05-27-2005, 07:09 PM
stalin Wrote:விவகாரத்து செய்வது சரியா பிழையா என்பது ஒருபுறமிருக்க.........புலத்தில் விவாகரத்து ஏன் அதிகம் ஏற்படுகிறது............தாயகத்தில் திருமண பந்தம் நிலைத்து நிற்கவேண்டுமென்ற சமூகரீதியான பாதுகாப்பு இருந்தது. அங்கு திருமணபந்தத்தில் பிரச்சனைவரும்போது சமூகம் தலையிட்டு எப்படியும் அதை காப்பாற்றியை தீருகிறது.இந்த சமூகரீதியான பாதுகாப்பை ஆண்கள் காலம் காலமாக தங்களுக்கு சாதமாக்கியே வந்திருக்கிறார்கள். ஆனால் அதிகம் பேர் மனதால் விவாகரத்து பெற்றவர்களாக சட்டரீதியாக பெறாமல் அங்கே வாழ்ந்தே தீருகிறார்கள்.
மறு புறத்தில் புலத்தில் திருமணஅமைப்பை பாதுகாக்ககூடிய சமூகம் ஸ்தாபான தன்மடையாமல் உதிரிகளாக இருப்பதனால் அந்த திருமண பந்தத்தை பாதுகாக்க இயலாமல் போகிறது. அதனால் பாதிக்கப்படும் ஆணோ பெண்ணோ மேற்குலகம் வழங்கும் சாதகமான சட்ட பாதுகாப்பை நாடுவது தவிர்க்க யிலாதுகிறது.இவர்களுக்கு வேறு வழியில்லை என்பது தான் யதார்த்தம். இந்த நிலையில் ஆணாதிக்க வாதிகள் தங்களுக்கு சமூக பாதுகாப்பு அற்றதன்மையை உணரும் போது குய்யோ முறையோ என்று கூக்குரல் இடுகிறார்கள்.இயலாமையால் தங்களுக்கு கேடயமாக பண்பாடு கலாச்சாரத்தை தூக்கிறார்கள். இந்த So call கல்வி கற்றவர்கள் தங்களின் விதயா கர்வத்தினால் தங்களுக்கு ஏற்றமாதிரி அறிவியல்ரீதியான வியாக்கியனங்களை வைப்பது போல வைக்கிறார்கள் ----------------------------------------------------------------------------------ஸ்ராலின்
ஒரு கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்வீங்க... திருமணம் என்பது மனித சமூகத்துக்கான விசேடித்த சமூகவியல் சடங்கு...! அது எங்க நடந்தாலும் சரி... அதில் பாலியல் தேவைக்கு மேலதிகமாக இரண்டு உள்ளங்களை நிரந்தரமாக இணைத்து மனித சமூகத்துக்கு அவசிய அடிப்படையான பலமான குடும்பக் கட்டமைப்பை உருவாக்குவதே அதன் முதன்மை நோக்கமாக இருக்கமுடியும்..! வேறேதும் அங்கு காரணமாய் இருக்க முடியாது,,,! கூர்ப்பின் வழியில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மனிதப் பகுத்தறிவின் விருத்திக்கு அடையாளமாக இன்றும் காட்டப்படுகின்றன... விலங்கு நடத்தையில் இருந்து அது மனிதனை மனிதனுக்கே உரிய சிறப்பான நடத்தைப் பாதைக்கு இட்டுவர உதவியளித்திருக்கிறது...! அந்த வகையினதே திருமணமும்...!
இதில் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்பது அவசியமில்லாமல் புகுத்தப்பட்ட சொற்பதங்கள்...! எந்தச் உயிரினச் சமூகத்திலும் சண்டை சச்சரவு மேலாண்மை போட்டி இல்லாமல் இல்லை...அத்தனையும் அதைச் சகித்துத்தான் உயிர்வாழ்கின்றன....! மனிதனும் அந்த நிலையில் இருந்துதான் பகுத்தறிவு மூலம் மனிதாபிமானத்தை வளர்த்து சக மனிதனையும் தன்னைப் போல் உணரும் நிலைக்கு வந்திருக்கின்றான்...!
திருமணம் என்பது கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் ஒருவராகக் காணும் நிலையே...அதற்காக அவரவர் தேவைகளை ஆசைகளை நிராகரிக்கச் சொல்லவில்லை... அந்த ஒத்த நிலை என்பது ஒருவருக்கு ஒருவர் எல்லாவிதத்திலும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்குதலையே குறிக்கிறது... அப்படி ஒரு நிலையை ஆணும் பெண்ணும் வழங்கின் ஆதிக்கம் என்ற பதப்பிரயோகத்துக்கு அங்கு இடவர வாய்ப்பில்லை...! ஆண் ஆதிக்கம் செய்கின்றான் என்றால்..அங்கு அவனுக்கு பெண்ணின் ஒத்துழைப்பு இல்லை என்பதாகவும் பெண் ஆதிக்கம் செய்கிறாள் என்றாள் அங்கு அவளுக்கு ஆணின் ஒத்துழைப்பு இல்லை என்பதாகவுமே கருத வேண்டும்..! இது எல்லாச் சமூகத்துக்கும் பொருந்தும்..! இதற்குள் சமூகங்களுக்கே விசேடமான கலாசார பண்பாட்டு விழுமிய அடையாளங்களைப் புகுத்தி கொச்சைப்படுத்தல் அவசியமற்றது...உண்மையைப் புரிந்துகொள்ள முடியாமையின் விளைவே...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

