Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமாவில் புகை பிடிக்க தடை
#13
அரசுடன் தணிக்கை குழு தலைவர் மோதல் - புகையும் சிகரெட் விவகாரம்

<img src='http://cinesouth.com/images/new/04062005-THN15image1.jpg' border='0' alt='user posted image'>

புகையால் வந்த பகை மத்திய சினிமா தணிக்க குழு தலைவர் வரை புகையத் தொடங்கியிருக்கிறது. அனைத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டது ஒரு நன்றி கடிதம் என்றால் நம்ப முடிகிறதா?

ரஜினி என்றால் உடன் நினைவு வருவது அவரது அலையும் முடியும், புகையும் சிகரெட்டும்தான். 'சந்திரமுகி' படப்பிடிப்புக்கு முன் தனது உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் ரஜினி. ஆறு மாதங்களுக்கு சிகரெட்டுக்கு தடா போடவேண்டும் என்றனர் மருத்துவர்கள். ரஜினியும் அதனால் 'சந்திரமுகி'யில் சிகரெட்டை தொடவில்லை. இது மத்திய அமைச்சர் அன்பு மணியின் நெஞ்சை தொட்டுவிட்டது. சிகரெட் பிடிக்காததற்கு நன்றி தெரிவித்து அவர் ரஜினிக்கு கடிதம் எழுதினார். ரஜினி சம்பந்தப்பட்ட விஷயம்...... மத்திய பட்ஜெட்டை விட பிரபலமாகிவிட்டது கடிதம்.

சிகரெட் பிடிக்காததற்கு எழுதிய கடிதத்துக்கே இப்படியென்றால், சிகரெட் பிடிப்பதை சினிமாவில் இருந்தே ஒழித்தால்...? மந்திரியின் மனதில் இப்படியொரு எண்ணம் ஓடியிருக்க வேண்டும். ஆகஸ்டு 1 முதல் சினிமாவில் சிகரெட் பிடிப்பதை தடை செய்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு எதிராக இயக்குனர்கள், நடிகர்கள் மத்தியில் கிளம்பிய எதிர்ப்பு மத்திய சினிமா தணிக்கைக் குழு தலைவர் சார்மிளா தாகூரிடம் எதிரொலித்திருக்கிறது. "இது அவசரப்பட்டு எடுத்த முடிவு. சுயமரியாதையுள்ள எந்த இயக்குனரும் இதை விரும்பமாட்டார்கள்" என கூறியுள்ளார் சார்மிளா தாகூர்.

இப்படியொரு சட்டம் கொண்டுவருமுன் திரையுலகத்தை சேர்ந்தவர்களுடனோ, தணிக்கை குழுவினருடனோ அரசு கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய தணிக்கை குழுவிலேயே எழுந்துள்ள இந்த அதிருப்தி குரல் சிகரெட் பிரச்சனையை மேலும் ஊதி பெரிதாக்கியிருக்கிறது.

இதில் நம்முடையது ஒரே ஒரு கேள்வி......

இதுவரை சினிமாவில் வந்துள்ள சிகரெட் புகைக்கும் காட்சிகளை இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? உதாரணமாக 'படையப்பா'வில் வரும் புகை பிடிக்கும் காட்சிகளை நீக்கிவிடுவார்களா? இல்லை, அப்படியே ஒளிபரப்ப அனுமதிப்பார்கள் என்றால், இனிவரும் படங்கள் மட்டும் இப்படியொரு தடைக்கு தலைவணங்க என்ன பாவம் செய்தன?

சினி சவுத்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 06-02-2005, 01:19 PM
[No subject] - by vasisutha - 06-02-2005, 01:56 PM
[No subject] - by Mathan - 06-02-2005, 02:07 PM
[No subject] - by vasisutha - 06-02-2005, 02:10 PM
[No subject] - by Mathan - 06-02-2005, 02:12 PM
[No subject] - by Mathan - 06-02-2005, 02:22 PM
[No subject] - by vasisutha - 06-02-2005, 02:22 PM
[No subject] - by vasisutha - 06-02-2005, 02:30 PM
[No subject] - by Eswar - 06-02-2005, 03:18 PM
[No subject] - by MUGATHTHAR - 06-02-2005, 03:53 PM
[No subject] - by kavithan - 06-02-2005, 10:11 PM
[No subject] - by Mathan - 06-05-2005, 12:03 AM
[No subject] - by kavithan - 06-05-2005, 12:08 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)