05-31-2005, 01:56 AM
Nitharsan Wrote:அச்சம் மடம் நாணம் பயப்பு இவைதானாம் பெண்ணுக்கு சிறப்பு அவற்றை இல்லாமல் ஆக்குவது தான் பெண்ணுக்கு சுகந்திரம் என்று உங்களை போன்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
அச்சம் - பயம். அதாவது பெண் ஆணுக்குப் பயந்து வாழவேண்டும்.
மடம் - அறியாமை, பேதமை. அதாவது பெண் கல்வியில் முன்னுக்கு வரக் கூடாது. பெண் ஒருவிடயத்தைப் பற்றித் தெரிந்திருந்தாலும், சரியான கருத்துக்களை வைக்கக் கூடியவராக இருந்தாலும், ஆண்கள் முன்னே எதும் தெரியாதமாதிரி (பேதையாக) இருக்க வேண்டும்.
நாணம் - வெட்கம், கூச்சம். பெண், பெண்ணைப் பார்த்துக் கூச்சப்பட வேண்டியதில்லை. எனவே இந்தப் பண்பும் ஆண்களைப் பார்க்கும்போதுதான் பெண் கொண்டிருக்க வேண்டும். வெட்கப்படும், கூச்சப்படும் பெண்தான் குடும்பப்பாங்கான பெண், அவள் பிற ஆண்களுடன் பழகமாட்டாள். எனவே வாழ்வில் சிக்கல்கள் வராது. கூச்ச சுபாவமில்லாத பெண்கள் எப்படியும், பிற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளுவாள்.
பயிர்ப்பு - அருவருப்பு. அதாவது பிற ஆடவரைப் பார்க்கும்போது ஆசை வரக்கூடாது. மேலும் உடலுறவினையும் அருவருப்பான ஒருவிடயமாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் வேலிதாண்டாமல் இருப்பார்கள்.
இவைதான் பெண்ணுக்குச் சிறப்பு என்று கூறுகிறீர்கள். அத்துடன் அவள் சுதந்திரமாக இருக்க ஒரு தடையும் இல்லை இன்றும் கூறுகிறீர்கள்.
<b> . .</b>

