05-27-2005, 04:17 PM
tamilini Wrote:ஆமாங்க.. இப்படி கருத்து முரண்பாடு.. அது இது என்று வாழுறதை விட.. தனியாவே வாழ்ந்திடலாம்.. யார் கண்டா மிருகங்களுக்குள்ளும் நீதிபதிகள் இருக்கலாம் நீதி வழங்கலாம். பிரிந்து வாழலாம்.
அதை விட முக்கியமான விடயம். ஒருவர் ஆரம்பத்தில் இருப்பது போல கடைசி வரை இருப்பதில்லை. உதாரணத்திற்கு இப்ப ஒருவர் காதலிக்கும் போது.. தேன் உருக அன்பாய் இருப்பார்கள்.. பிறகு.. தான் சுயரு}பத்தைக்காட்டுவார்கள். எதிர்பார்ப்புகள் அங்க தவிடுபொடியாகுது அன்பு.. அருகிபோகுது. அப்படியாரம்பிக்கிற கருத்துமுரண்பாடு. தொடரவேண்டுமா.. காலத்திற்கும். வெறு;ப்புடன் வெறுப்பை வளர்;த்துக்கொண்டு வாழவேண்டுமா. பேசாமல் பிரிஞ்சுபோய்விட்டால். எந்த பிரச்சனையும் இல்லையே.. அதற்காக இன்னொருவரைத்தேடனும்; என்றல்ல.. தனியாவே வாழந்திடலாம். :wink: :mrgreen:
இது விதியென்றுவிட்டு.. நம்ம நின்மதியையும் கொடுத்து மற்றவங்க நின்மதியையும் கெடுத்து வாழுறதை விட்டிட்டு. வெட்டிவிட்டால் கடைசியில ஒருவரது வாழ்க்கை என்றாலும் சந்தோசமாய் அமையும். வாழப்போறது. கனகாலம் அல்ல வாழுற காலத்தை சந்தோசமாய் வாழுறது தானே.. :wink:
உங்களுக்குள் முதலில் எழுந்த எத்தனை கருத்துக்களோடு பின்னாடி அதே நோக்கம் கருதி எழுந்த கருத்துக்களுடன் முரண்பட்டிருப்பீர்கள்..அதாவது நீங்க முதலில் சரியென்று நினைத்து பின்னர் தவறென்று உணர்ந்தவை கண்டவை...! அதற்காக உங்களை நீங்களே பிரிய முடியுமாங்க...! உங்க மனசையே நீங்க தள்ளி வைச்சு சந்தோசம் அனுபவிப்பீங்களா...??! முடியாதில்லா அப்படிதாங்க இருப்பாங்க உண்மையான கணவன் மனைவி... இல்லை காதலன் காதலி...! அவர்களுக்கு விவாகரத்தோ இல்லை விட்டிட்டு வேற ஒன்று தேடுவதோ வாழ்வின் இலச்சியமாக இருக்காது... தங்களுக்கிடையேயான புரிந்துணர்வை அதிகரித்து சந்தோசமாக வாழ்வதே நோக்கமாக இருக்கும்...!
உலகில் எத்தனை பேர் விவாகரத்து வாங்கிறாங்க...சிறிய தொகையினர்தான்... மிச்சம் மீதிப் பேர் எப்படிங்க வாழ்றாங்க...! அதுபோக வாங்கப்படுகிற விவாகரத்துக்களுக்கு சுயநலமிகுதி தான் இப்ப பெரிதும் காரணம்...என்னால தனிய வாழ முடியும் நீ என்ன கேட்கிறது...இதுதான் முக்கிய காரணம்... மற்றவர்களைப் புரிந்து கொள்ளவே அவகாசம் கொடுக்காத மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்..இவர்கள் மனிதாபிமானச் சிந்தனை...சமூகச் சிந்தனையற்ற...ஒருவகை நோயாளிகள்...என்றுதான் கருத வேண்டும்...! அவர்களை அப்படி கருதுவதால் எந்தத் தவறும் இல்லை...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

