05-30-2005, 04:29 PM
Mathan Wrote:தற்போது யாழ் நிலவரம் எப்படி இருக்கின்றது? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்தற்போது யாழ் நிலமை மோசமான மோசமான நிலையில் இருக்கிறது. சண்டையணிகளின் அடாவடித்தனங்கள் விடுதலைப்புலிகளின் தலையீட்டினால் குறைந்தாலும் ஆங்காங்கே பிரச்சினைகள் நடைபெறுகின்றது. அதை விட குடிப்பழக்கம் மற்றும் புகைத்தலும் சிறியவர்களிடம் மிக வேகமாக பரவி வருவதுடன். தொழிநுட்ப வளர்ச்சியில் பல முன்னேற்றகரமான வளர்ச்சிகளும் ஏற்ப்பட்டுள்ளன. அத்தோடு இன்னோரு விடையம்... சும்மா வைப்பகங்களில் தொழில் பார்த்தவர்களும் கணக்கியல் கற்ப்பிக்க முனைகின்றனர்.... (தனியார் கல்வி நிலையங்களிலிலும் பிரத்தியோக வகுப்புக்களிலும்). ஈ.பி.டி.பியினர் தமது வழமையான நடவடிக்கையில் ஈடுபடுகின்ர். ஆனால் அவர்களின் முகாமுக்கு அருகாக அடிக்கடிச் சென்றால் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையேற்றப்படும். அதே போலவெ படையினரும் தமது பங்கிற்க்கு தமது வழமையான நடவடிக்கைகளை மேற்க்கொள்கின்றனர். யாழ் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை தமிழ் தேசியத்துக்காய் உழைக்கும் அவர்கள் தமது கலாச்சாரத்தினை மறந்து செயற்ப்படுகின்றனர் என்று எண்ணத்தோன்றுகின்றது. அவர்களது தமிழ்த் தேசியத்துக்கான போராட்டங்களால் அவர்கள் செய்யும் பல தவறான விடையங்கள் வெளிவருவதில்லை என்பது வருந்தத்தக்கது. மக்களை பொறுத்தவரை அமைதியாக கவும் அத்தோடு ஏதோ ஒரு பதட்ட மனநிலையிலுமு; இருக்கின்றனர். அவர்களின் ஏக்கம் எல்லாம் மீண்டும் போர் மூழுமா? என்பதே. அதை விட் சந்தோசமாக வெளிநாட்டு பணத்தில் வீடுகளை புதப்பித்துக்கொண்டு...(அதுக்குள் சிங்கப்புஸ்ரீர் டிசைன் அது இது என்று கனக்க) வாழகின்றனர். இளைஞர்கள் சிலருக்கு வெளிநாட்டிலிருந்து கிடைக்குமு; பணம் அங்கு மோட்டார்சைக்கிளாகவோ... ஹைஸ் வானாகவோ மாறுவதை அவதானிக்க முடிகிறது. அதை விட எமது இளைஞர்களோடு ஒட்டிப்பிறந்த விடையங்களும் நடைபெறுகின்றன (அதான்க பெண்களுக்கு பின்னால போவனுகளே! அது தான்) வேற ஏதும் தெரியோனும் என்றால் சொல்லிபோடுங்க..
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

