழுதுவோர் தான் அதிகம் அது அல்ல உண்மையான தாயகப்பற்று...ஒவ்வோர் மனதிலிருந்து உண்மையான சமூகச் சிந்தனை மிகு சிந்தனைகள் செயல்வடிவமாக வெளிப்படுவதே உண்மையான தாயகப்பற்று...அது உண்மையில் எத்தனை பேரிடம் உண்டு,,,!
கம்பன் எப்படி வாழ்ந்தான் என்று நாம் கவி படிப்பதில்லை...அல்லது கண்ணதாசன் எப்படி வாழ்ந்தான் என்று கவி படிப்பதில்லை...கவி என்ன சொல்கிறது என்பதை அறியவே கவி படிக்கின்றோம்...வாரிதி என்ன வாழ்க்கை வாழ்கிறார் என்பது எமக்குத் தேவையில்லை...அவர் சமூகத்துக்கு என்ன செய்கிறார் என்பதுதான் தேவை....நாவலர் விபுலானந்தர் என்ற தமிழ் பெரும் புலமைகளுக்குப் பின் தாயகம் தரமறந்த தமிழ் இலக்கியப் புகழை தன் பேச்சாற்றலால் தமிழகம் வரை கொண்டு சென்றவர் வாரிதி என்றால் அது மிகையல்ல...அவரின் சொந்த நடவடிக்கைகள் தவறானதாக இருக்கலாம்...கண்ணதாசன் வாழ்ந்த வாழ்க்கையைப்பார்த்தால் அவரின் கவிதையைப்படிக்க அருவருப்பாக இருக்கும்...ஆனால் அதை மறந்துதானே கவிதை படிக்கின்றோம்....அது போல ஒரு இலக்கியவாதியாக வாரிதியைக் காண்பதே ஒரு நல்ல விமர்சகனுக்குச் சிறந்தது...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>