06-02-2005, 01:56 PM
Quote:சினிமாவில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் வித்தியாசம் காட்டுவதற்காக, வில்லன் சிகரெட் பிடிப்பது போலவும், மது அருந்துவது போலவும் சீன் வைக்கிறோம். அது கூடாது என்றால் எப்படி சினிமா எடுப்பது?
இக்கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
அந்தக் கால திரைப்படங்களில் வேண்டுமானால் அப்படி
இருந்திருக்கலாம். வில்லன் என்றால் தண்ணியடித்து சிகரெட்பிடித்தால்
வில்லனா? அப்போ ரஜனி எல்லாம் படத்திலே சிகரெட் பிடிச்சமாதிரி
நிறைய படங்கள் வந்ததே..அதெல்லாம் வில்லனா நடிச்சாங்களோ?
திருமலையில் விஜய் ஊதித்தள்ளுவாரே விஜய் அந்தப்படத்தில் வில்லனா?
(பகவதியில் தண்ணியடிச்சுட்டு பாட்டுவேற பாடுறார்.)
இவர் சொல்வதை பார்த்தால் சாதாரண வாழ்க்கையில்
தண்ணியடிக்கும் தம்மடிக்கும் எல்லாரும் வில்லன்களா???
கனாக்கண்டேன் வில்லன்.. தண்ணியடிச்சா வில்லத்தனத்தை காட்டினார்?
தன்னுடைய சிரிப்பாலேயே கதிகலங்க வைத்தாரே.
தனக்கு நட்டம் என்றவுடனே குய்யோ முறையோ என்பது சினிமாவில்
சாதாரணம்.
Quote:"சிகரெட் தயாரிக்கும் கம்பெனியை மூடிவிட்டு சினிமாவில் சிகரெட்டுக்கு தடை விதித்தால், அதை வரவேற்கலாம். சினிமாவில் பிடிப்பதை பார்த்துதான் ஜனங்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் என்ற கருத்தை ஏற்கமாட்டேன்.
சினிமாவை பார்த்து யாரும் பண்ணுவதில்லையாம்...
ரஜனி ஸ்டைல் என்று அதை பார்த்து பலர் சிகரட் பிடித்து பழகியதை நான்
கண்டிருக்கிறேன்.
Quote:நான் இப்போது டைரக்டு செய்துவரும் 'காட்பாதர்' படத்துக்காக 2கோடி செலவில் செட் போடப்பட்டு, சில முக்கியமான காட்சிகளை படமாக்கியிருக்கிறோம். அதில், அஜித்குமார் சிகரெட் பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதிலிருந்து சிகரெட்டை மட்டும் அழிக்க முடியுமா? அந்த காட்சியை மீண்டும் படமாக்க வேண்டும் என்றால் மேலும் 2 கோடி செலவாகும். அந்த பணத்தை அரசாங்கம் கொடுக்குமா? தயாரிப்பாளரின் நஷ்டத்தை யார் ஈடுகட்டுவது?
கே எஸ் ரவிகுமார் குரல் கொடுப்பது தடை வந்ததுக்காக அல்ல..
பாவம் அவர் போட்ட செட்டுக்கு 2கோடி செலவழிஞ்சுதே அதுக்காக.
தங்கள் சுய லாபங்களுக்காக குரல் கொடுக்காமல் இளைய சமுதாயத்தை
கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும்.

