09-26-2003, 08:12 AM
Quote:இந்த கருத்தை லண்டனிலை இருந்து சொல்லியிருக்கவேணும் கணனி.. ஜேர்மனிலை இருந்து சொல்லாதீங்கொ.. தமிழை மறந்தும் தமிழ் பேச வெட்கப்பட்டும் தமிழரோடு பழகுவது கேவலம் என்றும் நினைக்கும் ஒரு பகுதி லண்டனிலைதான் கோயில்களிலை லெவல்காட்டுதுகள்.இதுக்கு நான் என்ன செய்ய யாழ்ல உலா வாற பேய் தான் நினைச்சமாதிரி என்ர நாட்டை மாற்றுது...இப்ப சரியாக் காட்டுது...
ஜேர்மனியையோ சுவிசையோ ஏனைய ஐரோப்பிய நாடுகளையோ உங்களின் கருத்துக்குள் இழுக்காதீர்கள்.. தற்போது நீங்கள் நாட்டை மாற்றி படம்காட்டினாலும்கூட.
நான் எழுதினது லண்டனை மையமாக வைத்துத்தான்...ஆனால் இவை ஜேர்மன் சுவிசுக்கு இது பொருந்தாது என்று கூறவும் முடியாது....
நான் கூற விளைந்ததை சாந்தியம்மா அப்படியே கவி வரியில் கூறியிருக்கிறார்
Quote:'அம்மா சப்பாத்துப் பிஞ்சிட்டுது அப்பா யக்கற் வாங்கவேணும்"
காலையழுத பிள்ளையின் முகம் வேலையிலும் வந்து நிற்கும்
பிள்ளைகட்கு வரும் காசையும் நாம் சுளையாய் அனுப்புவது யாருக்காம்...?
நம்பிள்ளை அனுபவிக்க வேண்டிய சுகமெல்லாம்
அண்ணனும் , தம்பியும் , அக்காளும் ,
அக்காளின் பிள்ளையும் பழங்கிளங்களுமல்லவா அனுபவிக்கிறார்....?
பிய்ந்த சப்பாத்துக்கு ஒட்டுப்போட்டு , கிளிந்த யக்கற்றுக்குத் தையல்போட்டு
எம் பிள்ளை பழையதையே திரும்பிப்போடும்.
அங்கோ ஆளுக்கொரு சேமிப்பும் , ஆடம்பர ஆடைகளும்
பொழுதுபோக்கி அழுதுவடிக்க மெகாசீரியலும் புதுபுதுப்படங்களும்
அரட்டையடித்து சுகம் விசாரித்து கலோப்பேசி வானலையில் குரல் காட்ட
சக்தியும் , தென்றலும் , சூரியனும் துணையாக அவர்க்கேது குறையங்கு....?
ராசவாழ்க்கையென்பது அங்கெல்லோ உள்ளது.
சத்தியமாய் சொல்கிறோம் இங்கு எம்வயிற்றில் பிறந்த பிள்ளைகள்தான்
பாவத்தின் சின்னங்கள்.
இன்னும் துயிரிங்கு லட்சலட்சமாய் கிடக்கிறது
சொல்ல நேரமில்லை. இல்லை சொல்லியழுதென்ன செய்யப்போகிறீர்....!
பிள்ளையையும் கிள்ளிப்போட்டு தொட்டிலையும் ஆட்டுறது இதுதான்....
பாத்திரம் அறிந்து பிச்சை போடுங்கோ...ஆடம்பரத்திற்கு நீங்கள் கஸ்ரப்பட்டு கடன்பட்டு அல்ல!!

