06-05-2005, 05:20 AM
சிவராமைக் கொன்றவர்கள் அகப்பட்டனர்!
ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரட்ணம் சிவராமைக் கொலை செய்தவர்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர் என்று தெரியவருகிறது.
அரசுக்கு சார்பான அரசியல் கட்சியொன்றே சிவராமைக் கொலை செய்துள்ளது என்றும் இக்கொலையுடன் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் இன்னொரு அரசியல் கட்சிக்கும் தொடர்பு என்றும் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.
ஆனால் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்யும்வரை பொலிசார் இது விடயத்தை இரகசியமாக வைத்துள்ளனர் என்றும் விசாரணைகளை இரகசியமாக மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவை மேலும் தெரிவித்தன.
கொலையாளிகள் விட்டுச்சென்ற ஒரு தடயமே இக்கொலை தொடர்பான சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கு பாரியளவில் பொலிசாருக்கு உதவியுள்ளது என்றும் தெரியவருகிறது.
கடந்த 29 ஆம் திகதி இரவு பம்பலப்பிட்டியில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த ஊடகவியலாளர் சிவராமை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் கடத்திச்சென்றனர். பின்னர் அடுத்த நாள் நாடாளுமன்ற வளாகத்தில் ஜப்பான் நட்புறவுப்பாலத்துக்கு கீழ் சிவராமின் குண்டுதுளைக்கப்பட்ட உடல் மீட்கப்பட்டது.
புதினம்

TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS