06-04-2005, 01:26 AM
kirubans Wrote:பெண்களுக்குப் பிரச்சினைகளே இல்லை என்றும், பெண்களின் பிரச்சினைகளுக்குப் பெண்களே காரணமென்றும், ஆண் மீது எந்தவித பழியையும் போட வேண்டுமென்றுதான் குருவியும், நிதர்சனும் சொல்கிறார்கள். பெண்ணடிமைத்தனம் எமது சமூகத்தில் இல்லை என்பதும், பெண்களால் புலத்தில் பாதிப்புற்ற சில கதைகளை வைத்து ஒட்டுமொத்தமாக பெண்களையே இழிவு செய்வதும்தான் இங்கு நடக்கின்றது. பிரச்சினை இருக்கின்றது என்பதையே ஒத்துக்கொள்ளாதவர்கள் எப்படித் தீர்வுகளைப் பற்றி அலசப்போகிறார்கள்?
நிலவன் கூறியபடி எமது கலாச்சாரத்தில் உள்ள பிற்போக்குத்தனமான விடயங்களைக் கைவிட்டு, பிற கலாச்சாரங்களில் உள்ள நல்ல விடயங்களை (உதாரணத்திற்கு நேரம் தவறாமை) நாம் பின்பற்ற முனையவேண்டும். மேற்கத்தைய கலாச்சாரத்தை தூக்கி எறிய வேண்டுமென்றால் தமிழர்கள் மேற்கிலிருந்து தாய் நாட்டிற்குப் போகவேண்டும், எனெனினும் எமது நாடு போகும் போக்கில் இம்மாதிரியானவர்களுக்கு அங்கும் இடம் கிடைக்காது <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எங்கள் கருத்துக்களில் ஆண் பெண் என்று பிரிவினைக்கு அப்பால் சென்று மனிதனுக்கான பிரச்சனைகள் என்ற வரமுறைக்குள் அனைவரினதும் பிரச்சனைகளை உள்ளடக்கி உள்வாங்கி எல்லோருக்கும் பொதுவான பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுவதையும் சட்ட நடைமுறை அமுலாக்கலையுமே சுட்டிக்காட்டி வருகின்றோம்...! பெண்களுக்கு தனியான சலுகைகள் அளிப்பது எனியும் அவசியமில்லை...ஒட்டுமொத்தமாக மனிதர் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் பாதுகாப்பும் அளிக்கப்படும் போது...!
உலகில் மனித உரிமைகள் என்பதை இருபாலாருமே அனுபவிக்கும் போது பெண்களுக்கு தனி உரிமை என்ற ஒன்றுக்கு அங்கு அவசியமில்லை... என்பதையும் கவனியுங்கள்..! பெண்கள் தனிப்பிறவிகள் அல்ல...அவர்களும் மனிதர்களே... ஆண்களைப் போல சகல உரிமைகளையும் அனுபவிக்கக் கூடியவர்களே...! பெண்களை சமூக உரிமைகள் வேண்டி தனியாக அடையாளப்படுத்தும் பெண்ணியங்களின் நிலை பெண்களை பொது மனித உரிமைச் சமத்துவத்துக்கு அப்பால் இட்டுச் செல்லும் பிற்போக்கான நிலை...அதை அறியாமல் பலர் அதை முற்போக்கென்று தங்களளவில் தீர்மானித்து முழங்கித் தள்ளுகிறார்கள்..! இதுபோதும் அவர்களின் பிற்போக்குத்தனமான நிலையை அவர்களுக்குக் காட்ட....!
மேற்குறிப்பிட்ட கருத்தில் இருந்து கிருபன்ஸ் நாங்கள் என்ன சொல்லவருகின்றோம் என்பதின் அடிப்படையையே புரிந்து கொள்ளவில்லை என்பதை வாசகர்கள் கவனித்தால் சரி...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->