09-26-2003, 10:39 PM
[size=18]சீதையே கொஞ்சம் விழித்திரடி!
<img src='http://www.freeindia.org/biographies/greatdevotees/hanumantha/hanumantha4.jpg' border='0' alt='user posted image'>
சீதையே கொஞ்சம் விழித்திரடி!
உன்னை நெருப்பில் இறக்கியவன்
தெய்வமாகிப் போனான்!
எடுத்துச் சென்றவனோ
அரக்கனாகிப் போனான்!
நீ மட்டும் என்னவானாய்?
கற்புக்கரசிகளுடன் உன் பெயரும்
இன்னமும் விவாத அரங்கில்!
பொன்னையனும் கன்னையனும்
தொண்டைத் தண்ணீர் வற்ற வற்ற
தம் பெண்டிரை அடுப்படியில் வேகவிட்டு
இன்னமும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
எனது கவலையெல்லாம்
உனது பெயரெல்லாம்
இக் காமுகர்களின்
நாவினில் புரண்டு புரண்டு
எச்சிற் படுத்தப்பட்டு
களங்கப் படுவதுதான்.
திருமதி ஜெயந்தி ஜீவா
சுவிஸ்
<img src='http://www.freeindia.org/biographies/greatdevotees/hanumantha/hanumantha4.jpg' border='0' alt='user posted image'>
சீதையே கொஞ்சம் விழித்திரடி!
உன்னை நெருப்பில் இறக்கியவன்
தெய்வமாகிப் போனான்!
எடுத்துச் சென்றவனோ
அரக்கனாகிப் போனான்!
நீ மட்டும் என்னவானாய்?
கற்புக்கரசிகளுடன் உன் பெயரும்
இன்னமும் விவாத அரங்கில்!
பொன்னையனும் கன்னையனும்
தொண்டைத் தண்ணீர் வற்ற வற்ற
தம் பெண்டிரை அடுப்படியில் வேகவிட்டு
இன்னமும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
எனது கவலையெல்லாம்
உனது பெயரெல்லாம்
இக் காமுகர்களின்
நாவினில் புரண்டு புரண்டு
எச்சிற் படுத்தப்பட்டு
களங்கப் படுவதுதான்.
திருமதி ஜெயந்தி ஜீவா
சுவிஸ்

