Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனது பதில்
#8
[size=18]கம்பவாரிதியின் கருத்துக்கு கண்டங்கள் கடந்த தமிழிச்சியின் கண்டனம்.


உண்மைதான் நாமெல்லாம் செய்தது துரோகம்தான்
ஏதோவொரு சுயநலம் எங்களை ஊர் பிரித்தது
ஏதோவொரு பயம் எங்களை ஓடவைத்தது
பொய்சொல்லி நாமெல்லாம் - புகுந்த
நாடுகளை ஏமாற்றியதும் உண்மையே
இல்லையென்று யாருரைத்தோம்....?

உங்கள் பழமொழிகளின் பாசையில் சொல்கிறோம்
'நன்றி மறப்பது நன்றன்று"
(சிலவேளை அன்றே மறப்பது நன்றென நீங்கள் மறந்திருக்கலாம்)
சீதை பத்தினியா ? ராமன் ஏகபத்தினி விரதனா ?
புராணங்களைப் புழுகியே புகழ் வாங்கும்
உங்களுக்கு யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள நேரமேது....!

பொய்சொல்லி நாம் உளைத்த பணத்தில்தான்
என்குடும்பம் , என்னு}ர் , மாமா , மச்சான்
ஏன் நீங்களும் கோட்டுச் சூட்டுப்போட்டுக்
கனடாவரவும் லண்டன் வரவும் கரன்சி வந்தது.
மானமுள்ள தமிழனாய் - நீங்கள்
மண்ணை நேசிக்கும் தமிழனாய் உங்கள்
சொந்தப்பணத்தில் லண்டனைச் சுற்றியோ
கனடாவைக் கலக்கியோ வந்திருந்தால்
மெச்சியிருப்போம்.
ஆனால் புலம்பெயர்ந்தவனின் பிச்சையில்
கௌரவ விருந்தினர்களாக , சிறப்புப் பேச்சாளராக
வந்து போக எல்லாருமே பிச்சைத்தமிழனின்
எச்சிற் காசுகளைத்தானே எதிர்பார்க்கிறீர்கள்....?

பன்னீர் கொப்பளிப்பதில் நீங்களெல்லாம் வல்லவர்கள் யாமறிவோம்
தண்ணீர் குடிக்கவே பொழுதின்றி கண்ணீர் வடித்தபடி
குளிரில் , குழந்தைகளைக் காப்பகங்களில் விட்டுவிட்டு
செத்த பிணங்களாய் உணர்வையடக்கி
அவனவனின் உணவகங்களில் என்ன ஒய்யாரமாகவா இருக்கிறோம்....?
சீறல் , சினத்தல் , கீறல் , கிளியல் எல்லாம் வாங்கித்தான்
நீங்களெல்லாம் கலோப்பேச கிலோக்கணக்கில் அனுப்புகிறோம்.

என் பிள்ளை காப்பகத்தில் எப்படியிருக்குமோ....?
எம் உயிர் வலியின் ரணமறியார்
ஒருமாதம் பணம்பிந்தினால் , ஒருவாரம் தொi(ல்)பேசி போகாவிட்டால்
'செத்தா நாம் போய்விட்டோம் நாம் செத்தாலும் சொல்லமாட்டோம்
இதோ போகிறோம் அனாதைமடம்"
சொல்லால் கொல்லும் வல்லோரெல்லாம் உங்கள் வாழிடங்களில்
அல்லது அருகாமையில் இல்லையா வாரிதி சொல்லுங்கள்.....?

நாம் பிறந்த மண்ணை , நாம் வாழ்ந்த ஊர்களை , நமது நண்பர்களை
ஆசையுடன்காண வந்தால் அங்கெல்லாம் முன்னிற்கும் பார்வைகள்
எம் கைகளையே எதிர்பார்க்கும்.
'புலத்தில் நாமெல்லாம் அழுதழுதே வாழுகிறோம்"
சத்தியம் செய்தாலும் சனிபிடிப்பார் நம்பமாட்டார்
பொய்யாம் சொல்கிறோம் பணத்தின் மேல் படுக்கிறோமாம்.

இங்கோ சிற்றி பாங்கும் , சேவீஸ் பாங்கும்
சோறுக்கென மிச்சமிருப்பதையும் வழித்தெடுக்க
100யூரோ பிச்சைதாவென வேலையிடங்களில் பல்லிழித்து
வாங்கும் 100ஐவிட ஆயிரம் வதைவாங்கும் எம்துயர் யார் புரிந்தீர்....?
ஓமோம் நாங்களெல்லாம் பெரியவர்களல்லவா (உங்கள் பாசையில்)

'அம்மா சப்பாத்துப் பிஞ்சிட்டுது அப்பா யக்கற் வாங்கவேணும்"
காலையழுத பிள்ளையின் முகம் வேலையிலும் வந்து நிற்கும்
பிள்ளைகட்கு வரும் காசையும் நாம் சுளையாய் அனுப்புவது யாருக்காம்...?
நம்பிள்ளை அனுபவிக்க வேண்டிய சுகமெல்லாம்
அண்ணனும் , தம்பியும் , அக்காளும் ,
அக்காளின் பிள்ளையும் பழங்கிளங்களுமல்லவா அனுபவிக்கிறார்....?
பிய்ந்த சப்பாத்துக்கு ஒட்டுப்போட்டு , கிளிந்த யக்கற்றுக்குத் தையல்போட்டு
எம் பிள்ளை பழையதையே திரும்பிப்போடும்.
அங்கோ ஆளுக்கொரு சேமிப்பும் , ஆடம்பர ஆடைகளும்
பொழுதுபோக்கி அழுதுவடிக்க மெகாசீரியலும் புதுபுதுப்படங்களும்
அரட்டையடித்து சுகம் விசாரித்து கலோப்பேசி வானலையில் குரல் காட்ட
சக்தியும் , தென்றலும் , சூரியனும் துணையாக அவர்க்கேது குறையங்கு....?
ராசவாழ்க்கையென்பது அங்கெல்லோ உள்ளது.
சத்தியமாய் சொல்கிறோம் இங்கு எம்வயிற்றில் பிறந்த பிள்ளைகள்தான்
பாவத்தின் சின்னங்கள்.
இன்னும் துயிரிங்கு லட்சலட்சமாய் கிடக்கிறது
சொல்ல நேரமில்லை. இல்லை சொல்லியழுதென்ன செய்யப்போகிறீர்....!

அட்டைகள் நீங்கள் உறிஞ்சுமட்டும் உறிஞ்சிவிட்டீர் - நாம்
பிச்சைக்காரர் பொய்சொல்லி அன்னியன் பணம்குடிக்கும் பெருச்சாளிகள்
எல்லாம் சொல்வீர்கள் ஏனெண்டா உங்களுக்கு வேண்டிதெல்லாம் கறந்தாச்சுத்தானே
இனியென்ன கவலை.....!

ஐயா கம்பவாரிதி !
இலக்கியம் வளர்க்கும் நீங்கள் புலம்பெயர்ந்தோரைப் பழித்திட்ட பத்திக்கு
இடம்தந்த இதழ்கூட இந்திய ராணுவத்திற்கு 'ஜெய்கிந்த" சொன்ன இதழ்தானே.....?
மறந்திருப்பீர் எல்லாம் ஆனால் மறக்க முடியாதய்யா எதையும்.....!
இலக்கியம் உங்கள் மூச்சென்று நீர் உரைப்பினும்
கொழும்பானுக்கு வால்பிடித்து இலக்கியப்பரிசு வாங்க மட்டுமே நீங்களெல்லாம் லாயக்கு.
சரித்திரம் சொல்ல எங்கள் இனத்தின் சரித்திரம் படைக்க உங்களால் முடியாது
ஏனெனில் யதார்த்தம் உங்கள் கண்களுக்கு து}ரமய்யா.....

26.09.03.
Reply


Messages In This Thread
எனது பதில் - by thambythasan - 09-25-2003, 05:06 PM
[No subject] - by sOliyAn - 09-25-2003, 06:18 PM
[No subject] - by sOliyAn - 09-25-2003, 06:45 PM
[No subject] - by Ilango - 09-25-2003, 09:37 PM
[No subject] - by Kanani - 09-26-2003, 01:05 AM
[No subject] - by sOliyAn - 09-26-2003, 01:44 AM
[No subject] - by Mathivathanan - 09-26-2003, 02:03 AM
[No subject] - by shanthy - 09-26-2003, 07:30 AM
[No subject] - by yarl - 09-26-2003, 07:36 AM
[No subject] - by Kanani - 09-26-2003, 08:12 AM
[No subject] - by yarl - 09-26-2003, 09:46 AM
[No subject] - by veera - 09-26-2003, 10:27 AM
[No subject] - by Mathivathanan - 09-26-2003, 11:26 AM
[No subject] - by kuruvikal - 09-26-2003, 12:28 PM
[No subject] - by veera - 09-26-2003, 12:32 PM
[No subject] - by veera - 09-26-2003, 12:36 PM
[No subject] - by Paranee - 09-27-2003, 09:20 AM
[No subject] - by kuruvikal - 09-27-2003, 10:39 AM
[No subject] - by sOliyAn - 09-27-2003, 12:05 PM
[No subject] - by kuruvikal - 09-27-2003, 12:14 PM
[No subject] - by Paranee - 09-27-2003, 01:11 PM
[No subject] - by Kanani - 09-27-2003, 03:24 PM
[No subject] - by Paranee - 09-27-2003, 03:32 PM
[No subject] - by kuruvikal - 09-27-2003, 08:53 PM
[No subject] - by kuruvikal - 09-27-2003, 09:02 PM
[No subject] - by Mathivathanan - 09-28-2003, 12:30 AM
[No subject] - by Paranee - 09-28-2003, 05:13 AM
[No subject] - by ampalathar - 10-03-2003, 02:53 PM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 06:09 PM
[No subject] - by ampalathar - 10-03-2003, 07:35 PM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 07:40 PM
[No subject] - by Paranee - 10-04-2003, 03:57 PM
[No subject] - by shanmuhi - 10-22-2003, 08:49 PM
[No subject] - by Saniyan - 10-23-2003, 12:30 AM
[No subject] - by Kanakkayanaar - 10-23-2003, 07:31 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)