Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனது பதில்
#1
http://www.sooriyan.com/etc/21.asp


வணக்கம்

இந்த பதிலுரை கம்பவாரிதி அவர்கள்; எழுதிய
கட்டுரைக்கு வெளிநாட்டில் வாழும் அகதித் தமிழனின் ஒரு பதிலுரை.

அது எதோ தெரியவில்லை இப்போது எல்லாம் ஈழத்து இலக்கியவாதிகளுக்கு வெளிநாட்டு தமிழர்களை குறை கூறி சிற்றின்பம் அடைவதில் பெருமகிழ்வு அடைகின்றார்கள். அவர்கள் தாம் கொண்ட தேசத்துக்காதலினால் வெளிநாட்டு தமிழர்களை அவ்வாறு மதிக்கும்படி சொல்கின்றார்கள்.

கம்பவாரிதி அவர்கள் எழுதிய கட்டுரையில் உண்மைகள் உண்டு தான். அவர் யாதார்த்தை எழுதியிக்கின்றார். வரவேற்கப்படவேண்டியதுதான். இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் சொல்லும் கருத்துக்களில் மறைந்திருக்கும் ஒரு பெரு உண்மையினை சொல்ல மறந்துவிட்டார். இன்று தேசத்தை நோக்கி படையெடுப்பவர்கள் வெளிநாட்டுக்கு வந்தவர்களில் அத்தனை பேர்களிலும் ஒரு 1 வீதத்தினர் மட்டுமே. தங்களுக்கு கிடைக்கும் சிறிய நேரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும், இந்தியாவின் தாஜ் மாகாளையும் தரிசிக்கச் செல்லாமல் ரமில் ஈழம் வருகின்றார்களே எதற்காக? ரிக்கட்டுகள் மலிவாய் கிடைக்கின்றது என கிழக்கும் அமெரிக்க நாடுகளுக்கு செல்லாமல் எதற்காக தங்கள் சொந்த நாட்டுக்கு வருகின்றார்கள்? யார் அவர்களின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து ரமில் ஈழத்துக்கு வரச்சொல்கின்றார்கள்? சிறிது யோசித்துப்பாருங்கள்? தப்பியோடியவர்கள் அப்படியா போன போன நாடுகளின் நீரோட்டத்தில் கலந்திருந்தால் இப்படி ஒரு தேசத்துக்கு யார் தண்ணீர் விட்டிருப்பார்கள்? நீங்கள் சொல்வது போல் வெறும் படம் காட்டுவதற்காக அங்கே வருகின்றார்கள்?

போராட்டச் சு10ழலில் அழிந்து போன இலக்கியத்துக்கு மகுடம் சு}ட்டிக்கொண்டு, தம்மை மனதளவில் தள்ளி வைத்தவர்கள் (அவர்கள் சொந்த நாட்டில் வசித்தாலும் கூட) வெளிநாட்டுக்கு வந்து தள்ளிப்போனவர்களுக்கு சமமானவர்களே!!

எத்தனையோ காரணங்கள் இருந்தும் தாய் மண்ணை நேசிக்கும் இந்த வெளிநாட்டுத் தமிழர்கள் இருக்கும் வரை எம் தமிழரின் வீரம் விலைபேசமுடியாது. உலகநாடுகள் தடை செய்தும் நாம் இப்போதும் தலை நிமிர்வதற்கு யார் காரணம்? யார் எம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உதவிசெய்யப்போவது? எம்மிடம் எண்ணைக் கிணறுகள் உண்டா?
அமெரிக்கா கொடுத்த ஆயுதமா ஆணையிறவு வெற்றியை ஈட்டி தந்தது??

ஊர் சென்று திரும்பி வருபவர்கள் மற்றவர்களிடும் "எங்கட நாடு நாடு தான்" என்று சொல்லி அவர்களையும் ஊருக்கு அனுப்பி தமிழ் தேசியம் வளர்க்கின்றார்கள். வெளிநாட்டில் பிறந்தாலும் நாட்டை பார்த்தபின்னால் தான் தமிழைப் படிக்க வேண்டும் என்று சொல்லும் எத்தனை குழந்தைகளை உங்களுக்குத்தெரியும்?

வெளிநாட்டு மக்களுக்குள்ளை எம் சொந்த கனவுகளை தொலைத்துவிட்டு ஆசையோடு அங்கே வருபர்களை அங்கு உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக மரியாதைக் கொடுத்து கவனிக்கும் போது அவர்களின் இதயம் நோகின்றது. அங்கே வருபவர்கள் வெளிநாட்டவர்களுக்கு சேவகம் செய்து விட்டு, அந்த பணத்தில் வருகின்றார்கள். அப்படி வருபவர்களிடம் நீங்கள் அடிமைகளா நடக்கும் எண்ணுவது அவர்கள் மகிழ்விக்கவல்ல, அவர்கள் கொண்டு வந்து பணத்திலும் பொருளிலும் ஆசைப்பட்டுத்தான் என்பதனை புரிந்துகொள்ளவேண்டும்.

பிழை இருவரிலும் தான். நாம் மனிதத்தை தொலைத்துவிட்டோம். அன்பால் மற்றவரை நேசிக்கக் கற்றுக்கொள்வோம். ஒருவரையொருவர் புரிந்துகொள்வோம்.

அதை விட்டு கனடாவுக்கு ஒருவரைக் கூப்பிட்டு பேசச்சொல்லும் போது இறந்த கம்பரைப் பற்றி கட்டுக் கட்டாய் அடுக்கு மொழியில் உரையாற்றுவது தேவையில்லை. வருகிறபோது எம் மக்களின் துயரங்களை அவர்களின் இலட்சிய சிந்தனைகளை மேடைகளில் கூறி, மாறாதவர்களையும் தமிழர்களாய் மாற்ற வேண்டும். இறந்த இலக்கியத்தை தமிழரின் தேசம் விடிவு கண்டபின் எடுத்து வைத்து து}சு தட்டலாம் தானே??
நடவடிக்கையில் இறங்குவோம். கதைப்பதனால் குறைகள் பலவற்றை நாம் பட்டியலிடலாம் (இருவர் பக்கத்திலும்)

நன்றி
தம்பிதாசன் - கனடா
Reply


Messages In This Thread
எனது பதில் - by thambythasan - 09-25-2003, 05:06 PM
[No subject] - by sOliyAn - 09-25-2003, 06:18 PM
[No subject] - by sOliyAn - 09-25-2003, 06:45 PM
[No subject] - by Ilango - 09-25-2003, 09:37 PM
[No subject] - by Kanani - 09-26-2003, 01:05 AM
[No subject] - by sOliyAn - 09-26-2003, 01:44 AM
[No subject] - by Mathivathanan - 09-26-2003, 02:03 AM
[No subject] - by shanthy - 09-26-2003, 07:30 AM
[No subject] - by yarl - 09-26-2003, 07:36 AM
[No subject] - by Kanani - 09-26-2003, 08:12 AM
[No subject] - by yarl - 09-26-2003, 09:46 AM
[No subject] - by veera - 09-26-2003, 10:27 AM
[No subject] - by Mathivathanan - 09-26-2003, 11:26 AM
[No subject] - by kuruvikal - 09-26-2003, 12:28 PM
[No subject] - by veera - 09-26-2003, 12:32 PM
[No subject] - by veera - 09-26-2003, 12:36 PM
[No subject] - by Paranee - 09-27-2003, 09:20 AM
[No subject] - by kuruvikal - 09-27-2003, 10:39 AM
[No subject] - by sOliyAn - 09-27-2003, 12:05 PM
[No subject] - by kuruvikal - 09-27-2003, 12:14 PM
[No subject] - by Paranee - 09-27-2003, 01:11 PM
[No subject] - by Kanani - 09-27-2003, 03:24 PM
[No subject] - by Paranee - 09-27-2003, 03:32 PM
[No subject] - by kuruvikal - 09-27-2003, 08:53 PM
[No subject] - by kuruvikal - 09-27-2003, 09:02 PM
[No subject] - by Mathivathanan - 09-28-2003, 12:30 AM
[No subject] - by Paranee - 09-28-2003, 05:13 AM
[No subject] - by ampalathar - 10-03-2003, 02:53 PM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 06:09 PM
[No subject] - by ampalathar - 10-03-2003, 07:35 PM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 07:40 PM
[No subject] - by Paranee - 10-04-2003, 03:57 PM
[No subject] - by shanmuhi - 10-22-2003, 08:49 PM
[No subject] - by Saniyan - 10-23-2003, 12:30 AM
[No subject] - by Kanakkayanaar - 10-23-2003, 07:31 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)