05-30-2005, 09:54 AM
Nitharsan Wrote:கிலோக்கணக்கில கொடுக்கல்ல தொன் கணக்கில கொடுத்தாச்சு பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்னவென்றால் கொடுக்க கொடுக்க வேண்டுவார்கள் பின் ஐயோ எங்களுக்கு சுகந்திரம் இல்லை என்பார்கள்.. அப்படியிருக்கையில் நான் என்ன செய்யலாம்
Quote:இல்லை என்பதற்காக போராட்டம் இல்லை.. இருப்பது போதாது என்று தான் போராட்டம் நடக்கிறது...
Quote:Quote:தோசம் காட்ட நாம் ஆண்ணிலை வாதிகளே பெண்ணிலை வாதிகளே இல்லை. யாதார்த்தம் எதுவோ அதையே நான் எழுதினேன்....
நிதர்சனின் நிதர்சனமான தெளிவின் புரிதல் நன்றாகவே புரிகிறது. கிலோவும் தொன்னும் உங்கள் வாய்களில் மட்டுமே நிரம்பியிருக்கிறது. அதுதான் ஆணவம் மேலோங்கி சமூகத்தின் சமபங்காளிகளின் உரிமைகளை மதிக்கத் தெரியவில்லை. சமத்துவம் சமானம் என்பது உங்கள் வரையில் அதிகாமாகிப்போயிருப்பது உங்கள் அறியாமையையே படம்போட்டு விளக்கியிருக்கிறது நிதர்சன்.
இந்தக்களத்தில்தான் யாரோ ஆண்நிலை என்பதே இல்லையென்றார். ஆனால் ஆண்நிலைவாதியாக ஒருவர் இன்னும் ஆணாதிக்க சிந்தனை செயல்களுடன் களத்தில் திணிப்பதை ஏற்றுக்கொள்வாரோ என்னவோ ?
தம்பி நிதர்சன் பலநீண்டகாலமாக பெண்ணின் சுயத்தை ஒளித்து வைத்திருந்த உங்கள் சுயநலங்கள் தற்போது பெண்களின் எழுச்சியில் சாயம்போகிறது. அதனைப்பொறுக்கமாட்டாமலேயே இத்தகைய அதிசுதந்திரம் கொடுத்துவிட்டதாய் கூப்பாடு போடும் இயலாமையே உங்கள் வெளிப்பாடு.
பெண்ணிலைவாதிகள் என்றால் அதன் பொருள் பெண்ணின் நிலையை அதாவது பெண்ணின் நிலமைகளை வெளிச்சொல்வோர். அது ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்.
உங்கள் ஆண்ணிலைவாதம் அடக்கியாழும் தத்துவத்தையே சொல்லி நிற்கிறது.
சினேகாவின் பெண்ணிலைவாதம் எங்களுக்கு வேண்டாம்.
உங்கள் மூளையின் வேர்வரையும் பரவிநிற்கும் ஆணாதிக்கச் சிந்தனை வெளிப்பாடு காளிதாசர் முதலான ஆதிகால ஆண்கலைஞர்களையும் அக்காலக்கதாநாயகர்களையும் படித்துப்பாருங்கள் ஆணாதிக்கம் அன்றுமுதல் இன்றுவரையும் எப்படியிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
பெண்கள் மத்தியில் தற்கொலைகளும் ää மனநோயாளர்களும் ää உளவியற்தாக்கங்களுக்கு உள்ளாகும் நிலையும் ää இன்னும் இதர தாக்கங்களுக்கும் உள்ளாகும் பெண்களின் நிலை தாயகம் முதல் புலம்பெயர் தேசங்கள் வரையும் தொடர்வதற்கான காரணங்களும் உங்கள் போன்ற மனநிலையாளர்களின் ஆதிக்க மனப்பாங்கும் ஆதிக்கச் சிந்தனைகளுமே.
:::: . ( - )::::

