06-03-2005, 09:47 AM
MUGATHTHAR Wrote:தயவுசெய்து கவனிக்கவும் இங்கு இருக்கும் தலைப்பு திசை மாறி ஆண் பெண் அடக்குமுறை என்றும் பெண்சுதந்திரத்தை பற்றியும் போய் கொண்டிருக்கிறது இதில் நிறையப் பேர் பெண்களுக்காக குரல் குடுக்கிறார்கள் ஆளாலும் சில பெண்கள் (பேரை குறிப்பிட வில்லை) புலம் பெயர்ந்து வாழும் ஆண்களை பிச்சை எடுக்க வந்தவர்கள் எண்டு சொல்லுவது அநாகரீகம் நீங்கள் எல்லோரும் அகதி என்ற முத்திரையில் தான் இருக்கிறீர்கள் ஆணை எப்பிடியும் தாக்கி எழுத வேண்டும் என்பதற்காக இப்பிடி பேசுவது நல்லாயில்லை நீங்கள் சமூகத்துக்கு நல்ல கருத்து எழுதுகிறீங்கள் அதை உங்கள் வீட்டில் முதல் நடைமுறைப் படுத்துங்கள்முகத்தார் ஐயா ! நானேதான் அந்தப்பிச்சையென்ற வார்த்தையைப் பிரயோகித்தது. அது ஆண்களை மட்டும் தனித்து அல்ல பெண்கள் ஆண்கள் குறிப்பாக தமிழினமே புலத்தில் அன்னியனுக்குச் சேவகம் செய்து அவன் போடும் பிச்சையை பவ்வியமாக ஏற்றுக்கொண்டுதானிருக்கிறோம்.
முந்தி பள்ளிக்கூடத்திலை ரீச்சர் வகுப்பிலை வந்து எங்களுடன் கத்தி எரிஞ்சு விழுந்தால் நாங்கள் சொல்லுவம் ரீச்சர் வீட்டிலை புருஷனோடை சண்டைபோல அதுதான் இங்கை வந்து பாயுறா எண்டு இங்கு கன பேரின் நிலை அப்பிடித்தான் கிடக்கு.............. இந்த தலைப்பின் மூலம் எவரின் மனங்களையும் புண்படுத்த வேண்டாம் றகைச்சுவையாக உரையாடுங்கள் நல்ல கருத்துக்களை எழுதுங்கள் யாரும் ஏற்றுக் கொள்வார்கள்
இது ஆண்களை இழிவுபடுத்துவதாக நீங்கள் நினைத்தால் அதற்கான மன்னிப்பை தங்களிடம் கோருகின்றேன்.
வெள்ளையனின் நாட்டில் இருந்து கொண்டே அவனது நாட்டையும் அவனது பண்பாட்டையும் குப்பை கூழம் என்று கதறுவோருக்காகவே எழுதினேன் அப்படி. 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சல்லவா"
இப்படி அன்னியபண்பாட்டுக்குள் ஏன் புதைந்தோம் அல்லது வந்தோம் என்பதை அதற்கான தீர்வையை தேடாமல் வெள்ளைக்கலாசாரத்தால் வீழ்ந்து போகிறோம் என்று ஆழ்ந்து போகும் இயலாமைகளை மீள்மதிப்பீடு செய்து தீர்வைகளைத் தேடுவதே சிறந்தது அதைத்தான் செய்ய வழிதேடச்சொல்கிறேன். உபதேசங்களையல்ல.
ரீச்சருக்கு புருசனோடை பிரச்சனையென ஆண்கள் நீங்கள் கதைத்த அதே வகுப்புகளில் வரும் ஆண்உபாத்தியார்கள் எரியும் போது வீட்டில் மனிசியுடன் கடிபாடெண்டு நாங்களும்தான் நக்கலடித்திருக்கிறோம்.
இங்கு யாரையும் புண்படுத்தும் நோக்கில் கருத்தெழுதவில்லை. கருத்துக்களத்தில் மோதலான கருத்துக்கள் தெளிதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கைகளுடனனே இக்களம் வருகிறோம். பொழுதுபோக்கவல்ல.
நீங்கள் குறிப்பிடும் வகையான கணவராக நீங்கள் இருந்தபடியோ Pரீச்சரை இங்கு உவமிக்கிறீர்கள் ஐயா ? ஒருவரின் கருத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் புருசன் சரியில்லாமல் கருத்தாடுவதாக கருதும் வயதாலும் அனுபவங்களாலும் மூத்த நீங்கள் எண்ணுவது இளையவர்களாகிய எங்களுக்கு ஏதோவொன்றை ஞாபகப்படுத்துகிறது. (அதை இங்கு தவிர்க்கிறேன். மீளக்கேட்டாலும் அதை இதில் தெரிவிக்கமாட்டேன் ஐயா)
கருத்துக்களை கருத்துக்களால் வெல்வோம். அதற்கான தீர்வைகளை நமக்கான பயனாகிக்கொள்வோம்.
யாரையும் எனது கருத்துப்புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:::: . ( - )::::

