05-30-2005, 05:06 PM
kirubans Wrote:குருவிகள், சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாவிட்டால் நீர் ஊரில் சிங்கள அரசுக்கும், ராணுவத்துக்கும் சேவை செய்து கொண்டு, எச்சிற் பருக்கைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்திருப்பீர்.
அடக்குமுறைக்கு தமிழ்சமூகம் ஆளானபடியால்தான், அது அடக்குமுறையாளனை எதிர்க்கிறது. சிங்கள அரசு போராட்டத்தை மலினப்படுத்த, தமிழரைப் பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றது.
இதுபோலத்தான் பெண்களும் ஆண் அடக்குமுறைக்கு எதிராகப் போராட. அந்தப் போராட்டங்களை கொச்சைப்படுத்த உம்மைப் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
உமக்குச் சுதந்திரத்தைப் பற்றி முதலில் யாராவது பாலபாடம் எடுக்க வேண்டும், அதன் பின்புதான் பெண்சுதந்திரம் என்றால் என்னவென்பது உமக்குப் புரியும்.
நீரும், உமக்கு ஆலவட்டம், கொடி பிடிப்போரும் இங்கு நிறையப்பேர் உள்ளனர். நீங்களெல்லாம் தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும்போது தூய்மையான உள்ளத்தோடு எழுதுவதில்லை என்றே நான் கருதுகிறேன். பெண்களை அடக்கியாள வேண்டும் என்ற கருத்தியலில் இறுக்கமாக உள்ள உங்களைப் போன்றோர் எப்படி இனவிடுதலையை ஆதரிக்கமுடியும்?
கிருபன்ஸ் ஆத்திரப்படாம கேட்க கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்...!
பெண்கள் அடக்கப்படுகிறார்களா...யாரால்... எப்போதெல்லாம் எங்கெங்க...எச்சந்தர்ப்பத்தில்...??! சரி அடக்கப்படுகிறார்கள் என்று ஆதாரத்துடன் சொன்னால் ஏன் அடக்குபவர்களுடன் புரிந்துணர்வு வழியில் அன்புவழியில் சுதந்திரம் பெறவில்லை...???!
கள்வனும் சொல்கிறான் தானும் தொழில் செய்யமுடியாமல் பொலீசால் அடக்கப்படுவதாக ஒடுக்கப்படுவதாக.. அவனுக்கும் விடுதலையின் தேவை இருக்கு...அப்ப அவனும் போராடலாமா... பெண்களைப் போலவே...!
சரி பெண்கள் அடக்கப்பட்டிருந்தால்...அடக்குமுறையால் அவர்கள் என்ன தீமைகளைச் சந்தித்தனர்...சுதந்திரத்தின் பின் என்ன நன்மைகளைச் சாதித்தனர்...சாதிப்பர்...!
ஒரு அடக்குமுறைக்கு எதிராக பெண்கள் போராடுவதில் நியாயம் இருந்தால் ஏன் பெண்கள் ஆயுதம் தூக்கி ஆண்களைக் கொன்றுகுவித்து தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்ட முயலாமல்....சும்மா திட்டிக் காலம் கழிக்க வேண்டும்...!
சுதந்திரம் விடுதலை என்பது போன்ற உயர் தொனிப்பொருள் உள்ள பதங்களை எனியும் எள்ளி நகையாடாதீர்கள்..! பெண்கள் தேடுவது சமூகத்தில் தாங்கள் அனுபவிக்கத்தவறிய நியாய உரிமைகளை அனுபவிக்கச் சந்தப்பமே அன்றி..விடுதலையோ சுதந்திரமோ அல்ல...! உரிமைகள் மனிதனுக்கு என்று சட்டப்பாதுகாப்புடன் எங்கும் வழக்கப்படே இருக்கு இன்று...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

