06-01-2005, 02:34 PM
Nitharsan Wrote:Quote:நிதர்சனின் நிதர்சனமான தெளிவின் புரிதல் நன்றாகவே புரிகிறது. கிலோவும் தொன்னும் உங்கள் வாய்களில் மட்டுமே நிரம்பியிருக்கிறது. அதுதான் ஆணவம் மேலோங்கி சமூகத்தின் சமபங்காளிகளின் உரிமைகளை மதிக்கத் தெரியவில்லை. சமத்துவம் சமானம் என்பது உங்கள் வரையில் அதிகாமாகிப்போயிருப்பது உங்கள் அறியாமையையே படம்போட்டு விளக்கியிருக்கிறது நிதர்சன்.மன்னிக்கவேண்டும் அஸ்வினி உங்கள் கருத்துக்கு பதில் கருத்து வைப்பதோ அல்லது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைப்பதோ எனது நோக்கமல்ல. நாங்கள் இங்கு பேசிக்கொண்டிருப்பது புகலிட தமிழ் பெண்கள் பற்றி. பெண்கள் புகலிடத்தில் அடக்கப்பட்டுள்ளனர் என்றால்.....???? அதை நீங்கள் ஆமொதிக்கிறீர்கள் என்றால்.....??? இங்கே இந்த யாழ் களத்தில் நீங்களோ தமிழினியோ நித்திலாவோ அல்லது சாந்தியக்காவோ மற்றும் ஏனைய கள பெண் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்க முடியாது. அது மட்டுமல்ல... பெண்நிலை வாதியாக தம்மை இனம் காட்டும் சிலர் தமது பிரபல்யத்துக்காக பெண் அடிக்கப்பட்டுள்ளால் என்று சொல்லாம் அனால் அவர்கள் அந்த கருத்தை எழூத அவர்களுக்கு சுகந்திரம் இருக்கிறது எனில்.... அதற்க்கு காரணம் யார்? ஆணாணவன் வேலைக்கு சென்று ஒழுங்காக தனது குடும்பத்தை நிர்வகிப்பதால் தான் (சில பெண்களும் வேலைக்கு பொகின்றனர் இல்லை என்று சொல்லவில்லை) சில சமயம் உங்கள் நாட்டில் பெண்கள் அடிமைப்பட்டிருக்கலாம் ஆனால் தமிழ் பெண்கள் அடக்கப்படவுமில்லை அடங்கி வாழவுமில்லை....அச்சம் மடம் நாணம் பயப்பு இவைதானாம் பெண்ணுக்கு சிறப்பு அவற்றை இல்லாமல் ஆக்குவது தான் பெண்ணுக்கு சுகந்திரம் என்று உங்களை போன்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். பெண் சுகந்திரத்துக்காக போராடுங்கள்....பெண் சமூகத்தில் இருந்து பெண்களுக்கு விடுதலையை வேண்டுங்கள்.. பெண்கள் பெண்களால் அடக்கப்படுவதை மழுங்கடிக்கப்படுவதை முதலில் நிறுத்துங்கள். அதன் பின் ஆண்கள் அடக்குகிறார்கள் என்ற கரத்தக்கு வாருங்கள்.. தாம்மை கவனிக்கவே நேரமின்றி புகலிடத்தில் ஆண்கள் திரிகையில் உங்களை அடக்க வேலையை விட்டு விட்டு வீட்டில் நிற்க்க ஆண்கள் பயித்தியங்கள் அல்ல. இக்கருத்துக்களை ஆண் என்ற நிலையில் இருந்து நீங்கள் எழுதுவதாய் நினைத்தால் தராளாலமாய் நினையுங்கள். நான் கனடாவில் வாழுகின்றேன் இங்கு நடக்கும் சில விடயங்களளை தெரிவிக்க விரும்புகின்றேன். இங்கு பெண்களால் காதல் என்ற வார்த்தை எதற்காக பயன் படுத்தப்படுகின்றது???? தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவே.. அவற்றை எல்லாம் மீறி உண்மைக் காதலாய் வருவது 25 வீதத்தினரே! அதை விட கேவலமான விடையங்களும் பல நடக்கிறது... வேற்றினத்தவருடன் திரிவதையோ அல்லது அவர்களை திருமணம் செய்வதையோ நான் தவறாக சொல்ல வில்லை. ஆனால் அவர்கள் காம ஆசைக்கு மட்டும் ஆளாகி எத்தனை பெண்கள் இருக்கின்றனர்? அதைப்பற்றி அவர்களின் பெற்றவர்கள் கூட கேட்க முடியாது கேட்டால் வரம் பதில் இது எனது தனிப்பட்ட விடயம் ( that's my personal) இந்த வார்த்தை பெரும்பால கணவன் மனைவிகளுக்கிடையிலும் பாவிக்கப்படுவதை பார்க்க முடியும். எனக்கு தெரிந்து பிரிந்த குடும்பங்களில் பலவற்றின் பிரிவுக்கு ஒரு சாதாரண பிரச்சினையே காரணமாகிறது. சிற்சில சந்தர்ப்பத்தில்களைப்பால் வரும் கணவன் தவறாக பேசினாலே அல்லது தப்பி தவறி கை பட்டாலோ காவல்துறை அழைக்கப்படகின்றது. இதனால் என்ன வரும்? அவர்கள் தமது சட்டத்தின் படி அடுத்த 7 நாட்களுக்கு வீட்டுப்பக்கமே கணவன் வரமுடியாது இங்கே ஆரம்பிக்கிறது விரிசல்... இதற்க்கு என் சொல்கின்றீர்கள் அஸ்வினி... உண்மையில் பெண்களுக்கு சில சமூகப்பிரச்சினைகள் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் அதற்க்கு பெண்களே காரணம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்
இந்தக்களத்தில்தான் யாரோ ஆண்நிலை என்பதே இல்லையென்றார். ஆனால் ஆண்நிலைவாதியாக ஒருவர் இன்னும் ஆணாதிக்க சிந்தனை செயல்களுடன் களத்தில் திணிப்பதை ஏற்றுக்கொள்வாரோ என்னவோ ?
தம்பி நிதர்சன் பலநீண்டகாலமாக பெண்ணின் சுயத்தை ஒளித்து வைத்திருந்த உங்கள் சுயநலங்கள் தற்போது பெண்களின் எழுச்சியில் சாயம்போகிறது. அதனைப்பொறுக்கமாட்டாமலேயே இத்தகைய அதிசுதந்திரம் கொடுத்துவிட்டதாய் கூப்பாடு போடும் இயலாமையே உங்கள் வெளிப்பாடு.
பெண்ணிலைவாதிகள் என்றால் அதன் பொருள் பெண்ணின் நிலையை அதாவது பெண்ணின் நிலமைகளை வெளிச்சொல்வோர். அது ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்.
உங்கள் ஆண்ணிலைவாதம் அடக்கியாழும் தத்துவத்தையே சொல்லி நிற்கிறது.
சினேகாவின் பெண்ணிலைவாதம் எங்களுக்கு வேண்டாம்.
உங்கள் மூளையின் வேர்வரையும் பரவிநிற்கும் ஆணாதிக்கச் சிந்தனை வெளிப்பாடு காளிதாசர் முதலான ஆதிகால ஆண்கலைஞர்களையும் அக்காலக்கதாநாயகர்களையும் படித்துப்பாருங்கள் ஆணாதிக்கம் அன்றுமுதல் இன்றுவரையும் எப்படியிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
பெண்கள் மத்தியில் தற்கொலைகளும் ää மனநோயாளர்களும் ää உளவியற்தாக்கங்களுக்கு உள்ளாகும் நிலையும் ää இன்னும் இதர தாக்கங்களுக்கும் உள்ளாகும் பெண்களின் நிலை தாயகம் முதல் புலம்பெயர் தேசங்கள் வரையும் தொடர்வதற்கான காரணங்களும் உங்கள் போன்ற மனநிலையாளர்களின் ஆதிக்க மனப்பாங்கும் ஆதிக்கச் சிந்தனைகளுமே.
நிதர்சனண்ணா நான் கெட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லேல அதவிட்டிட்டு வேற எதுக்குள்ளயோ ஓடுறீங்கள். பெண்கள ஆண்கள் அடக்குகினமெண்டு இங்க யார் சொன்னதண்ணா நீங்களும் குரவியண்ணா மாதிரி அங்சறிவோடயே நிக்கிறீங்கள். தப்பித்தவறி கையேனண்ணா படுது? பொண்டாட்டிகளில தங்கட மிருகக் குணங்கள காட்டிட்டு தப்பித் தவறி கை படுகுதெண்டால் ஆரும் நம்புவாங்களா? என்னண்ணா விளையாடுறீங்களா? உங்கட அம்மாவ உங்கட அப்பா அடிச்சதேயில்லையா? ஒருக்கா சொல்லுங்கோ? ஏனண்ணா பெண்கள மட்டும் குறை சொல்லுறீங்கள்? உங்களோட ஒரு பெட்டையளும் வராமல் வேறு இனத்தவரோடு போயினம் எண்டு உங்களுக்கு ஒரு வகை மனப்பொறாமை. அதான் இப்பிடி சொல்லுறீங்கள். பெடியங்களுந்தான் வேற்று நாட்டு பெட்டையளோடு திரிந்து அவர்களின் வாழ்க்கைய சீரழிக்கினம். ரெட் லைட் ஏரியாக்களுக்குள்ள போகினம். கொண்டோம் போட்டு பல விசயங்கள செய்யிறனம். இது தமிழ் பெடியங்கள் சயெ;யேலயா? எதுக்கு பெட்டையள மட்டும் குற்றம் சாட்டுறீங்கள். இதில இருந்து தெரியேலயா உங்களுக்கு ஒருவக பொறாமை. குருவியண்ணாக்கும் உதான். குருவியண்ணாவ ஒரு பெட்டையளும் திரும்பி கூட பாக்கினமில்லப்போல. அதான் பாவம் பெட்டையளில குறை சொல்லுறதிலயே இருக்கிறார். குரவியண்ணாக்கு பெட்டையள் கிடைக்காத படியாத்தான் கனில காதலிக்கிறார். பாவம் கடைசிய நல்லா கீழ போய் பூக்களோட புசத்துறார். என்னு செய்யிறது நீங்க விரும்பிறது உங்களுக்கு கிடைக்குhட்டி உங்கள விரும்பிறது கிடைச்சால் சந்தோசப்படலாம். உங்கள விரும்புறதுக்கும் ஆக்களில்ல போல இருக்கு அதான் உங்கட இயலாமையை எரிச்சுலாவும் பொறாமையாவும் மாத்தி பெண்கள குற்றஞ் சொல்லுறீங்கள்.

