05-30-2005, 01:51 PM
aswini2005 Wrote:tamilini Wrote:பெண்களே.. உங்களுக்கு சுதந்திரம் வேணுமா. மனிசியாய் வாழ வேண்டுமா. ஒன்று செய்யுங்க.. ஆண்களை நம்பாதீங்க. அவன் அப்படியிருப்பான் இப்படியிருப்பான் என்று கண்மு}டித்தனமாய் அவன் அளவில்லாமல் அடுக்கிவிடுற கதைகளை நம்பிட்டு. பிறகு அவையின்ர சுயகுணம் தெரியவரத்தான் பிரச்சனையே ஆரம்பிக்குது. முடிஞ்ச வரை வாய் வார்த்தைகளை நம்பாதீங்க. ஆண்களை விட்டு ஒதுங்கியிருங்க. அது போதும் பெண்கள் சுதந்திரம் பெற்ற மாதிரித்தான். எத்தனை முற்போக்கு சிந்தனை உள்ளவராக தன்னைக்காட்டிக்கொண்டாலும் ஆணாதிக்க சிந்தனை அடிமனசில இல்லாத ஒரு ஆண் இருக்க முடியாது அது தான் உண்மை. அப்படி ஒரு சந்ததி உருவாக நீண்ட காலம் தேவை..:wink:
பெண்களின் சுதந்திரம் என்பது ஆணுடன் முட்டி மோதி முரண்பட்டு குத்து வெட்டுப்படுவது அல்ல தமிழினி. நீங்கள் இந்த நடைமுறையை கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.
ஆண்களை நம்பாதே என பெண்ணும் பெண்களை நம்பாதே என ஆணும் சொல்லிக்கொண்டிருப்பது ஆண்பெண் சமத்துவமான ஆரோக்கிய சமூகத்தை உருவாக்காது.
தமிழினி ஆணாதிக்கம் அடிமனசில் இல்லாத ஆண்கள் இல்லையென்று சொல்ல முடியாது. அதிகமாக பெண் சமத்துவத்தை நேசிக்கும் ஆண்கள் நிறையவே தற்போது இருக்கிறார்கள்.
நமது தேசிய விடுதலைப்போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்பெண் சமத்துவத்தை நோக்கிய தேசிய விடுதலைப்போராட்டத்தில் பெண்சமத்துவத்தை நிறுவிய பெருமை நமது தேசியத்தலைவருக்கும் அவருடன் கூடிய ஆண் பெண் தளபதிகள் போராளிகளையுமே சாரும்.
வாதம்புரியும் வல்லமையால் வாதம் செய்ய முடியுமே தவிர சமத்துவமான சமூகத்தை உருவாக்கத்தராது.
எனி பெண்கள் சும்மா சுதந்திரம் சம உரிமை என்று உச்சரிக்கும் போது தெளிவாக உச்சரியுங்க...சமூக நிலைச் சம உரிமை...ஆணுக்கு பெண் சமநிலையல்ல...என்பதை தெளிவாக வேறுபடுத்தி உச்சரிப்பது சிறந்தது...! ஆண் தலைமைத்துவச் சமூகம் என்பதே இன்றும் மனித சமூகத்தின் நிலை....அதில் மாற்றங்கள் கோருங்கள் வரவேற்கலாம்...ஆனால் ஆணுக்கு நீங்க சமனானவர்கள் என்ற வாதம் அர்த்தமற்றது...! அதற்குள் ஒழித்து வைத்திருக்கும் உண்மைகளையும் வெளியிடத்தவறாதீங்க...! காரணம்...அது புரியாம ஏமாறி சீரழியிற பெண்களின் எண்ணிக்கை உலகில் அதிகரிச்சுக் கொண்டே போகுது...உங்க நன்மைக்குதான் சொல்லுறம்,,,! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

