06-01-2005, 07:06 PM
Quote:நிதர்சன் மன்னிக்கவும் அறியாமையை அறியாமல் கருத்தாடும் உங்களுக்கு திரும்பத்திரும்ப சொல்லும் விடயங்களை விளக்குவதில் பயனில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.அறியாமல் கருத்தாட நான் ஒன்றும் ற்றவனோ விதண்டாவாதம் பேசுவதற்க்கு களதத்தில் கருத்தெழுதவும் இல்லை. உங்கள் கருத்துக்களை நான் புரிந்து கொள்கிறேன் ஆனால் உங்கள் கருத்தில் இருக்கம் கருத்துக்களில் யதார்த்தமற்ற தன்மையையும் புரிந்து கொள்ள உங்களால் முடியாமல் போனது உங்கள் துரதிஸ்டமே!
Quote:பெண்அடக்குமுறை என்பது உங்கள் வீட்டுக்குள்ளும் பிரியோகிக்கப்படுகிறது என்பதை உங்கள் கருத்துக்கள் புலப்படுத்தி நிற்கிறது.சிலவற்றை உங்களைப்போல நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்க்கு காரணமாக பெண் இருக்கிறாள் என்பதை தான் சொல்கிறேன். (80 வீதமான பெண்கள்)
Quote:கனடாவில் நடக்கும் வியடங்களை இங்கு நிறையவே எழுதலாம். ஆனால் அதற்கான நேரம் இல்லை. நானும் வேலை குடும்பம் குழந்தைகள் என் அறிவு மேம்பாட்டுக்கான படிப்பு ää சமூக வேலைகள் என நிறையவே தலையில் வைத்துக்கொண்டே இக்களத்தில் கருத்தாடுகிறேன்.கனடாவில் பெண்கள் தவறாக நடக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ள வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்....ஆண்கள் இங்கு தவறு செய்ய வில்லை என்று நான் ஒரு போதும் சொல்ல வில்லை
உங்களைப் போலவே.. சமூக...குடும்ப...கல்வி...வேலை...இணையம்.... என்று நானும் நிறைய தலையில் வைத்துக் கொண்டு தான் கருத்தாடுகின்றேன்...அதனால் தான் எனது கருத்துக்களில் தாமதம் ஏற்ப்படுகின்றது..
Quote:சமூக வேலையாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப்பெண்களுக்கான உதவிகளில் ஒரு சேவகியாக இருக்கிறேன். உலகில் பெண்களின் பாதிப்புக்களை நீங்கள் கேட்டே அறிந்திருக்கிறீர்கள். ஆனால் தினந்தினம் சந்திக்கும் பாதிப்புற்ற பெண்களின் சோகங்களை சுமைகளை இங்கு எழுத எனக்கு நேரமில்லை. அவர்களுக்கான ஆக்கபூர்வமான செயலை நம்மால் முடிந்ததை செய்கிறோம்.உங்கள் சேவை வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.. ஆனால் உங்களிடம் தினம் தினம் வரும் பெண்களின் உடனடிப்பிரச்சினைகளுக்கு முடிவு காணமல் பிரச்சனையில் அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து பிரச்சினைகளை தீர்ப்பீர்களாயின் தேவையற்ற பிரிவுகள் வருவதற்க்கு சந்தர்ப்பங்கள் குறையும்
Quote:தனியே பெண்கள் என நீங்கள் கருதுவது எமது தமிழ்ப்பெண்களையே. ஆனால் நான் உலகத்துப்பெண்களுடன் சேர்ந்து எங்கள் பெண்களின் அவலங்கள் பற்றியும் அடக்குமுறை பற்றியும் கதைக்கிறேன்.என்னாலும் உலகத்து பெண்கள் பற்றி பேச முடியும்....மத்திய கிழக்கில் இருக்கும் பெண்கள் முக்காடு போடக்கூடாது என்று போராட்டம் நடாத்துங்கள்.....அவர்களை வேலைக்கு செல்ல அனுமதிக்குமாறு போராட்டம் நடாத்துங்கள்...அதை விட வெளிநாடுகளுக:கு வந்த பின்னும் அவர்கள் தங்கள் கலாச்சாரம் ன்ற காரணத்தால் தங்கள் முகங்களை மறைத்து முக்காடு போட்டுக்கொண்டிருக்கிறார்களே ! அவர்களில் கலாச்சார நம்பிக்கைக்கெதிராக போராடுங்கள்...
Quote:ஆணுக்கு கோபம் வந்தால் கையோங்க முடியும் அதை பெண்வாங்க வேணும். அப்படித்தானே ? வாழ்க உங்கள் நற்சிந்தனையும் அறிவுரையும். ஆண் பெண் இருவருக்குள்ளும் இருக்கின்ற மனிதத்தை எங்கே கொன்று போட்டீர்கள் ? உங்களைப்போல பெண்களும் வேலைக்குப்போகிறார்கள் பொதுவேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஊதியமில்லாத உழைப்பாக குடும்பபராமரிப்பு குழந்தை பராமரிப்பு எல்லாவற்றையும் செய்கிறாள். குறிப்பிட்ட சிலவிகிதமான ஆண்கள் குடும்பம் குழந்தை பராமரிப்பில் ஈடுபட்டு மனைவியின் சுமையில் பங்கெடுக்கிறார்கள். ஆனால் இதுவே ஒட்டுமொத்தமான பெண்களின் உரிமையையும் பெற்றுத்தந்து விட்டதாய் கூப்பாடு போடும் உங்கள் குழந்தைத்தனமான பதிலுக்கு பதில் சொல்வதை விட்டுவிடுகிறேன்.எனது கருத்துக்கள் குழந்தைதனமாய் உங்களுக்கு பட்டால் அது உங்கள் பார்வைக்கோளாறு. பெண்கள் வேலைக்கு போகிறார்கள் ஆனால் குடும்பத்தை பராமரிக்கின்றனரா? (சிலர்) குழந்தை பாராமரிப்பு இல்லத்தில் எத்தனை குழந்தைகள.......உணவ உணவுகளில் எத்தனை குடும்பங்கள் தங்கியிருக்கின்றன? மனிதத்தை கொன்று போட்டு நான் கருத்தெழுதவும் இல்லை வாழவும் இல்லை புகலிடங்களில் உள்ள பெண்களுக்காதரவான சட்டங்களால் எத்தனை ஆண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்த விட்டு தாடியுடனும் போதையுடனும் அலைகின்றனர்? அது உங்கள் கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.. முன்பொரு காலத்தில் அப்படி பெண்கள் தான் சொல்லுவார்கள் ஆனால்...? இன்று நிலை வேறு..
Quote:பெண்களால் பெண்கள் அடக்கப்படுகிறார்கள் என்றால் உங்கள் மனைவியியைக் கொடுமைப்படுத்தும் மாமி உங்கள் அம்மாவல்லவா. அம்மாவை திருத்த மகனால் முடியாது விட்டால் பிறகெதற்கு உங்களுக்கு உங்கள் மனைவி ? உங்களுக்கான வேலைகளை செய்யும் இயந்திரமாகவா தேவைப்படுவாள் ?
உண்மையில் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.. உங்கள் கருத்தை கேட்டு மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்துகிறாரா? இன்றைகாலத்தில் இது காலம் கடந்த ஒன்று.. இன்று நடப்பது மருமகள் கொடுமை... கணவணிடம் ஒரு கண்டிப்பான உத்தரவு..."உங்கள் அம்மா அப்போட அளவாய் கதையுங்க....அவையள் கீழ நிலக்கீழ் அறையில இருக்கட்டும் வேலைக்கு போகேக்க பிள்ளையள பார்க தேவைப்படுவினம்" அதை விட தாயகத்தில் பெற்றவார்கள் இருந்தால்....."" நீங்கள் நெடுக அவையளுக்கு ஏன் காசனுப்பிறியள் அவையள் அங்க உழைக்கலாம் தானே.."" இப்படி இருக்கிற பெண்களை எப்பிடி மாமியார் கொடுமைப்படுத்திறது...?
மாமிகளைவிட மாமாக்களும் இப்போ நிறையவே மகளை மருமகளை தங்கையை மனைவியை அடக்குகி ஆழ்கிறார்கள். இது தெரியாதா ?
<!--c1-->CODE<!--ec1-->
நீங்கள் கோடிட்டு காட்டிய பெண்களை வைத்து ஒட்டுமொத்த புலத்துப்பெண்களையும் எடைபோட முயல்வது உங்களது குறுகிய சிந்தனையையும் தேடலில்லாத உங்கள் பார்வையையுமே தெளிவுபடுத்துகிறது. <!--c2--><!--ec2-->
நான் கோடிட்டு காட்டியை கொஞ்சம் இன்னும் அதிகம் இருக்கிறது ஆதாரங்களாக உங்களுக்கு படங்களுடன் காட்ட முயற்ச்சி எடுக்கிறேன்......நீங்கள் சமூக சேவகி என்றால் அவற்றை சிர் செய்ய முயற்ச்சி எடுங்கள்...
Quote:இதற்கும் மேல் புரியாது விளித்தால் மன்னியுங்கள் நிதர்சன் உங்களுக்கு பதில் எழுதி பயனில்லை.புரியமால் நான் கருத்து எழுதுவதாய் நீங்கள் புரிந்து விட்டால் நான் என்ன செய்ய .....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

