05-30-2005, 05:28 PM
kuruvikal Wrote:உரிமைகள் மனிதனுக்கு என்று சட்டப்பாதுகாப்புடன் எங்கும் வழக்கப்படே இருக்கு இன்று...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சட்டங்களை இயற்றியோர் யார்? சட்டங்கள், ஒழுக்கங்கள் என்பவனற்றை எழுதியோர் எல்லாம் ஆண்களே. ஆண்கள், பெண்களைக் கலந்தாலோசிக்காமல் தாங்களே தமக்குள் முடிவெடுத்து உருவாக்கியவையே இந்தச் சட்டங்களும், ஒழுக்க நெறிகளும். இந்த சட்டங்களும் ஒழுக்கங்களும் பெண்ணின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. பெண்களை சரிசமமாகப் பார்க்கவில்லை என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.
நீர் பாலபாடம் வேண்டுமென்று கேட்டால், முதலில் பெண்களை இழிவு செய்து கருத்தெழுதுவதை நிறுத்திவிட்டு சமூகத்தில் பெண்களின் நிலையென்ன என்பதனை அறிந்துகொண்டு வாரும். பெண்கள் பிரச்சினைகள் இன்றி தாங்கள் சந்தோஷமாக, தத்தமது அன்றாடக் கருமங்களை, ஆண்களின் இடையூறின்றி செய்கிறார்கள் என்றால் அவர்களுக்குப் பிரச்சினை இல்லை என்று ஒத்துக்கொள்கிறேன். (நீர் ஆண்களின் இடையூறின்றி, ஆண்களை தமது கைப்பாவையாகத்தான் பெண்கள் நடாத்துகிறார்கள் என்று சொல்லுவீர் என்பதும் நமக்குத் தெரியும்)
பெண்கள் சரிசமமாக வாழவேண்டும் என்ற தார்மீக உரிமைய வேண்டித்தான் போராடுகிறார்கள் (போராட்டம் என்றால் வன்முறை மட்டும்தான் போராட்டம் என்றில்லை). அவர்கள் ஆண்களை ஏறி மிதிக்க வேண்டும் என்பதற்காகப் போராடவில்லை. சம உரிமையுடன் இருக்கிறார்கள் என்று நீர் சொல்ல வருவது, முந்தைய சிறீலங்கா ஜனாதிபதி இலங்கையில் இனப்பிரச்சினையே இல்லை என்று சொன்னதுபோல. மற்றவர்களை மூடர்கள் என்று எண்ணும் முட்டாள்கள்தான் இப்படி உளறுவார்கள்.
<b> . .</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 