09-25-2003, 09:37 PM
கம்பவாரிதி இ.ஜெயராஜ் Wrote:ஒரு நிமிஷம் பொறுங்கள்!
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்க வேண்டாம்.
உங்களுக்காக இதை நான் எழுதவில்லை.
என்ன முறைத்துப் பார்க்கின்றீர்கள்?
புத்தகம் உங்களுடையதானலும், கட்டுரை என்னதல்லவா?
யார் படிக்க வேண்டும் என நான்தானே சொல்லவேண்டும்.
'இந்த லூசன்" எப்பவும் இப்படித்தான்.
உங்கள் முணுமுணுப்புக்கள் காதில் விழுகின்றது.
நீங்கள் என்னை திட்டினாலும்
இந்தக் கட்டுரை உங்களுக்கானதல்ல என்பதுதான் உண்மை.
பின் யாருக்கு இக்கட்டுரையெனக் கேட்கிறீர்களா?
இந்த மண்ணில் பிறந்து,
இன்று உலகெல்லாம் பரவியிருக்கும்,
என் அன்பான இரத்தத்தின் இரத்தங்களுக்காகவே இக்கட்டுரை.
சில நாள் பலபிணிச் சிற்றறிவு உடைய மனிதர்கள்.
தேர்ந்தெடுத்து தேவையானதைப் படிக்க வேண்டும் என்று,
அறிவிற்காகக் கல்வியென நினைத்த,
சில பழைய பைத்தியக்காரப் புலவர்கள் சொல்லியிருக்கிறார்களாம்,
அதனால்தான்,
உங்களுக்காக எழுதப்படாத இக்கட்டுரையை,
படிக்க வேண்டாம் எனச்சொன்னேன்.
சரி, நீங்கள் இனி அடுத்த கட்டுரைக்குப் போகலாம்!
என்ன இவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்.
பத்திரிகை படிப்பதையே அறிவென்று நினைக்கும் உங்களை,
திருத்தவா முடியும்?...................
இதற்கு மேல் எதையும் நான் வாசிக்கவில்லை

