06-02-2005, 12:46 PM
நெதர்லாந்தில் இன்று கருத்தறியும் வாக்கெடுப்பு
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41207000/jpg/_41207333_stem_203_afp.jpg' border='0' alt='user posted image'>
<b>அம்ஸ்ரடம் நகரின் வாக்களிப்பு நிலையம் ஒன்று</b>
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான புதிய அரசியல் சாசனம் தொடர்பாக நெதர்லாந்து நாட்டில் மக்கள் மத்தியில் இன்று கருத்து அறியும் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இந்த வாக்கெடுப்பு முடிவு நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தாது, ஆனாலும் 30 விழுக்காட்டுக்கும் கூடுதலான மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டால், வாக்களிப்பின் முடிவில் அவர்களது கருத்தை நாடாளுமன்றம் ஏற்று நடக்கும் என்று நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்புக்கு ஆதரவான வாக்குகளுக்கும், எதிரான வாக்குகளுக்கும் இடையிலான இடைவெளி நிரப்ப முடியாததாக இருக்கும் என்றும், பெரும்பான்மை மக்கள் எதிராக வாக்களிப்பார்கள் என்றும் நெதர்லாந்தில் முன்னைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
மூன்று நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் 55 வீதமான மக்கள் அரசியலமைப்பை எதிர்த்து வாக்களித்தனர்.
BBC தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>