06-02-2005, 05:47 AM
[b]உன் முருகனும் என் அல்லாவும்.
உன் முருகனும்
என் அல்லாவும்
நம் காதலிடம்
பேசிப்பார்க்கட்டும் !
பிறகு முடிந்தால்
நம் இருவரையும்
பிரித்துக் கொள்ளட்டும் !!
என் மூக்கிற்கு
மற்றொரு வேலை !
என் மூச்சுக் காற்றில்
உன் நினைவுகளை
வடிகட்டுவது !!
அதிகம் செல்லம்
கொடுத்து விட்டேன் !
உன்
நினைவுகளின் குறும்பு
தாங்க முடியவில்லை !!
நான் முத்தத்தைத் தானே
கேட்டேன் !
உன்னை யார்
வெட்கத்தைத்
தரச் சொன்னது !!
நீ சிரித்தால்
உன் கன்னத்தில் குழி !
என்
இதயத்தில் பள்ளம் !!
அந்தக் கரையில்
நீ !
இந்தக் கரையில்
நான் !
கேலி செய்து சிரிக்கிறது
இடையில் செல்லும் நதி !!
நீ அகன்றாலும்
நீங்குவதாக இல்லை !
மனப்பாடம் ஆகிவிட்ட
உன் மச்சங்கள் !!
தாமதமாக வரும்
உனக்காகக்
கல்லடி வாங்குகிறது
குளம் !!
நான் அதிகம்
செலவு செய்கிறேன்
உனக்கான என் நேரத்தை !
நீ
சேமித்து வைக்கிறாயோ . . .
எனக்கான உன் நேரத்தை !!
நீ
போன பின்புதான்
சுடுகிறது
என் முகத்தில் அடிக்கும் வெயில் !!
எனக்காக நீ
காத்திருந்தாய் !
உனக்காக நான்
காத்திருந்தேன் !!
இன்று
நமக்காகக் காதல்
காத்திருக்கிறது !!
திருமணம் ஆகும்
முன்னே
தாயாகி நிற்கிறாய் !
நீதானே பெற்றெடுத்தாய்
இந்தக் கவிதைகளை !!
உனக்காகக்
காத்திருந்து
என் இதழ்கள்
சருகாகி விட்டன !!
எதேச்சையாக
உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
எதேச்சையாக
நீயும்
என்னைப் பார்க்கிறாய் !!
உன் முருகனும்
என் அல்லாவும்
நம் காதலிடம்
பேசிப்பார்க்கட்டும் !
பிறகு முடிந்தால்
நம் இருவரையும்
பிரித்துக் கொள்ளட்டும் !!
என் மூக்கிற்கு
மற்றொரு வேலை !
என் மூச்சுக் காற்றில்
உன் நினைவுகளை
வடிகட்டுவது !!
அதிகம் செல்லம்
கொடுத்து விட்டேன் !
உன்
நினைவுகளின் குறும்பு
தாங்க முடியவில்லை !!
நான் முத்தத்தைத் தானே
கேட்டேன் !
உன்னை யார்
வெட்கத்தைத்
தரச் சொன்னது !!
நீ சிரித்தால்
உன் கன்னத்தில் குழி !
என்
இதயத்தில் பள்ளம் !!
அந்தக் கரையில்
நீ !
இந்தக் கரையில்
நான் !
கேலி செய்து சிரிக்கிறது
இடையில் செல்லும் நதி !!
நீ அகன்றாலும்
நீங்குவதாக இல்லை !
மனப்பாடம் ஆகிவிட்ட
உன் மச்சங்கள் !!
தாமதமாக வரும்
உனக்காகக்
கல்லடி வாங்குகிறது
குளம் !!
நான் அதிகம்
செலவு செய்கிறேன்
உனக்கான என் நேரத்தை !
நீ
சேமித்து வைக்கிறாயோ . . .
எனக்கான உன் நேரத்தை !!
நீ
போன பின்புதான்
சுடுகிறது
என் முகத்தில் அடிக்கும் வெயில் !!
எனக்காக நீ
காத்திருந்தாய் !
உனக்காக நான்
காத்திருந்தேன் !!
இன்று
நமக்காகக் காதல்
காத்திருக்கிறது !!
திருமணம் ஆகும்
முன்னே
தாயாகி நிற்கிறாய் !
நீதானே பெற்றெடுத்தாய்
இந்தக் கவிதைகளை !!
உனக்காகக்
காத்திருந்து
என் இதழ்கள்
சருகாகி விட்டன !!
எதேச்சையாக
உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
எதேச்சையாக
நீயும்
என்னைப் பார்க்கிறாய் !!
Å¡ú¸ ¾Á¢ú..ÅÇ÷¸ ¾Á¢ú.
*****************************************
«ýÒ¼ý,ã÷ò¾¢
*****************************************
«ýÒ¼ý,ã÷ò¾¢

