06-02-2005, 09:21 AM
MUGATHTHAR Wrote:அடங்கு பிள்ளை அடங்கு.................முகத்தார் நீங்கள் கூறும் அந்தக்கம்பி நீட்டலின் பின்னால் நின்றதும் ஒரு ஆண்தானே. அங்கு தவறு என்பது இருபக்கமும் இல்லையா ? அதற்காக அந்தச்செயலை ஊக்கும் ஊக்கிகளாக நான் கருத்தெழுதவில்லை. நீங்கள் குறிப்பிடுவது போல பெண்கள் தரப்பிலும் நிறையவே நீங்கள் சொன்னதைவிட ஆயிரமாயிரம் கதைகள் சொல்ல இருக்கிறது.(இங்கு பெண்கள் தரப்பு என்பது பெண்களது அவலங்களை குறிப்பிடுகிறேன் ஐயா) இங்கு நாம் இப்படியான விடயங்களை மட்டும் கவனமெடுத்து கருத்தெழுதி முரண்பாடுகளை வளர்ப்பதல்ல நோக்கம். அதைப்புரிந்து கொள்ளுங்கள். தீர்வுகள் இன்னும் பெண்ணுக்கு திணிப்புளாகவே இருக்கிறது. மேற்கூறிய உங்கள் வாதப்படி இந்தத் திணிப்புக்களையும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள் என்பது புரிகிறது.
இப்ப ஒரு உதாரணத்துக்கு புருஷன் செட்டப் ஒண்டை வச்சிருந்தால் மனுசிக்காரி கண்டு பிடித்து விடுவாள் இது மனுசிக்காரியின் கெட்டித்தனம் எண்டு நினையாதைங்கோ... ஆம்பிளை ஒரு ஓட்டவாய் களவு செய்தாலும் மூடி மறைக்கத் தெரியாது...ஆன பெம்பிளை தவறு செய்ய நினைச்சாள் எண்டால் பக்கத்து பாயிலை புருஷன் இருந்தாலும் பயப்பிட மாட்டாள் அப்பிடி ஒரு நெஞ்சளுத்தம் துணிவு அவைக்கு இருக்கு எனதனுபவத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் ஒருவர் எந்தவகை கெட்ட பழக்கவழக்கங்களும் இல்லாமல் பணத்தை மட்டுமே குறியாக இருந்து காசை ஊரிலிருக்கும் மனைவிக்கு அனுப்பினார்; அவ அந்த காசோடு இன்னோரு ஆளுடன் கம்பி நீட்டி விட்டா. அந்த ஆணுக்காக அனுதாபப்பட மாட்டீர்களா? அப்படிபட்ட பெண்களும் எங்கள் சமூகத்தில் தானே இருக்கிறார்கள் நீங்கள் யுரோப்பில் நல்ல ஒரு குடும்ப வாழ்க்கை அமையப்பெற்ற நிலையில் கருத்துக்கள் எழுதுவது சுலபம் இப்படியான சம்பவங்களை நேரடியாக பாத்த ஆண்கள் தங்கள் குடும்பம் . மனைவி என கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் அடக்கி வைச்சிருக்கிறது என கூறுவீர்கள் ஏனெலில் சில ஆண்களுக்கு இந்த சமூகத்தை விட அவர்களின் குடும்பங்கள் தான் முக்கியம் ஆன படியால் அவர்களையும் குறை கூற முடியாது.
தன்மனைவி மீது குடும்பம்மீது நம்பிக்கையில்லாமல் எச்சரிக்கை என்ற பெயரில் செய்யும் அடக்குமுறையை குடும்பம் மீதான அக்கறை கவனம் என்றால் இது என்னய்யா முகத்தார் சிறைக்கூடமா நடாத்துகிறீர்கள் ?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஒவ்வொருவருக்கும் தனது குடும்பம்தான் முக்கியம் தன்குடும்பத்தை நல்லபடியாக கவனிக்கும் ஆணாலும் பெண்ணாலும்தான் நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும். இல்லை சமுகத்தைவிட என் குடும்பம்தான் முக்கியம் என்பது தன்னையும் தன்குடும்பத்தையும் ஏமாற்றுதலுக்குச் சமானம்.
:::: . ( - )::::

