06-02-2005, 01:19 PM
'காட்பாதர்' படத்தில் புகை பிடிக்கும் காட்சி- குழப்பத்தில் இயக்குனர்
'காட்பாதர்' படத்தில் அஜித் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்தகாட்சி வரும் பிண்ணனி செட்டுக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாம்.
மத்திய அரசு இந்த தடை அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் கே.எஸ். ரவிக்குமாரிடம் இதுபற்றி கருத்து கேட்டபோது தனது குமுறலை கொட்டி தீர்த்தார்.
"சிகரெட் தயாரிக்கும் கம்பெனியை மூடிவிட்டு சினிமாவில் சிகரெட்டுக்கு தடை விதித்தால், அதை வரவேற்கலாம். சினிமாவில் பிடிப்பதை பார்த்துதான் ஜனங்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் என்ற கருத்தை ஏற்கமாட்டேன்.
சினிமாவில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் வித்தியாசம் காட்டுவதற்காக, வில்லன் சிகரெட் பிடிப்பது போலவும், மது அருந்துவது போலவும் சீன் வைக்கிறோம். அது கூடாது என்றால் எப்படி சினிமா எடுப்பது?
நான் இப்போது டைரக்டு செய்துவரும் 'காட்பாதர்' படத்துக்காக 2கோடி செலவில் செட் போடப்பட்டு, சில முக்கியமான காட்சிகளை படமாக்கியிருக்கிறோம். அதில், அஜித்குமார் சிகரெட் பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதிலிருந்து சிகரெட்டை மட்டும் அழிக்க முடியுமா? அந்த காட்சியை மீண்டும் படமாக்க வேண்டும் என்றால் மேலும் 2 கோடி செலவாகும். அந்த பணத்தை அரசாங்கம் கொடுக்குமா? தயாரிப்பாளரின் நஷ்டத்தை யார் ஈடுகட்டுவது?
இதுபற்றி சென்சார் போர்டில் முறையிடுவதா, எங்கள் யூனியனில்(டைரக்டர்கள் சங்கத்தலி) முறையிடுவதா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்." என்று முடித்த கே.எஸ்.ரவிக்குமாரின் முகத்தில் கோபம் புகைந்து கொண்டேயிருந்தது.
சினி சவுத்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>