06-02-2005, 09:53 AM
kuruvikal Wrote:aswini2005 Wrote:kirubans Wrote:தமிழ் ஈழ விடுதலையை ஆதரிக்கின்றோம் என்று வாயார சொல்லும் பலர், உள்ளூற இப்படிதான் வாழ்கின்றார்கள். இவர்கள் தமிழீழ போராட்டம் சிங்களவனிடமிருந்து விடுதலை பெற மட்டும்தான் என்று கருதுபவர்கள். போராட்டத்தின் மூலம் சாதி அடக்குமுறையை, பிரதேச அடக்குமுறையை, பெண் அடக்குமுறையை இல்லாமலாக்க இவர்கள் மனதார விரும்புவதில்லை.
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறனும் இன்றி வஞ்சனை கொள்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி
பாரதியின் இந்த வரிகள்தான் கிருபன் இங்கு நடைமுறையில் இருக்கிறது. தேசம் விடிவேண்டும் நாங்கள் தேசியத்தின் ஆதாரங்கள் என்றெல்லாம் புலம்பும் பலரது நடைமுறை இதுவாகத்தானிருக்கிறது. ஒரு தேசம் என்பதற்குள் சாதி சமயம் பெண் அடக்குமுறையெல்லாம் இருக்கிறது என்பதை இவர்கள் புரியாது அல்ல புரிந்தும் புரியாமல் நடிக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தேசம் தேசியம் தனிச்சொற்களே அன்றி இலட்சியம் இல்லை.
இப்படி அன்று எங்கள் தலைவனும் இருந்திருந்தால் இன்று ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியின் மாற்றங்கள் தலைநிமிர்வுகள் ஆனந்தசங்கரியின் அரசியலாகத்தான் இருந்திருக்கும்.
ஆனால் காலம் எங்களுக்குத்தந்த கடவுளின் காலத்தில் அவரை நேசிக்கின்றோம் எனச்சொல்லும் பலரது விடுதலை உணர்வு வெறும்வாய்ச் சொல்லாக இருப்பது வேதனையே அன்றி வேறில்லை.....
பிராமணியம் பற்றி எழுவோர் பேசுவோர் கூட பிராமணியத்தை புலம்பெயர் பரப்பிலும் பரப்பிக்கொண்டும் பயன்படுத்திக் கொண்டும்தான் இருக்கிறார்கள்.
ஏன் பாரதியைக் கூப்பிடுகிறீர்கள்...அவனும் பிராமணியன் தானே....! பிராமணியத்தை எதிர்ப்பவர்கள் ஏன் பிராமணியை அழைக்கின்றீர்கள்...!
கூப்பாட்டுக்கு உதவிக்கா...!
இவர்கள் மட்டும் தேசிய தேசியம் காப்பவர்கள்...அதுதான் புலத்தில் பெண்ணடிமைத்தனம் பேசிப் பொழுது கழிக்கின்றனர் போலும்....! புலத்தில் பேச எதுவுமில்லை...செயற்படுத்த யாருமில்லை...என்ற நிலைதான் இருக்கிறது...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதுசரி நீங்கள் என்ன சாதியண்ணா? அவையாவது பறவாயில்ல பொழுதுபோகாட்டித்தான் பெண்ணடிமைத்தனம் பேசுவினம். நீங்கள் கனவிலகூட மலரோட காதலெண்டு புசத்துறீங்களாமண்ணா? உண்மையே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 