Yarl Forum
ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சாசனம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சாசனம் (/showthread.php?tid=4188)



ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சாசனம் - Mathan - 05-30-2005

ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சாசனம் குறித்து பிரான்சில் கருத்து வாக்கெடுப்பு

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41190000/jpg/_41190165_ouinon203ap.jpg' border='0' alt='user posted image'>

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அரசியல் சாசனத்தை ஆதரிப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இன்று பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது.

ஒன்றியத்தின் எதிர்காலத்தை வரையறுப்பதற்கான இந்த சாசனம் எதிர்கொள்ளும் மிகவும் கடுமையான சவால் இதுவென்றும் கூறப்படுகிறது.

இந்த அரசியலமைப்பு ஏற்றுக்கொள்லப்பட வேண்டுமானால் அது அனைத்து 25 உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாக வேண்டும்.

ஆனால் இதனை மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு விட்ட முதலாவது நாடு பிரான்ஸாகும்.

BBC Tamil


- Mathan - 05-30-2005

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான புதிய அரசியல் சாசனம் குறித்து பிரஞ்சு மக்கள் வாக்களிக்கின்றனர்.

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41182000/gif/_41182131_eu_voting4_gra203.gif' border='0' alt='user posted image'>
பிரான்சில் கருத்துக் கணிப்பு நிலவரத்தைக் காட்டும் படம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் சாசனம் குறித்து பிரஞ்சு வாக்காளர்கள் இன்று முடிவு வழங்கவிருக்கிறார்கள்.

இந்த கருத்து வாக்கெடுப்பு குறித்த கடைசியில் நடந்த கருத்து கணிப்பில் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவு இல்லை என்ற அணியே 10 புள்ளிகள் முன்னணியில் இருப்பதாகக் தெரியவருகிறது.

ஆனால் எப்படி வாக்களிப்பது என்று இன்னும் தீர்மானிக்காமல் இருக்கும் 20 சதவீத வாக்காளர்களை கடைசி நிமிடத்திலாவது புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவாக மாற்றிவிடலாம் எனறு பிரஞ்சு அரசு நம்புகிறது.

இந்த புதிய அரசியல் சாசனம், ஆங்கிலேயர்கள் பாணியில் ஒரு போட்டி நிறைந்த பொருளாதார அமைப்பைக் கொண்டுவரும் இதனால் பிரான்சில் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் தீவிரப்படும் என்று பிரச்சாரம் செய்து, புதிய அரசியல் சாசனம் வேண்டாம் என்று கூறும் அணி பிரஞ்சு மக்கள் பலரை தம் பக்கம் இழுத்திருக்கிறது.

BBC தமிழ்


- Mathan - 05-30-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41198000/jpg/_41198659_frenchno_ap203b.jpg' border='0' alt='user posted image'>

தற்போது வெளிவந்துள்ள செய்திகளின்படி 55 வீதமான பிரஞ்சு மக்கள் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சாசனத்தை எதிர்த்து வாக்களித்துள்ளார்கள்,


- Mathan - 05-30-2005

இப்படியான பொதுவான ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அதில் நீங்கள் வசிக்கும் நாடு இணைய வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? உங்கள் கருத்துக்களை சொல்லுங்க்ள். பிரித்தானியாவில் வசிப்பவர்கள் பொதுவாக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணணவதையோ அல்லது அரசியல் சாசனத்தை ஏற்பதையோ விரும்புவதில்லை.


- shiyam - 05-30-2005

நடந்து முடிந்த தேர்தலில் 63 வீத வாக்கு பதிவாகியுள்ளன அதில் 55வீதமானவர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்


- sinnappu - 05-30-2005

சுவிசில ஒரு வாக்கெடுப்பு வருது ஐரோப்பி ஒன்றியத்துக்கு அல்ல சங்கன் இல சேருவாதா இல்லையா எண்டு
ஐீன் 5 இல நடக்கிது
பிரச்சாரம் பலமாக நடக்கிது வழமையா எதையும் எதிர்க்கும் கட்சி SVPஇதையும் எதிர்க்கிது
ம் ம் பாப்பம் சுவிசு இன்னும் சேரவில்லை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரவில்லை சங்கன் இல இனைந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில இணையவேண்டி வரலாம்
வந்தால் கூ தான்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எது எப்படி எண்டாலும் நாம என்ன செய்ய ஐரோப்பிய ஒன்றியம் என்டு தொடங்கி கண்ட மிச்சம் வேலையில்லாத்திண்டாட்டம் (எனது பார்வையில )உதுக்கு பெரிய உ+ம் Germany இப்ப அங்காலை போலன் செக்கன் எல்லாம் சேந்திட்டினம் துருக்கியும் யுகோ வும் மட்டும் தான் பாக்கி ம் ம்
பாப்பம் வயசு வேற போகுது
எங்க முடியுதோ தம்பி மதன் சொல்லப்பு இனி
:wink: :wink: :wink: :wink: :wink:


- sathiri - 05-31-2005

ம் உந்த செங்கனிலை சுவிசும் சேந்தா சும்மாயிருந்து சாப்பிடுற சாத்திரியும் வேலைக்கு போக வேண்டி வரபோகுது :twisted:


- Mathan - 06-02-2005

நெதர்லாந்தில் இன்று கருத்தறியும் வாக்கெடுப்பு

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41207000/jpg/_41207333_stem_203_afp.jpg' border='0' alt='user posted image'>
<b>அம்ஸ்ரடம் நகரின் வாக்களிப்பு நிலையம் ஒன்று</b>

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான புதிய அரசியல் சாசனம் தொடர்பாக நெதர்லாந்து நாட்டில் மக்கள் மத்தியில் இன்று கருத்து அறியும் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்த வாக்கெடுப்பு முடிவு நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தாது, ஆனாலும் 30 விழுக்காட்டுக்கும் கூடுதலான மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டால், வாக்களிப்பின் முடிவில் அவர்களது கருத்தை நாடாளுமன்றம் ஏற்று நடக்கும் என்று நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவான வாக்குகளுக்கும், எதிரான வாக்குகளுக்கும் இடையிலான இடைவெளி நிரப்ப முடியாததாக இருக்கும் என்றும், பெரும்பான்மை மக்கள் எதிராக வாக்களிப்பார்கள் என்றும் நெதர்லாந்தில் முன்னைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

மூன்று நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் 55 வீதமான மக்கள் அரசியலமைப்பை எதிர்த்து வாக்களித்தனர்.

BBC தமிழ்


- Mathan - 06-02-2005

நேற்று நடந்த இந்த வாக்கெடுப்பில் நெதர்லாந்து மக்களுக்கு ஐரோப்பிய அரசமைப்புக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.


- vasisutha - 06-02-2005

ஜேர்மனியில் யூரோ நாணயத்தை நீக்கப்போவது பற்றி
யோசிக்கிறார்களாம்.. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> செய்தியில் சொன்னார்களே? உண்மையா? :|


- Mathan - 06-02-2005

யூரோ இப்போது பலமடைந்து விட்டதே? ஏன் அப்படி யோசிக்கிறார்கள்?


- Mathan - 06-03-2005

இனி ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சட்டத்தின் எதிர்காலம்?

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/06/20050602135028eujoepardynologo.jpg' border='0' alt='user posted image'>
<b>எதிர்காலம் எப்படி இருக்கும்..</b>

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான வரைவு அரசியல் சட்டம், டச்சு நாட்டு மக்களால் புதன்கிழமை அன்றும், பிரெஞ்சு மக்களால் அதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவும் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, இதிலிருந்து முன்னே செல்ல வழி ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.

இந்த நிலைமையை விவாதிக்க, ஜெர்மன் சான்சலர் ஷ்ரோடரும் பிரெஞ்சு அதிபர் ஷாக் ஷிராக்கும் சனிக்கிழமை பெர்லினில் சந்திக்க உள்ளார்கள்.

இன்று, ஷ்ரோடர், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பதவியை தற்போது வகித்துவரும் லக்ஸம்போர்க் நாட்டில் அவசர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மானுவல் பாரோசோ, இதற்கிடையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உள்ள மூத்த அரசியல்வாதிகளை சந்தித்துள்ளார். இந்த கஷ்டமான நிலை என்று அவர் வர்ணித்த ஒரு நிலையை ஐரோப்பா சமாளிக்க முடியும் என்று அவர் கூறினார்.

ஆனால் இப்போது லேட்வியா இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில், இந்த ஒப்பந்துக்கு அங்கீகாரம் வழங்குவது என்ற வழிமுறையும் தொடர்கிறது.

இன்னும் இரண்டு வார காலத்தில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் இந்த நெருக்கடியைப் பற்றி அனைத்து ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BBC தமிழ்


- Mathan - 06-06-2005

ஐரோப்பிய அரசியல் சாசனத்துக்கான மக்கள் கருத்தறியும் நடவடிக்கைகளை பிரிட்டிஷ் இடை நிறுத்தியுள்ளது

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/06/20050606054609straw203.jpg' border='0' alt='user posted image'>
<b>பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ</b>

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஒரு அரசியல் சாசனம் குறித்து மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தும் ஏற்பாடுகளை தாம் இடை நிறுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய அரசியல் சாசனத்தை உறுப்புரிமை நாடுகள் அனைத்தும் அங்கீகரிக்கும் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளின் தலவர்கள் பலர் வலியுறுத்தியிருந்த போதிலும், பிரிட்டன் இந்த அறிவித்தலை விடுத்திருக்கிறது.

பிரான்சிலும், நெதர்லாந்திலும் இந்த அரசியல் சாசனத்தை பொது மக்கள் நிராகரித்து ஒரு வாரத்திற்கு பிறகு, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசிய பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ அவர்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவதால் பயன் எதுவும் இல்லை என்றே அரசு கருதுகிறது என்று குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சியின் கட்சியின் வெளியுறவுத்துறைக்கான பேச்சாளர் லியாம் பொக்ஸ் கருத்து வெளியிட்ட போது ஐரோப்பிய அரசியல் சாசனம் செத்து விட்டது என்று வலியுறுத்தினார்.

போலந்து நாடும் கருத்தறியும் வாக்கெடுப்பை தாம் நடத்தப்போவதாக கூறியுள்ளது.

அரசியல் சாசனம் குறித்து கருத்து தெரிவிக்க உறுப்புரிமை நாடுகள் அனைத்துக்குமே ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.

BBC தமிழ்


- இளைஞன் - 06-07-2005

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் சாசனம் - நன்மை தீமை பற்றிய கருத்துக்களை எழுதுங்களேன் மதன்.


- Mathan - 06-07-2005

சரி எனது பார்வையை எழுதுகின்றேன், ஆனால் அவை என்னுடைய சுயநலங்களின் அடிப்டையிலேயே இருக்கும், உண்மையான நன்மை தீமை வேறல்லவா? எனக்கு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதிலோ பொது அரசியல் சாசனத்தை ஏற்பதிலோ பொது நாணயமாக யூரோவை ஏற்பதிலோ விருப்பமில்லை,


- இளைஞன் - 06-07-2005

தமிழர்களாச்சே! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> லன்டன் பவுன்ட்ஸ் யூரோவவிட கூடவாச்சே


- Mathan - 06-10-2005

ஐரோப்பிய அரசியல் சாசனம்: பிரெஞ்சு , ஜெர்மன் தலைவர்கள் கோரிக்கை

ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சாசனம் பிரஞ்சு மற்றும் நெதர்லாந்து வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பிரான்ஸ் நாட்டு அதிபர் ஜாக் ஷிராக்கும், ஜெர்மன் நாட்டு அதிபர் கெர்ஹார்ட் ஷ்ரோடரும் அரசியல் மறு சீராய்வு தேவை என்று குரல் எழுப்பியுள்ளனர்.

இரு தினங்கள் பாரிஸில் சந்தித்த பின்னர் கருத்து வெளியிட்ட அவர்கள், உறுப்புரிமை நாடுகள் அரசியல் சாசனத்தை அங்கீகரிக்க செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டு விவசாயிகளுக்கு பெருமளவு மானியத்தை உறுதிப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றிய விவசாயச் சட்டங்களில் மாற்றமெதுவும் இருக்காது என்றும், ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவுத் திட்டத்தின் விலைத்தள்ளுபடிகளில் பிரிட்டன் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதிபர் ஷிராக் கேட்டிருக்கிறார்.

இதுபற்றி இங்கு லண்டனில் பிரதமர் டொனி பிளார் பேசும் போது, ஐரோப்பிய நிதிவிவகாரங்கள் ஆராயப்படுவதை தான் வரவேற்பார் என்றும் ஆனால் பிரிட்டன் மாத்திரம் தனித்து ஆராய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

BBC தமிழ்