05-29-2005, 07:01 AM
<b>கிழக்கில் தொடரும் கொலைகளால் போர் நிறுத்தத்துக்கு நெருக்குதல்</b>
இரு தரப்பினரும் விரும்பும் வரை கண்காணிப்புக் குழு இலங்கையில் இருக்கும் என்கிறார் தலைவர் ஹொக்லண்ட்
கிழக்கில் படுகொலைகள் அதிகரித்திருப்பதும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டிருக்கும் ஸ்தம்பித நிலையும் யுத்த நிறுத்தத்துக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்ற போதும் விடுதலைப் புலிகள் மீண்டும் போரை ஆரம்பிப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லையென இலங்கைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கிறது.
`புதிதாக போர் மூளுவதற்கான அறிகுறிகள் இல்லை. ஆனால், சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்படாதிருப்பது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்திருக்கின்றது' என்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பதில் தலைவர் ஹக்ரப் ஹொக்லண்ட் வெளிநாட்டு நிருபர்கள் சங்கத்துடன் வியாழனன்று இடம்பெற்ற சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் படுகொலைகளும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தில் காட்டுப்பகுதியில் இடம்பெறும் சம்பவங்களும் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுவினருடனான மோதல் என்று குறிப்பிட்டிருக்கும் ஹொக்லண்ட், அது உண்மையானதொரு பிரச்சினை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
`மட்டக்களப்பு தற்போது பிரச்சினைக்குரிய பகுதியாக உள்ளது. இது முழுப் பிராந்தியத்தையும் சீர்குலைக்க வைக்கிறது. ஆனால், முற்றுமுழுதாக பார்க்கையில் யுத்த நிறுத்தத்துக்கு ஆபத்தில்லை என்று நான் கருதவில்லை' என்றும் ஹொக்லண்ட் கூறியுள்ளார்.
கடல்கோளால் வட, கிழக்கு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் தாங்கள் முழுமையாக ஈடுபட்டிருப்பதாக அரசாங்கமும் புலிகளும் கூறுகின்றனர். அதேசமயம் யுத்த நிறுத்த மீறல் தொடர்பாக முறைப்பாடுகள், மீறல் சம்பவங்களும் குறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளிடம் இரு விமானங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுவது சமாதானத்துக்கு அச்சுறுத்தல் என்றும், ஏனெனில், யுத்த நிறுத்த உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்ட அதிகார சமநிலையை இது பாதிக்குமென்றும் ஹொக்லண்ட் தெரிவித்திருக்கிறார்.
போர் நிறுத்த உடன்படிக்கை சைச்சாத்திட்ட பின்னர் புலிகள் யுத்த விமானத்தை பெற்றிருந்தால் அது போர் நிறுத்த உடன்பாட்டு மீறலாகும். அதிகார சமநிலையை அது பாதிக்கும். இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் இதுவாகும். இந்தியாவும் இது தொடர்பாக அக்கறை கொண்டுள்ளது. புலிகளின் விமானம் எதனையும் கண்காணிப்புக்குழு பார்க்கவில்லை. ஆதலால் விமானங்கள் புலிகளிடம் இருக்கின்றதா? இல்லையா? என்பது பற்றிக் கூற முடியாது. ஆனால், புலிகளிடம் விமானம் இருப்பதாக இலங்கை அரசு நம்புகிறது. இந்தியா கூட இது தொடர்பாக வெகுவாக அக்கறை காட்டுகிறது என்றும் ஹொக்லண்ட் தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அரச சமாதான செயலக பணிப்பாளர் நாயகம் ஜயந்த தனபால ஆகியோரின் புகார்களையடுத்து புலிகளின் விமானத்தளத்திற்கு வீதி வழியாக செல்ல கண்காணிப்புக்குழு முயற்சித்தது. ஆனால், சோதனைச்சாவடிகளில் புலிகள் நிறுத்தி விட்டனர். அதனைத் தொடர்ந்து விமானத் தளத்திற்கு ஹெலிக்கொப்டரில் செல்ல ஹெலிகளை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் கூறியது. ஆனால், அதற்கு புலிகள் அனுமதி வழங்கமாட்டார்களென்று ஹொக்லண்ட் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் விமானத் தளம் மீது இலங்கை விமானப்படை குண்டு வீசினால் என்ன நடக்கும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது போர் மூண்டதாக ஆகிவிடும் என்று அவர் கூறியிருக்கிறார்.
யுத்த நிறுத்த மீறல்களை கண்காணிப்புக் குழுவினர் கட்டுப்படுத்த வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்ப்பது நீதியற்றது என்று கூறியுள்ள ஹொக்லண்ட், கண்காணிப்புக் குழுவிடம் பொலிஸ் அதிகாரம் இல்லை. பொலிஸார் போன்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியாது. சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் இந்த மாதிரியான வன் செயல்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்கவும் மட்டுமே எங்களால் முடியுமென்று அவர் தெரிவித்தார்.
அதிக அதிகாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேட்க்கப்பட்ட போது, தற்போது 60 கண்காணிப்பாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கும் கண்காணிப்புக்குழுவின் பணிகளுக்கும் வருடாந்தம் 2 மில்லியன் டொலர் (20 கோடி) செலவாகிறது. அதேவேளை, கிழக்கு மாவட்டங்களில் இடம் பெறும் கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்த முடியாமல் இலங்கைப் பொலிஸார் உள்ளனர். ஏனெனில் எவரும் முன்வந்து சாட்சி சொல்வதில்லை. இலங்கைப் பொலிஸாராலேயே முடியாமல் இருக்கிறது என்று ஹொக்லண்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மர்மமாகவிருக்கும் கருணா குழு, தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், கருணா குழுவுடன் கண்காணிப்புக் குழுவிற்கு எந்தவித தொடர்பும் இல்லையென்று கூறியிருக்கிறார்.
பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அரசாங்கம், புலிகள் ஆகிய இரு தரப்பினரில் ஒரு தரப்பினர் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டல், தாங்கள் வெளியேறி விடுவோம் என்று கூறியிருக்கும் ஹொக்லண்ட், ஆனால், இதுவரை இருதரப்பினரும் தாங்கள் இங்கு தங்கியிருப்பதையே விரும்புவதாக கூறியுள்ளார்.