06-05-2005, 01:19 AM
MUGATHTHAR Wrote:எனதனுபவத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் ஒருவர் எந்தவகை கெட்ட பழக்கவழக்கங்களும் இல்லாமல் பணத்தை மட்டுமே குறியாக இருந்து காசை ஊரிலிருக்கும் மனைவிக்கு அனுப்பினார்; அவ அந்த காசோடு இன்னோரு ஆளுடன் கம்பி நீட்டி விட்டா.
<b>"பணத்தை மட்டுமே குறியாக இருந்து"</b> பணத்தை மட்டும் மனைவிக்கு கொடுத்தால் காணும் என்று நினைப்பவனுக்கெல்லாம் எதற்கு பொண்டாட்டி? அவளும் ஒரு மனிதப்பிறப்பு, அவளுக்கும் இளமையில் பாலியல் தேவைகள் இருக்கு, இந்த மனுசனுக்கு பணத்தில் விசர், இளமை கடந்து முதுமை காய அரைவாசி சாமியாராய் மாயுறார் என்றால், அவளும் இப்படி அழிய வேண்டுமா? என்ன முட்டாள்தனமான எதிர்பார்ப்பு இது? பெண்களுக்கு இளமை ஆண்களிலும் பார்க்க விரைவாக போய்விடும். அதற்குள் அவர்கள் வாழ வேண்டும். இவர் முடித்த பாவத்துக்கு பணம் அனுப்பினார். ஆள் வரவில்லை. அவள் என்ன செய்வது? தன்னோடு வாழக்கூடியவரோடு போய்விட்டாள். என்ன தவறு?
MUGATHTHAR Wrote:அந்த ஆணுக்காக அனுதாபப்பட மாட்டீர்களா? அப்படிபட்ட பெண்களும் எங்கள் சமூகத்தில் தானே இருக்கிறார்கள் நீங்கள் யுரோப்பில் நல்ல ஒரு குடும்ப வாழ்க்கை அமையப்பெற்ற நிலையில் கருத்துக்கள் எழுதுவது சுலபம் இப்படியான சம்பவங்களை நேரடியாக பாத்த ஆண்கள் தங்கள் குடும்பம் . மனைவி என கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் அடக்கி வைச்சிருக்கிறது என கூறுவீர்கள் ஏனெலில் சில ஆண்களுக்கு இந்த சமூகத்தை விட அவர்களின் குடும்பங்கள் தான் முக்கியம் ஆன படியால் அவர்களையும் குறை கூற முடியாது.
என்னுடைய பல்கலைக்கழக காலத்தில், பார்த்தால் புரூஸ்லீ போல இருக்கும் ஒருவன் என்னோடு படித்தான். அவனோடு நான் பல்கலைக்கழத்தால் வரும் போது, ஒரு நாளைக்கு ஒரு வீட்டுக்கு போவான். அவனை வரவேற்க கலியாண களை போகாத இளம் மனைவிகள் வெளிநாட்டு காசில் கட்டிய வீட்டு படலையில் வந்து நிற்பார்கள். வெளிநாட்டு மாப்பிள்ளை ஊருக்கு வந்து கொழுத்த சீதனத்தோடு, ஒரு வாரம், இரு வாரம் "அனுபவம்" காட்டிவிட்டு போய்விட்டார். இனி எப்ப வருவாரோ? அவருக்கு பதிலாக தான் என்னோடு படித்தவன்.
மனைவியும் பெண், அவளுக்கும் உணர்வுகள் உண்டு, தான் வெளிநாட்டில் காய்கிறார் (சில பேர் மேய்கிறார்கள் தானே?) என்றால் அவளும் அங்கே காயவேண்டுமா?
இவர் நீலப்படம் பார்ப்பார். தானே ******என்றிருப்பார். அந்த நாட்டிலே அவள் எதைப்பார்ப்பாள்? அவளுக்கு யார் "******" என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள்?
<ul>
<li> மனைவியோடு வாழ சந்தர்ப்பம் இல்லாதவர்கள் கலியாணம் முடிக்கக்கூடாது. அதற்கு தடைவிதிக்க வேண்டும்.
<li> 'வெளிநாட்டுக்கு கூப்பிடுகிறேன் ஸ்பொன்சர் பண்ணுகிறேன்' என்பவர்கள் பற்றி அரசு தெளிவாக ஆராய்ந்து தான் திருமணங்களை அனுமதிக்க வேண்டும். அப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் கூப்பிடாவிட்டால், மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து அவரை சட்டப்படி நாடுகடத்தி மனைவியுடன் வாழ நிர்ப்பந்திக்க வேண்டும்.
<li> வயது வந்தவர்களுக்கு பாலியல் கல்வி, சுயஇன்பம் அனுபவிப்பது உட்பட, கட்டாய கல்வியாக கற்று கொடுக்கப்பட வேண்டும்.
<li> பாலியல் படங்கள், திரைப்படங்கள், சஞ்சிகைகள், வயது வந்தவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பெண்களே நடத்தும் நிறுவனங்கள் மூலம், அந்தரங்கமாக விற்பனை செய்ய வசதிகள் இருக்க வேண்டும்.
<ul>
இவற்றை எல்லாம் செய்ய, "ஆ ஊ எங்கள் கலாச்சாரம் என்னாவது?" என்று ஊளையிடுவோர் தடையாக இருந்தால், அங்கே "கம்பி நீட்டுவது", "வேலி பாய்வது" எல்லாம் கடைசியாக கலாச்சாரமாக மாறிவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

