Yarl Forum
அந்த நாளின் நினைவு இன்று.....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: அந்த நாளின் நினைவு இன்று.....! (/showthread.php?tid=8083)



அந்த நாளின் நினைவு இன் - shanthy - 09-26-2003

[size=18]அந்த நாளின் நினைவு இன்று.....!
- சாந்தி ரமேஷ் வவுனியன் -

தீவிழுங்கிச் சாவெழுதும்
சரித்திரம் படைத்திடும்
புலியணியில் படை நடத்தி
பூக்கள் மனதிலும் பூத்தவன்.

காக்கிறோம் என வந்தோரின்
கதைகளெலாம் பொய்யாகி
தமிழர் சாக்கிடங்கில் அடுக்கப்பட
சரித்திரமாய் எழுந்து - எங்கள்
தரித்திரம் துலையவென.....

தானெழுந்து சாவதனை
சந்திக்க நாளெழுதி - தீ
எங்கள் திலீபன்
உண்ணாநோன்பினொடு
உயிர் தேய.....

நல்லைநகர் வீதியிலே
நனைந்து விழிகளெல்லாம்
அழுது வழியனுப்ப
வயிற்றில் தீயேந்தி
வல்லரசின் முகம்நோக்கி
வீரன் திலீபனின்
மரணப்போர்.....

'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்"
கந்தன் சன்னிதியில்
பன்னிருநாள் தவமிருந்து
தன்னையழித்துத் தரணியில்
அகிம்மை எதுவென்றுரைத்து
அணைந்த பிள்ளை
எம் பூமிவிட்டு வானேறி
வருடங்கள் பதினாறாம்.....

நேற்றுப்போல் எல்லாமே.....
நாவடங்கி , மூச்சடங்கி.....
நாமெல்லாம் அழுது நின்ற
அந்த நாளின் நினைவு இன்று.....

அழுவதே எம் விதியென
எழுதியோர் விதியழிய
எழுதுவோம்......,
வீழ்ந்தவர் மீதொரு சத்தியம்
செய்தினி எழுதுவோம்
எங்கள் வீரர் கனவுகள்
வென்றிடும் நாளினி
விடியுது காணுவோம்.

25.09.03.


- sOliyAn - 09-26-2003

Quote:தீவிழுங்கிச் சாவெழுதும்
சரித்திரம் படைத்திடும்
புலியணியில் படை நடத்தி
பூக்கள் மனதிலும் பூத்தவன்.
அற்புதம்!


- kuruvikal - 09-26-2003

பசித்தீயால்
ஈழத்து விடுதலைச்
சுடர் ஏற்றிய
எங்கள் அண்ணா...
நினைவில் உங்கள் கவிதை
சுடருக்குள் ஒளியாகிப்
பிரகாசிக்கிறது...!


- S.Malaravan - 09-26-2003

அந்த நாளின் நினைவு இன்று
அரக்கரின் அரியாசனத்துக்கெதிராய்
அகிம்சை போர் புரிந்த திலீபன் அண்ணா
அடக்கமானதன் பதினாறாம் அண்டா? நேற்ரு போலல்லவா. இல்லை
அடக்கமானது அன்று தமிழீழ மக்களின் மனத்துள்
ஆயிரம் துன்பம் வந்தாலும் ஏன் சாவு கூட வரினும் புலிகள் கொண்ட கொள்கை தளரார்
ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை ஆழும். சவுதனை
ஆர அணைத்து கல்லறைகளில் துயிலும் மாவீரருடன் திலீபன் அண்ணாவினதும் உறுதி.
:twisted: :evil: :twisted: