05-30-2005, 01:19 PM
tamilini Wrote:பெண்களே.. உங்களுக்கு சுதந்திரம் வேணுமா. மனிசியாய் வாழ வேண்டுமா. ஒன்று செய்யுங்க.. ஆண்களை நம்பாதீங்க. அவன் அப்படியிருப்பான் இப்படியிருப்பான் என்று கண்மு}டித்தனமாய் அவன் அளவில்லாமல் அடுக்கிவிடுற கதைகளை நம்பிட்டு. பிறகு அவையின்ர சுயகுணம் தெரியவரத்தான் பிரச்சனையே ஆரம்பிக்குது. முடிஞ்ச வரை வாய் வார்த்தைகளை நம்பாதீங்க. ஆண்களை விட்டு ஒதுங்கியிருங்க. அது போதும் பெண்கள் சுதந்திரம் பெற்ற மாதிரித்தான். எத்தனை முற்போக்கு சிந்தனை உள்ளவராக தன்னைக்காட்டிக்கொண்டாலும் ஆணாதிக்க சிந்தனை அடிமனசில இல்லாத ஒரு ஆண் இருக்க முடியாது அது தான் உண்மை. அப்படி ஒரு சந்ததி உருவாக நீண்ட காலம் தேவை..:wink:
ஆணாதிக்க சிந்தனை இயல்பிலேயே சூழலில் இருந்து உள்வாங்கபட்டிருகலாம் எனபதால் அந்த சிந்தனை அடிமனதில் இல்லாத ஒரு சந்ததி உருவாக நீண்ட காலம் எடுக்கலாம் என்பது உண்மை தான், ஆனால் நீங்கள் குறிப்பிடுவது போல் பெண்கள் ஆண்களை விட்டு விலகி இருப்பது பிரைச்சனைக்கு தீர்வு ஆகாது. ஒதுங்கும் போது கருத்து பரிமாற்றத்திற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போவதுடன் புரிந்துணர்வின்மை தான் அதிகரிக்கும். அப்படி ஆணும் பெண்ணும் தனி தீவுகளாக வாழ வேண்டிய அவசியம் தான் என்ன?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


:wink: