05-31-2005, 12:56 PM
புலனாய்வுத்துறையின் கட்டளை அதிகாரி முத்தலிப் சுட்டுக்கொலை!!
<img src='http://www.eelampage.com/d/p/top/muthalif20050531.jpg' border='0' alt='user posted image'>
[செவ்வாய்க்கிழமை, 31 மே 2005, 15:12 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையின் கட்டளை அதிகாரி ரி.நிசாம் முத்தலிப் (வயது 39) இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்.
இரத்மலானை கொத்தலாவல இராணுவ கல்லூரியில் கடமையாற்றி வந்த முத்தலிப், மெனிங் டவுணிலிருக்கும் தனது வீட்டிலிருந்து இன்று காலை கொத்தலாவெல இராணுவ கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த போது கிருலப்பனையில் வீதி சமிக்ஞைக்கு அருகில் காலை 7.50 மணிக்கு அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அவரின் பயண விபரங்களை ஏற்கனவே துல்லியமாக அறிந்திருந்த இரு துப்பாக்கித்தாரிகள் அவரின் வாகனம் அந்த இடத்திற்கு வரும் வரை மோட்டார் சைக்கிளில் காத்திருந்து பின் அவரின் வாகனத்தைத் தொடர்ந்து சென்றுள்ளனர்.
வீதி சமிக்ஞைக்கு அருகே முத்தலிப்பின் வாகனம் மெதுவாக சென்றபோது பின்புறமாக வந்த துப்பாக்கிதாரிகள், வாகன பின் இருக்கையில் அமர்ந்திருந்த முத்தலிப்பின் மீது 10 முதல் 15 வரை துப்பாக்கிச் சூடுகள் நடத்தினர்.
முத்தலிப்பின் தலைக்கே குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முத்தலிப் கொழும்பு அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு வைத்தியர்கள் சத்திர சிகிச்சை செய்ய முயன்ற போதிலும் முத்தலிப் மரணமடைந்து விட்டார்.
முத்தலிப் சுடப்பட்ட இடத்திற்கு மிக அருகாமையில்தான் பொல்லஹெங்கொட இராணுவ முகாம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிதாரிகளின் மோட்டார் சைக்கிளில் இலக்கம் குறிப்பிடப்படாமல் இருந்துள்ளது.
முத்தலிப் படுகொலை தொடர்பான ஆரம்ப விசாரணைகளை கிருலப்பனை பொலிசாரும் கொழும்பு குற்றப்புலனாய்வுத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
9 மில்லி மீற்றர் துப்பாக்கியே இவரது கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் 5.5 ரக துப்பாக்கி ரவைகள் சம்பவ இடத்தில் காணப்பட்டதகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள் இரகசியப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
திருகோணமலையில் பிறந்த முத்தலிப் இராணுவத்தின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்தார். அண்மையிலேயே இவர் கொழும்பிற்கு மாற்றலானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். முத்தலிப்பின் மனைவியும் இராணுவத்தில் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னிப் பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் ஊடுருவல்கள், வன்னியில் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளின் பிரமுகர்களை படுகொலை செய்தமை போன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் இவரின் செயற்பாடு குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது.
வவுனியாவில் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது, தமிழ் மக்களை கைது செய்து சித்திரவதை செய்தது போன்றவற்றிலும் இவரது பங்களிப்பு இருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட சம்பூர் தாக்குதல், மூதூர் மற்றும் கட்டுநாயக்கா விமானத் தாக்குதல்கள் குறித்த புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதில் இவர் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
1994 ஆம் ஆண்டு வெள்ளவத்தை ஆயுதக் களஞ்சியத்தைக் கண்டு பிடிக்கவும் முக்கிய பங்காற்றிய இவர் மிலேனியம் சிற்றி இராணுவ நடவடிக்கைப் பிரிவின் உதவித் தளபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்திற்காக பாரிய சேவையாற்றியதாக கருதப்படுகிற முத்தலிப் சுட்டுக்கொல்லப்பட்டது சிங்கள இராணுவத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
முத்தலிப்பின் படுகொலை குறித்து தங்களுக்கு அறிவிக்கப்படாததால் அது குறித்து தாங்கள் கருத்துத் தெரிவிக்க முடியாதென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
puthinam