06-02-2005, 01:35 AM
MUGATHTHAR Wrote:அடங்கு பிள்ளை அடங்கு.................
இப்ப ஒரு உதாரணத்துக்கு புருஷன் செட்டப் ஒண்டை வச்சிருந்தால் மனுசிக்காரி கண்டு பிடித்து விடுவாள் இது மனுசிக்காரியின் கெட்டித்தனம் எண்டு நினையாதைங்கோ... ஆம்பிளை ஒரு ஓட்டவாய் களவு செய்தாலும் மூடி மறைக்கத் தெரியாது...ஆன பெம்பிளை தவறு செய்ய நினைச்சாள் எண்டால் பக்கத்து பாயிலை புருஷன் இருந்தாலும் பயப்பிட மாட்டாள் அப்பிடி ஒரு நெஞ்சளுத்தம் துணிவு அவைக்கு இருக்கு எனதனுபவத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் ஒருவர் எந்தவகை கெட்ட பழக்கவழக்கங்களும் இல்லாமல் பணத்தை மட்டுமே குறியாக இருந்து காசை ஊரிலிருக்கும் மனைவிக்கு அனுப்பினார்; அவ அந்த காசோடு இன்னோரு ஆளுடன் கம்பி நீட்டி விட்டா. அந்த ஆணுக்காக அனுதாபப்பட மாட்டீர்களா? அப்படிபட்ட பெண்களும் எங்கள் சமூகத்தில் தானே இருக்கிறார்கள் நீங்கள் யுரோப்பில் நல்ல ஒரு குடும்ப வாழ்க்கை அமையப்பெற்ற நிலையில் கருத்துக்கள் எழுதுவது சுலபம் இப்படியான சம்பவங்களை நேரடியாக பாத்த ஆண்கள் தங்கள் குடும்பம் . மனைவி என கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் அடக்கி வைச்சிருக்கிறது என கூறுவீர்கள் ஏனெலில் சில ஆண்களுக்கு இந்த சமூகத்தை விட அவர்களின் குடும்பங்கள் தான் முக்கியம் ஆன படியால் அவர்களையும் குறை கூற முடியாது.
இப்படி சிற்சில உதாரணங்களைக்காட்டி ஒட்டுமொத்தமாக பெண்களை இழிவுபடுத்த வேண்டாம், அத்துடன் இந்த உதாரணத்திலுள்ள ஆணின்மீது காட்டும் பரிதாபத்தை வைத்து, மொத்த அடக்கியாளும் ஆண் வர்க்கத்தையே பரிதாபக் கண்ணோடு பாருங்கள் என்று கூறவும் வேண்டாம்.
உங்களது முதல் வசனமே, நீங்கள் எத்தகையவர் என்பதைக் காட்டுகின்றது. பிரச்சினைகளைப் பற்றி அலசி ஆராய ஒரு பெண் முன்வந்தால் அதப் பற்றி ஆரோக்கியமாக விவாதம் புரியாமல் அடக்கியாள முயல்கிறீர்கள் என்று தெரிகின்றது. இதையே ஒரு மேடையில் உங்கள் முன் நேருக்கு நேர் பேசினால், உங்கள் வாயை முந்தி உங்கள் கைதான் பேசும் என்றும் புரிகின்றது.
பிராமணியச் சிந்தனையை ஈழத்தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகின்றது. எனினும் அதை நம்பமுடியாது. ஏனெனில் ஈழத்தமிழரின், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களின் பேச்சையும், நடப்புக்களையும் பார்த்தால் அவர்கள் பிராமணியத்தை இன்னொருமுறையில் வளர்க்க முற்படுகிறார்கள் என்பது தெளிவு.
எவராவது நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும், தாங்கள்
* பெண்களை அடக்கியாள விரும்பவில்லை என்று
* பெண்ணின் கருத்தை சிறிய/பெரிய விடயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு ஏற்கின்றூம் என்று
* மனைவியை, சகோதரியைப் பார்த்து "நீ சும்மா இரு. உனக்கு ஒன்றும் தெரியாது" என்று சொல்லுவதில்லையென
* யாராவது ஒரு தமிழனைச் சந்த்திதால் "ஊரில் எவ்விடம்" என்று தொடங்கி, அவரின் வீடு எங்கு இருக்கின்றது என்று அறிந்து அவர் எந்த சாதியாக இருக்கக்கூடும் என்று ஊகிப்பதில்லயென
இப்படிப் பலவற்றை அடுக்கலாம்.
தமிழ் ஈழ விடுதலையை ஆதரிக்கின்றோம் என்று வாயார சொல்லும் பலர், உள்ளூற இப்படிதான் வாழ்கின்றார்கள். இவர்கள் தமிழீழ போராட்டம் சிங்களவனிடமிருந்து விடுதலை பெற மட்டும்தான் என்று கருதுபவர்கள். போராட்டத்தின் மூலம் சாதி அடக்குமுறையை, பிரதேச அடக்குமுறையை, பெண் அடக்குமுறையை இல்லாமலாக்க இவர்கள் மனதார விரும்புவதில்லை.
<b> . .</b>

