05-31-2005, 05:17 AM
ஆலவாய் (கேரளா) : விடுதலைப் புலிகளால் நாட்டில் ஆபத்து அதிகரித்துள்ளது. கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானத்தைக் கடத்த அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கொச்சி விமான நிலையத்தில் புலிகள் ஊடுருவக் கூடும் என்று மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால், விமான நிலையத்துக்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்குள் பார்வையாளர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் மூன்று ஆண்டுகளாக சண்டை நிறுத்த ஒப்பந்தம் நீடிக்கிறது. சுனாமி நிவாரணப் பணியில் இலங்கை அரசு பாரபட்சம் காட்டுவது, புலித் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக செயல்படும் மட்டக் களப்பு மாவட்ட மாஜி புலித் தளபதி கருணாவுக்கு ராணுவம் உதவுவது போன்ற பல்வேறு பிரச்னைகளால் புலிகள் கோபத்தில் உள்ளனர். இதனால், எப்போது வேண்டுமானாலும் சண்டை நிறுத்தம் முறியும் அபாயம் உள்ளது.
அரசுடன் மோத புலிகளும் தயாராகி வருகின்றனர். அதற்காக, படை பலத்தை அதிகரிக்கவும், பலப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளில் ரகசியமாக இறங்கியுள்ளனர். புலிகளின் நடவடிக்கையை மத்திய புலனாய்வு அமைப்புகள் உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டிற்குள் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, தமிழகம் உட்பட பல்வேறு கடலோர மாநிலங்களை உள்துறை அமைச்சகம் உஷார் படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைக்கு பெட்ரோல், டீசல் கடத்தும் தலமாக தமிழகத்தை புலிகள் பயன்படுத்துகின்றனர்' என்று திடுக்கிடும் தகவல் கூறப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இதை மறுத்துள்ளார். மேலும், புலிகள் நடமாட்டத்தை தடுக்க எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசுக்கு அவர் பட்டியலிட்டு காட்டினார்.
மத்திய அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே இந்த சர்ச்சை ஒருபுறம் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு திடுக்கிடும் தகவலை புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. கொச்சியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இதில், ஊடுருவ புலிகள் முயற்சிப்பதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்த ஊடுருவல் முயற்சி மூலம், இந்திய விமானத்தை கடத்தும் சதித் திட்டத்திலும் புலிகள் ஈடுபடக் கூடும் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பதட்டம் ஏற்பட்டுள்ளது.
புலிகள் ஊடுருவலைத் தடுக்க, கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முதல் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. பல்வேறு உஷார் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். விமான நிலையத்திலும், அதைச் சுற்றிலும் இப்படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.
தொழில் பாதுகாப்புப் படையின் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பல்வேறு கட்ட கடும் சோதனைக்குப் பிறகே, பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்த மாதம் 7ம் தேதி வரை, இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலில் இருக்கும் என்று தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்