09-25-2003, 06:45 PM
யாரோ போட்ட பிச்சையில் கோட்டு சூட்டுப்போட்டு வெளிநாடு வந்த வாருதி.. நல்லாத்தான் நுனிப்புல் மேய்ந்து தனது வெப்பியாரத்தை வெளிக்காட்டியிருக்கிறார். சொந்தங்களை பிரிந்து தனிமையில் தமது தேவைகளுக்காய் உள்ள வசதிகளுக்குள் நாட்டையும் உறவுகளையும் ஓரளவாவது காப்பாற்ற உழைப்பக்காக உருக்குலையும் உறவுகளை நன்றாகத்தான் உசாதீனம் செய்திருக்கிறது இந்த கம்பன் அடிநக்கி.
கோயில்களை பேசுகிறார் இந்த மேதாவி.. டவுசருடனும் சேட்டுடனும் வணங்கும் பக்தர்களை கொழும்புக் கோயில்களில் பார்க்கவில்லையோ.. வெளிறாட்டில் அவருக்கு லென்ஸ் பூட்டி காட்சிகளைக் காட்டிவிட்டார்களாம்.
கிழமையில் ஒரு நாள் தமிழ் பாடசாலை சென்று ஒரு சில மணித்தியாலம் கல்விகற்று தமிழ் பேசும் சிறார்களின் அறிவைப் பாராட்டத் தெரியவில்லை.. அவர்களை ஊக்குவிக்க முடியவில்லை.. நளினம் கேட்கிறது இந்த வித்துவானுக்கு..
பரமசிவன் குளிர் நீரில் நீராடுறாராம்.. அதைப் பார்க்கும் மனங்களின் மகிமை புரியாததன்மையை அவரே வெளிக்காட்டியிருக்கிறாரே.. சட்டம்போட்ட கண்ணாடிகளுள் சிறையிருக்கும் சாமி படங்கள் இவருக்குத் தெரியவில்லையோ.. அவை தாயகத்திலும் உள்ளது புரியவில்லையோ..?!
கொழும்பு காலிவீதியில் வெள்ளவத்தையில் நெருக்கமாக உள்ள கடைகளை காணவில்லையோ.. அவற்றில் அங்குள்ளவர்கள் வெளிநாட்டு உறவுகள் கஸ்டப்பட்டு உடலுருக்கி உழைத்தனுப்பும் பணம் புரள்வது தெரியவில்லையோ?
காலிமுகத் திடலிலே விதம்விதமாகக் காற்று வாங்கும் சனங்களின் மொடேர்ன் ரெஸ்சுகளை பார்க்கவில்லையோ.. அவற்றின் பின்னணியில் வெளிநாடொன்றில் அவர்களின் தேவைகளுக்காய் கடனுடன் போராடும் உறவுகளின் நிலை உறுத்தவில்லையோ?
பகுத்தறிவு இருந்தால்தானே இவையெல்லாம் தெரிவதற்கு.. கம்பனுக்குள்ளும் சீதையின் வர்ணனைகளுள்ளும் வாழ்க்கையை அடகுவைத்தவர்களுக்கு இதுவெல்லாம் எங்கே புரியும்.. ஏட்டுப்படிப்போடு வெற்றுச்சுரைக்காய்கள் தீர்க்காத பசியால் மற்றவனைக் குறை கூறவேண்டியதுதான்..
இனியாவது தாயகத்திலிருந்து தகுதியானவுர்களை வெளிநாட்டுக்கு வரவழைத்து அவர்களின் கருத்தை கேளுங்கள்.. இது ஒரு பாடமாக அமையட்டும்.
காகிதப் பூக்களை வரவழைத்து.. முகமனுக்கு அவர்கள் காட்டும் சிரிப்பை நம்பாதீர்கள்..
அவர்கள் போகவிட்டுப் புறங்கூறும் போக்கிரிகள்!

.