09-27-2003, 09:44 AM
Kanani Wrote:Quote:இருவருமே கற்பில் சிறந்தவர்கள்தாம்.சரியாச் சொன்னியள்
கற்பிழந்தவன் கோவலனே
கண்ணகி கற்புடனிருந்தால் என்ன சீதை தீக்குளித்தால் என்ன...நாம் கற்புடனிருப்போம்!!!
பாட்டி இது உங்கட காலத்தில நடத்துற பொழுதுபோக்கு விவாதம்....
இன்றைய இளைஞர் நாம் இவ்வகையான அர்த்தமற்ற பொழுதுபோக்கு விவாதம் புரிவதுமில்லை கேட்பதுமில்லை...
இலக்கியங்கள் ஒரு சமூகத்தின் காலப்பதிப்புக்கள் என்று ஒரு பார்வை உண்டு....கணணி நீங்கள் சொல்வது போல் பார்த்தால் திருக்குறளையும் நீங்கள் படிப்பதை நிறுத்திவிட்டீர்களோ...? இலக்கியங்கள் பல நல்ல விழுமியக்கருத்துக்களை தம்மகத்தே கொண்டு சமூகத்தை வழி நடத்துகின்றன...அவை விவாதிக்கப்படும் போதுதான் பல இலைமறைகாயான விடயங்களும் உண்மையாக இலக்கியவாதி என்ன சொல்லவந்துள்ளான் என்பதும் புரியும்...இதற்கு நல்ல உதாரணம் கம்பன் இராமாயனமும் வான்மீகி இராமாயனமும்....இவை தேவையற்றவை என்றால் ஏன் தமிழ் இலக்கியத்தில் இதைப்படித்தீர்கள் ஏன் பாடத்திட்டத்துள் இதைப் புகுத்தினார்கள்...உங்களுக்கு உங்களின் பாரம்பரிய விழுமியங்களில் குறிப்பிடத்தக்கவற்றை இனக்காணத் தெரிய வேண்டும் என்பதே நோக்கம்....!..... சீதை என்றொரு கதாப்பாத்திரம் அல்லது கண்ணகி என்றொரு கதாப்பாத்திரம் வாழ்ந்தாளா என்று இன்று நீங்கள் கேட்பது போல...எமது விடுதலை போராட்டத்தை ஒரு இலக்கிய வடிவத்தில் புகுத்தி அதை மீண்டும் 100 வருடங்களுக்குப் பின் அலசும் போது கரும்புலிகள் இருந்திருக்கக் கூடுமா...திலீபன் போன்றோர் இருந்திருப்பரா என்ற கேள்விகள் எழத்தான் செய்யும்....! அதற்காக அப்படி இருக்கவில்லை என்பது உண்மையாகுமா...எனவே விவாதம் என்பது குழப்பத்தால் தெளிவை தேடிய பயணமே அன்றி புறக்கணிப்புக்கான தேடல் அல்ல....! உங்கள் போன்ற இளைஞர்கள் இலக்கியங்கள் மற்றும் அவற்றின் மீதான விவாதங்களுங்களின் மீதான தவறான பார்வைகளை மாற்றிக் கொள்வது அவசியம்...அதேவேளை நாம்... பாரம்பரிய விழுமியங்களுடன் நவீன சமூகவியல் மாற்றங்களுக்கு ஏற்ப புதிய வாழ்வியல் சமூகவியல் ஒழுக்கங்களை புகுத்துதலும் நாளைய சந்ததிக்கு உங்களின் விழுமியங்களாக அவை போய்ச்சேர வகை செய்யும்....அதனுள் ஒன்றுதான் கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்பது...அதை சொல்லத்தக்கதாக ஒரு இலக்கிய வடிவத்தை வெளியிடுங்கள் நாம் வரவேற்கிறோம்..குறிப்பாக நாச்சிமார் கோவிலடி ராஜனின் படைப்புக்கள் மேலும் மெருகூட்டப்படும் போது அவை இலக்கியவடிவங்களாக மலர வாய்ப்புண்டு அவரின் கருத்துக்கள் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் சமூகத்திற்கு தேவையான மாற்றங்களை பாரம்பரிய விழுமியப் பிசகல்கள் இன்றி ஏற்படுத்தத்தக்கதாக அமைவதே அதற்கு நாம் கூறும் காரணம்....! நேற்று சீதை இடத்தில் கற்புக் காட்டியதால் தான் இன்று ஆணிடம் கற்புக் காக்காப்பட வேண்டிய தேவை வந்தது....இன்று சீதையிடத்து கற்பின் தேவையை அவசியத்தை அகற்றினால் நாளை கற்பென்பது என்ன என்றுதான் ஆகும்...அதற்காக அடித்தளங்கள் பெண்ணியம் அது இது என்று இடப்படும் போது...எமது இலக்கியவடிவங்களே இன்று பாரம்பரிய விழுமியம் என்பதின் பொருள் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது...இலக்கியங்கள் என்றும் பாதுகாக்கப்பட வேண்டியவை விவாதிக்கப்பட வேண்டியவை என்பதுடன் உங்கள் காலத்து இலக்கியப்படைப்புக்களையும் நவீன வாழ்வியல் மாற்றங்களுக்கு ஏற்ப கலாசார கலப்புக்கள் இன்றி வாழ்வியல் சமூகவியல் தனித்துவத்துடன் நவீன வடிவங்களில் இட்டுத் தர மறந்துவிடாதீர்கள்...அவையே நாளை உங்களையும் கம்பன் இலங்கோ புகழேந்தி மாணிக்கவாசகன் என்று சமூகவியல் இலக்கியங்களைத் தந்த இலக்கியப்படைப்பாளியாகக் காட்டவழிசெய்யும்..!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

