06-02-2005, 03:38 PM
MUGATHTHAR Wrote:முருகதாஸ்..வட்டுககோட்டையைச் சேர்ந்தவர் 1984ல் எங்களுடன் தொழில்நுட்பக் கல்லூரில் படித்தவர் படிக்கும் போது எமக்கு இவரைப் பற்றி எதுவும் தெரியாது மன்னார் இராணுவத் தாக்குதலாலின் பின் இராணுவ உடல்கள் நல்லூரில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த வேளை இவரை ஆயுதத்துடன் பாத்தேன் எங்களை அருகில் கூட்டிச் சென்று பார்க்கஉதவி செய்தார் அன்றிலிருந்து வகுப்புக்கு அவர் வராவிட்டாலும் அவருக்குரிய பாடக்குறிப்புகளை நான் எழுதிக் கொடுப்பேன்....அதே வருடமென நினைக்கிறேன் யாழ் பண்ணை தொலைத் தொடர்பு கட்டிட இராணுவ றிலைமீது நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்தார் அவருடைய வீர அஞ்சலி நோட்டீஸ்யை எமது கல்லூரி மதிலிலேயே பாத்த போது நாங்கள் அடைந்த வேதனை இப்பவும் நெஞ்சுக்குள்ளை நிக்குது ( அவரின் இயக்கபேர் ஞாபகம் வரவில்லை)இதே தாக்குதலில் என் உயிர் நண்பன் ரகுவை (இயக்கப் பெயர் "அருணன்") இழந்தேன். அவர் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகக் கொண்டவர்.
!

