06-01-2005, 06:42 PM
கொழும்பில் இராணுவ புலனாய்வு கட்டளை தளபதி சுட்டுக்கொலை
வீதிச் சமிக்ஞை விளக்கு அருகே காரை நிறுத்தியவேளை மோட்டார் சைக்கிளில் வந்தோர் தாக்குதல்
இராணுவ புலனாய்வுப் பிரிவின் முதலாவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் துவான் நிஷாம் முத்தலிப் (39 வயது) நேற்று செவ்வாய்க்கிழமை காலை நாரஹேன்பிட்டி பொல்ஹென்கொடவில் மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாத ஆயுத பாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொழும்பு, எல்விட்டிகல மாவத்தை, மன்னிங் ரவுனிலுள்ள தனது வீட்டிலிருந்து இரத்மலானையிலுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரிக்கு தனது உத்தியோகபூர்வ காரில் சென்றுகொண்டிருந்த போது, இவரது கார் பொல்ஹென்கொட பகுதியில் வீதிச் சமிக்ஞை விளக்கிற்கு முன்பாக காலை 7.50 மணியளவில் நிறுத்தப்பட்ட போதே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தலையிலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் உடனடியாக இவர், அருகிலுள்ள `அப்பலோ' ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட போதிலும் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
மோட்டார் சைக்கிளில் வந்து இவரைச் சுட்டுக் கொண்டவர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் பொல்ஹென்கொட வீதி வழியாகத் தப்பிச் சென்று விட்டனர்.
போர் நிறுத்த உடன்பாட்டின் பின்னர் கொல்லப்பட்ட உயர் இராணுவ அதிகாரி இவராவார்.
இந்தச் சம்பவம் பற்றி பொலிஸார் தெரிவிக்கையில்;
பொல்ஹென்கொட சந்தியில் வீதிச் சமிக்ஞை விளக்கிற்கு முன்பாக இவரது கார் நிறுத்தப்பட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளொன்றிலிருந்து இறங்கிக் காரை நெருங்கி வந்த நபரே இவர் மீது சரமாரியாக சுட்டுள்ளார்.
இவரது கையில், கமாண்டோ படையினர் பயன்படுத்தும் மினித்துப்பாக்கி இருந்ததாகவும் கறுப்பு நிற ஹெல்மட்டும் ஜக்கெட்டும் அணிந்திருந்ததாகவும், காயமெதுவுமின்றி உயிர் தப்பிய கார் சாரதி தெரிவித்துள்ளார்.
இதேநேரம், துப்பாக்கி நபர்கள் பதிவு செய்யப்படாத இலக்கம் அற்ற ரெயிலர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றிலேயே வந்து இவரை சுட்டுக்கொன்று விட்டுத் தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
நாரஹேன்பிட்டியிலுள்ள இலங்கை இராணுவ பொறியியல் படை முகாம் தகவல் திணைக்களம் ஆகியனவும் இக் கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ள சுற்றாடலில் நூறு மீற்றர் தொலைவில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவெனவும் இதுவரை இராணுவப் புலனாய்வு பிரிவிலுள்ள 11 பேர் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகளே இந்தக் கொலைகளை செய்துள்ளதாக இராணுவ தலைமையக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகள் மிகவும் தந்திரமாகத் திட்டமிட்டே இந்த அதிகாரியை கொலை செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தை கேள்வியுற்று அங்கு வந்த, அருகிலுள்ள இராணுவ முகாம் படையினரும் பொலிஸாரும் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 11 வெற்றுத் தோட்டாக்களை மீட்டுள்ளனர்.
காரின் பின் ஆசனத்தில் வலது புறமாக இருந்த இவர் மீது துப்பாக்கிதாரிகள் பல தடவைகள் சுட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேஜர் முத்தலிப்புக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளதாகவும், இதனால் அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் படைத்தரப்பு தெரிவிக்கிறது.
இவரின் மேலதிக பாதுகாப்பிற்கு இராணுவ மோட்டார் சைக்கிள், பாதுகாப்புப் பிரிவின் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் விசேட பயிற்சி பெற்ற இரண்டு இராணுவ சிப்பாய்களும் மெய்ப் பாதுகாவலர்களும் இருந்த போதும், நேற்று மோட்டார் சைக்கிள் படையினரதும் மேலதிக இராணுவ பாதுகாப்பும் இன்றியே இவர் சென்றுள்ளார்.
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக இராணுவ பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரும் விஷேட விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
1966 ஆம் ஆண்டு திருகோணமலையில் பிறந்த இவர், 1986 ஆம் ஆண்டு தியத்தலாவை இராணுவ முகாமில் இராணுவ பயிற்சி பெற்று, 1987 ஆம் ஆண்டில் இரண்டாம் லெப்டினனாக கடமை ஏற்று, 1995 ஆம் ஆண்டில் மேஜர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
இவர் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவில் கடமையாற்றி வந்துள்ளார். இராணுவ புலனாய்வு நடவடிக்கைகளில் மிகவும் திறமையாக செயற்பட்ட இவர், புலானாய்வுப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இவர், மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வந்துள்ளார். வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கிலும் கடமையாற்றியுள்ளார்.
மேஜர் முத்தலிப்பின் மனைவி குமுது அமரசிங்க முத்தலிப்பும் இலங்கை இராணுவத்தின் பெண்கள் படைப் பிரிவொன்றின் அதிகாரியாவார். இவருக்கு இரு பிள்ளைகளுள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி நபர்கள் வந்த மோட்டார் சைக்கிளை படையினர் தேடி வருகின்றனர்.
சிரேஷ்ட படை அதிகாரிகளின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
thinakural