Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்த நாளின் நினைவு இன்று.....!
#1
[size=18]அந்த நாளின் நினைவு இன்று.....!
- சாந்தி ரமேஷ் வவுனியன் -

தீவிழுங்கிச் சாவெழுதும்
சரித்திரம் படைத்திடும்
புலியணியில் படை நடத்தி
பூக்கள் மனதிலும் பூத்தவன்.

காக்கிறோம் என வந்தோரின்
கதைகளெலாம் பொய்யாகி
தமிழர் சாக்கிடங்கில் அடுக்கப்பட
சரித்திரமாய் எழுந்து - எங்கள்
தரித்திரம் துலையவென.....

தானெழுந்து சாவதனை
சந்திக்க நாளெழுதி - தீ
எங்கள் திலீபன்
உண்ணாநோன்பினொடு
உயிர் தேய.....

நல்லைநகர் வீதியிலே
நனைந்து விழிகளெல்லாம்
அழுது வழியனுப்ப
வயிற்றில் தீயேந்தி
வல்லரசின் முகம்நோக்கி
வீரன் திலீபனின்
மரணப்போர்.....

'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்"
கந்தன் சன்னிதியில்
பன்னிருநாள் தவமிருந்து
தன்னையழித்துத் தரணியில்
அகிம்மை எதுவென்றுரைத்து
அணைந்த பிள்ளை
எம் பூமிவிட்டு வானேறி
வருடங்கள் பதினாறாம்.....

நேற்றுப்போல் எல்லாமே.....
நாவடங்கி , மூச்சடங்கி.....
நாமெல்லாம் அழுது நின்ற
அந்த நாளின் நினைவு இன்று.....

அழுவதே எம் விதியென
எழுதியோர் விதியழிய
எழுதுவோம்......,
வீழ்ந்தவர் மீதொரு சத்தியம்
செய்தினி எழுதுவோம்
எங்கள் வீரர் கனவுகள்
வென்றிடும் நாளினி
விடியுது காணுவோம்.

25.09.03.
Reply


Messages In This Thread
அந்த நாளின் நினைவு இன் - by shanthy - 09-26-2003, 06:10 AM
[No subject] - by sOliyAn - 09-26-2003, 01:03 PM
[No subject] - by kuruvikal - 09-26-2003, 05:47 PM
[No subject] - by S.Malaravan - 09-26-2003, 07:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)