05-31-2005, 09:08 AM
இராணுவ புலனாய்வுப் பிரிவின் முதலாவது உயர் கட்டளை அதிகாரி மேஜர் முத்தாலிப் சுட்டுக்கொலை.
செவ்வாய்கிழமை 31 மே 2005 பிறைசூடி றமணன்
ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பு நாரஹன்பிட்டிய பகுதியில் இன்று காலை 7.50 மணியளவில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி முத்தாலிப்பை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதில் படுகாயமடைந்து சற்று முன்னர் பலியாகியுள்ளார். மேஜர் முத்தாலிப் இலங்கை இராணுவத்தினரின் மிகப்பெரும் புலனாய்வுத்துறை அதிகாரியாகக் கடமையாற்றியவர். கிழக்கு மாகாணம் உட்பட பல மாவட்டங்களிலும் தொடர் சேவையாற்றியவர்;. வுவுனியாவில் புளொட் மாணிக்கதாசனின் வலதுகரமாகச் செயற்பட்டு பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களின் கொலைகளுக்கும் காரணமாக இருந்தவர். வவுனியாவில் இலக்கத்தகடற்ற வாகனங்கள் வெள்ளைவான் திருவிளையாடல்களைப் பலவருடங்களாக நடாத்தியவர். புளொட் மோகனின் வலது கரமாகவும் செயற்பட்டவர். தமிழ்த்துரோகி கருணாவின் பிரிவற்கு முக்கிய காரணமாகத் தொழிற்பட்டதுடன் கருணாவைக் கிழக்கிலிருந்து கொழும்புக்கு அழைத்துவரும் பணியினையும் தனது நண்பரான முன்னைநாள் ஜக்கியதேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கியிருந்தவர். இறுதியாக சிவராமின் கொலைக்கான பாதையை வகுத்துக் கொடுத்தவர் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் தாயகப்பிரதேசத்தில் பல நாசகார வேலைகளைச் செய்து பல தமிழ் மக்கள் பலியாகக் காரணமாகவும் இருந்தவர். கிளாலி கொம்படிப் பாதையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி ஒருவருக்கு இவரால் வைக்கப்பட்ட குண்டு இலக்கு மாறி அப்பாவிப் பொதுமக்கள்மீது வெடித்ததில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அண்மையில் வன்னிக்குள் இராணுவத்தினரின் ஆள ஊடுருவித்தாக்கும் படைப்பிரிவினர் உட்புகுந்திருந்தனர் அவர்களின் நடவடிக்கைக்கான இரண்டாவது அதிகாரியாக இவர் செயற்பட்டவர். இறுதிக்காலத்தில் இலங்கையின் அனைத்துப் பகுதிக்குமான இரகசிய இராணுவப் புலனாய்வுப்பிரிவு அதிகாரியாகச் செயற்பட்டவர்.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர் நியூட்டன் காணாமல் போனமைக்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் என்று சந்தேகிக்கப்படும் மேஜர் முத்தாலிப் அதன் எதிரொலியாகவே கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் மூத்த புலனாய்வுத்துறை அதிகாரி ஜெயரட்டணம் காணமல் போயுள்ளமையும் மேஜர் முத்தாலிப் கொல்லப்பட்டுள்ளமையும் இலங்கை அரச புலனாய்வுப்பிரிவினுள் வேறு முகவர்கள் உட்புகந்துள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இதேநேரம் இலங்கையின் முக்கிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. அதை நாம் மறுத்திருந்தோம். அந்த செய்தி ஒரு இராணுவ நோக்கில் வெளியிடப்பட்டது என்பதை நாம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சமதான காலத்தில் சமதானத்தை நாசாகரம் பண்ணும் இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவினரின் மிகப்பெரும் தலைகள் தற்போது முக்கிய இலக்குகளாக மாறியுள்ள நிலையில் இதைவிடப்பெரும் தலைகள் தற்போது முக்கிய இலக்குகளாக மாறியுள்ள நிலையில் இதைவிடப்பெரும் தலைகள் இலக்காகலாம் எனவும் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
நிதர்சனம்.கொம்

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>